என் மலர்
புதுச்சேரி
- தமிழக டெல்டா விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பினை வாபஸ் பெற்ற மத்திய அரசை அ.தி.மு.க. வரவேற்கிறது.
- வருவாய்க்காக இரவில் கடை வைத்துக் கொள்ளலாம் என அரசு அனுமதித்துள்ளது மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை சீரழிந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக டெல்டா விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பினை வாபஸ் பெற்ற மத்திய அரசை அ.தி.மு.க. வரவேற்கிறது. இது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வந்த வேளாண் பாதுகாப்பு சட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
புதுவை மாநிலம் முழுக்க இரவு நேர மதுபான பார்கள் மற்றும் ரெஸ்டோ பார்கள், கடைகள் திறந்திருப்பதால் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு உள்ளது. இரவு 2 மணி வரை ரெஸ்டோ பார்கள் திறந்திருப்பதால் இளைஞர், இளம்பெண்கள் மது, கஞ்சா போதைக்கு சர்வசாதாரணமாக அடிமையாகி உள்ளனர்.
இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால் மாநில மக்களை பாதுகாக்க முடியாத சூழல் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. வருவாய்க்காக இரவில் கடை வைத்துக் கொள்ளலாம் என அரசு அனுமதித்துள்ளது மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை சீரழிந்துள்ளது.
அண்டை மாநிலத்தில் இருந்து விதவிதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய கேந்திரமாக புதுவை மாறியுள்ளது. அரைகுறை ஆடையுடன் பெண்கள் நகரப்பகுதிகளில் சுற்றுகின்றனர். இதற்கு எல்லாம் அரசு அனுமதி கொடுப்பது என்பது நியாயமற்ற செயல்.
பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுபோன்ற செயல்களையