என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கோடைகால வெயிலை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மணவெளி தொகுதி அ.தி.மு.க. சார்பில் தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    கோடைகால வெயிலை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மணவெளி தொகுதி அ.தி.மு.க. சார்பில் தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநில கழக துணை செயலாளர் குமுதன் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் அன்பானந்தன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, தொகுதி அவைத்தலைவர் மூர்த்தி, பொருப்பாளர்கள் ஜானகிராமன், சிவராம ராஜா, தீனதயாளன், தர்மன், முனுசாமி, காந்தாரி, குணாலன், சேது, காத்தவ ராயன், சசிகுமார், தாஸ், செல்வமணி, சத்தியசீலன்,

    சங்கர், விஜயன், பன்னீர் செல்வம், மேகநாதன், பிரஷ்நேவ், ராமு, மதன், சோமு, வேல்முருகன், பெருமாள் மற்றும் மாநில, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து அறநிலையத்துறை மூலம் பணம் பெற்று தருவது சம்பந்தமாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்து கோரிக்கை வைத்தனர்.
    • சில மாதங்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினையை உடனடியாக சரி செய்து கொடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுைவ உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 2 பகுதியில் உள்ள வேதவல்லி மாரியம்மன் கோவில் கட்டுமான பணிக்காக இந்து அறநிலையத்துறை மூலம் பணம் பெற்று தருவது சம்பந்தமாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்து கோரிக்கை வைத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. அறநிலையத் துறை ஆணையரிடம் அழைத்துச் சென்று மானியத்தொகை கிடைக்க பரிந்துரை செய்கிறேன் என்று உறுதியளித்தார்.

    மேலும் அங்கு சில மாதங்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினையை உடனடியாக சரி செய்து கொடுத்தார். குறைகளைக் கூறியவுடன் உடனுக்குடன் தீர்வு காணும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து நன்றி கூறினர். இதில் கிளை செயலாளர்கள் சேகர் மற்றும் ராகேஷ், உடன் இருந்தனர்.

    • காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
    • புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 2006-ம் ஆண்டு துறைமுகம் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    காரைக்கால் துறைமுகத்திற்காக 600 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி தந்தது. துறைமுகத்தின் வருவாயில் ரூ.100-க்கு ரூ.2.6 சதவீதம் அரசுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

    மார்க் என்ற தனியார் நிறுவனம் புதுவை அரசுடன் ஒப்பந்தம் செய்து துறைமுகத்தை 2009-ல் தொடங்கியது. கடந்த 14 ஆண்டாக மார்க் நிறுவனம் துறைமுகத்தை நடத்தி வந்தது.

    காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    தனியாருக்கு துறைமுகத்தை வழங்கும்போதே அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் ஈவுத்தொகையை கூடுதலாக பெற வேண்டும் என்றும், அப்பகுதி இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன.

    இந்த விவகாரம் அவ்வப்போது சட்டசபையிலும் எதிரொலித்து வந்தது. இதனிடையே காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படு வதால் அப்பகுதியில் மக்கள் காற்று மாசுபாடால் பாதிக்கப்படுவதாக புகாரும் எழுந்தது.

    மேலும் காரைக்கால் துறைமுகத்தை இறக்குமதி, ஏற்றுமதியை கண்காணிக்க சரியான அமைப்புகள் இல்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்தது. காரைக் கால் துறைமுகம் கடத்தல் கேந்திரமாக மாறிவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதனிடையே காரைக்கால் மார்க் துறைமுக நிறுவனம் தொழில் நஷ்டம் காரணமாக நலிவடைந்து விட்டதாக அறிவித்தது. இதனால் துறைமுகத்தை விற்பனை செய்ய தொழில் தாவா தீர்ப்பாயத்தை அணுகியது.

    இந்த தீர்ப்பாயம் மார்க் நிறுவனம் வங்கிகளில் பெற்ற கடனை ஈடுசெய்யும் வகையில் துறைமுகத்தை தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனம் நடத்துவதற்காக முன்வந்துள்ளது.

    இதற்கான ஒப்பந்தம் விரைவில் போடப்பட உள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

    புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் பெரும் பகுதியை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு ஒரு சதவீத நிதி வழங்க வேண்டும் என்பது உட்பட முக்கிய விதிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இந்த விதிமுறைகளோடு புதிய ஒப்பந்தந்தை நிறைவேற்ற தலைமை செயலருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    புதுவை அருகே கொம்பாக்கம் வட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2 நிபுண் பாரத்தினம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    கொம்பாக்கம் வட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2 நிபுண் பாரத்தினம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

    பள்ளி துணை ஆய்வாளர் குமார் வழிகாட்டுதலின்படி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ஆசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நிபுண் ஒருங்கிணைபாளர் எலொனா ராணி பங்கேற்று சிறப்புரையாற்றினார் .

    ஓவிய ஆசிரியர் முனுசாமி மாணவர் திறன் சார்ந்த ஓவியங்களை பெற்றோரைக் கொண்டு வரையச் செய்தார். மாணவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர்.

    ஆசிரியர் அர்ச்சுணன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியை வனிதா மணி, வெங்கட்பிரியா, சுகந்தா, ருக்மணி செய்திருந்தனர்.

    • புதுவையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தொற்று அதிகரித்து வருவதால் பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி 827 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் புதுவையில் 55 நபர்களுக்கும், காரைக்காலில் 23 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களும், மாகியில் 2 நபர்களும் என 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை மொத்தம் 271 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொற்று அதிகரித்து வருவதால் பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய்துறை செயலரும், கலெக்டருமான வல்லவன் வெளியிட்டுள்ளார்.

    புதுவை சட்டமன்றத்திற்குள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அனைத்து அமைச்சர்கள் அலுவலகத்திலும், முதல்-அமைச்சர் அலுவலகத்திலும் ஒட்டப்பட்டுள்ளது.

    நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பார்க்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும்.

    சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  புதுவையை பொருத்தவரை மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தளங்கள், வர்த்தக பகுதி போன்ற இடங்களில் மக்கள் முக கவசம் இல்லாமல் சுற்றி வருகின்றனர். அவர்களும் தாமாக முன்வந்து முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • நவீன தொழில்நுட்பங்கள் பற்றி தேசிய அளவிலான கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெறுகிறது.
    • செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் துறையின் இலவச சேவைகள் குறித்தும் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கூடங்கள் பற்றியும் பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் பற்றிய துறையின் சார்பாக நவீன தொழில்நுட்பங்கள் பற்றி தேசிய அளவிலான கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெறுகிறது.

    இதற்கான தொடக்க விழா 7-ந்தேதி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு புதுவை அரசின் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

    கருத்தரங்கை விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதிர் தொடங்கி வைத்தார். ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் இயங்கும் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுகள் துறையின் இலவச சேவைகள் குறித்தும் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கூடங்கள் பற்றியும் பேசினார். விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் ஜெயகர் கருத்தரங்கை பற்றிய நினைவு நூலை வெளியீட்டு பேசினார்.

    கருத்தரங்கில் இந்தியா விலிருந்து 400-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கலந்து கொண்டனர். 88 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    மேலும் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா ஆன்லைன் மூலமாக சிறப்புரை ஆற்றினார்.முன்னதாக இத்துறையின் தலைவர் பேராசிரியர் ராஜன் அவர்கள் வரவேற்று பேசினார். டாக்டர் ராஜலட்சுமி நன்றியுரை கூறினார்

    விழாவிற்கான ஏற்பாடு களை இணைப்பதிவாளர் பெருமாள் செய்திருந்தார்.

    • தேசிய அளவில் மும்பையில் நடைபெறும் கூடோ போட்டிக்கான வீரர்கள் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது.
    • கூடோ பயிற்சியாளர்கள் செல்வம் செந்தில், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கூடோ தற்காப்பு கலை சங்கத்தின் சார்பில் கூடோ பயிற்சி முகாம் மற்றும் தேசிய அளவில் மும்பையில் நடைபெறும் கூேடா போட்டிக்கான வீரர்கள் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது.

    இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்பு சிறப்பாக பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் பாகூர் பாலச்சந்தர், அசோக், செந்தில் வேல் ஆகியோருக்கு தேசிய கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களை மாநில கூடோ சங்கத் தலைவர் வளவன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு சங்க செயலாளர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் கூடோ பயிற்சியாளர்கள் செல்வம் செந்தில், ஆறுமுகம் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் ராஜ் நன்றி கூறினார்.

    • மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.
    • பாண்டி மெரினாவில் ஒட்டகம், குதிரை மீது ஏறி சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் புனித வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    இதன்காரணமாக புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரப்பி வழிந்தன.

    புதுவையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் விடுதி அறைக்குள் முடங்கினர். சிலர் தாவரவியல் பூங்கா , பாரதி பூங்காவில் தஞ்சம் அடைந்தனர்.

    புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு, பாண்டி மெரினா பீச்சில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர்.

    இதேபோல் மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.

    பாண்டி மெரினாவில் ஒட்டகம், குதிரை மீது ஏறி சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

    வெளிமாநில சுற்றுலா பயணிகள் வண்ண, வண்ண உடைகள் அணிந்தபடி ஒயிட்டவுன் பகுதிகளில் உள்ள தெருக்களில் வலம் வந்தனர். அங்குள்ள பாரம்பரிய கட்டிடங்கள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    தொடர் விடுமுறை காரணமாக நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    படகு குழாமில் ஏராளமானோர் குவிந்ததால் வெகு நேரமாக காத்திருந்து படகு சவாரி செய்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு ரூ.22 லட்சம் வருவாய் கிடைத்தது.

    • சுகாதாரத்துறையும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
    • கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் வரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிதத்து வருகிறது.

    இதனையடுத்து சுகாதாரத்துறையும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை எடுத்துள்ளது. புதுவை மாநிலத்தில் 827 கொரோனா பரிசோ தனைகள் செய்யப்பட்டன.

    இதில் புதுவையில் 55 பேர், காரைக்காலில் 23 பேர், ஏனாமில் 2 பேர், மாகியில் 2 பேர் என மொத்தம் 82 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் புதுவையில் 7 பேர், காரைக்காலில் 2 பேர் என மொத்தம் 9 பேர் மருத்துவமனையிலும், 262 பேர் வீட்டு தனிமையிலும் என மொத்தம் 271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இன்று 15 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. தற்போது ஜிப்மரில் ஒருவரும், கோரிமேடு மார்பக மருத்துவமனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 6 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

    இத்தகவல்களை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.புதுவையில் கடந்த சில தினங்களாக கொரோனா படிப்படியா அதிகரித்து வருகிறது. இது புதுவை மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் வரவில்லை. முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்று பொது இடங்களில் திரிந்த பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியவில்லை.

    ஒரு சதவீதத்துக்கும் முறை வானவர்கள் மட்டுமே முகக் கவசம் அணிந்திருந்தனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளும் முகக் கவசம் அணியாமலேயே புதுவையை வலம் வந்தனர்.

    • சென்னையில் இருந்து 40 சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அழைத்து செல்லப்பட்டு அன்றைய தினமே மீண்டும் சென்னை திரும்பலாம்.
    • ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும், பல விதமான உணவு வகைகளை சாப்பிட்டுக்கொண்டே புதுவையை சுற்றி பார்க்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் விதவிதமான மதுக்கடைகள், மது அருந்தும் வசதியுடன் பார்கள் உள்ளன.

    வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை புதுவை கடற்கரைகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. சென்னையில் இருந்து அதிகளவில் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    குறிப்பாக மது பிரியர்கள் விதவிதமான பீர்களை வாங்கி குடித்து பொழுதை கழிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அடுத்தக்கட்டமாக உணவு சாப்பிடும் ரெஸ்ட்டாரண்டுகள் பாரம்பரிய வீடுகள் அனைத்திலும் சுற்றுலா என்ற பெயரில் ரெஸ்டோபார்கள் திறக்க அரசு தாராளமாக அனுமதி அளித்து வருகிறது.

    அதற்கு மேல் இப்போது மது பிரியர்களுக்காக சென்னையில் இருந்து புதுவைக்கு தனியாக வருகிற 22-ந் தேதி முதல் பீர் பஸ் இயக்கப்பட உள்ளது. இதனை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

    ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும், பல விதமான உணவு வகைகளை சாப்பிட்டுக்கொண்டே புதுவையை சுற்றி பார்த்து விட்டு அன்றைய தினமே சென்னைக்கு திரும்பி விடலாம். இதற்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து நிறுவன ஏற்பாட்டாளர்கள் கூறியிருப்பதாவது:-

    பீர் பஸ் என்று அழைப்பதால் பஸ்சில் குடிப்பது என்று யாரும் நினைத்து கொள்ள வேண்டாம். பஸ்சில் பீர் குடிக்க அரசு அனுமதி இல்லை.

    எனவே புதுவையில் அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பஸ் நிறுத்தப்படும். அந்த இடத்தில் பீர் அருந்த அனுமதிக்கப்படும்.

    சென்னையில் இருந்து 40 சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அழைத்து செல்லப்பட்டு அன்றைய தினமே மீண்டும் சென்னை திரும்பலாம். அன்றாட வேலைகளில் மூழ்கி கிடப்பவர்கள், வார விடுமுறையில் ரிலாக்சாக உற்சாகப்படுத்தி புதுப்பித்து கொள்ள இந்த சுற்றுலா உதவும் என்றனர்.

    • அ.தி.மு.க. உறுப்பினர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் உறுப்பினர் உரிமைச்சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற சட்ட திட்ட விதிமுறை உள்ளது.
    • அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு புதுவை மாநில மக்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பது.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. உறுப்பினர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் உறுப்பினர் உரிமைச்சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற சட்ட திட்ட விதிமுறை உள்ளது.

    இதன்படி அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர் சேர்க்க விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும். உறுப்பினர் பதிவு புதுப் பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம்   முத்தியால்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர், வையாபுரி மணி கண்டன் தலைமை தாங்கி புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நிர்வாகிகளிடம் வழங்கினார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு புதுவை மாநில மக்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பது. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்குகள் போடும் தமிழக தி.மு.க. அரசை கண்டிப்பது 4 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து ஜெயலலிதா அரசை புதுவை மாநிலத்தில் கொண்டுவர அயராது பாடுபடுவது.

    புதுவை மாநிலம் போதையின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது. இளைஞர்கள், இளம்பெண்கள் மது அருந்தி விட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபடும் கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக புதுவை வாலிபர் போதை கும்பலின் அட்டூழியத்தால் மரத்தில் வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை கும்பலின் அட்டகாசம் எல்லை மீறுவது புதுவை மாநில மக்களின் கலாச்சாரத்திற்கும், நல்வாழ்வுக்கும் உகந்தது அல்ல. இதுபோன்ற செயல்களை அரசு முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். உயிர்பலிகளை பற்றி கவலைப்படாமல், மேலும் ரெஸ்டோ பார்கள் வரும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் விக்னேஷ் காசிநாதன் , மணி, கோபால், பழனிசாமி, கஜேந்திரன், மோகன், செல்வம், விஸ்வநாதன், அந்துவான், குப்பன், மண்ணாங்கட்டி, தனலட்சுமி, ராதா, ஹரி கிருஷ்ணன், செல்வம், கன்னியப்பன், ராமமூர்த்தி, ஜெயபால், நாராயணசாமி, நாதன் முனியாண்டி, கார்த்திக், விநாயகமூர்த்தி, ஜான், பஞ்சவர்ணம், பச்சையப்பன், வினோத் குமார், பிரபா, எத்திராஜ், முரளிதரன், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவத்தை அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணி கண்டன் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    • ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளியன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி, புதுவையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடந்தது.
    • புதுவை ரெயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி தேவாலயம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளியன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி, புதுவையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடந்தது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த 3-வது நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

     ஈஸ்டர் பண்டிகையையொட்டி புதுவை ரெயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி தேவாலயம், நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம் மற்றும் காரைக்கால் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்பட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிராத்தனை நடைபெற்றது.

    தேவாலயங்களில் நடந்த திருப்பலி மற்றும் ஆராதனைகளில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ×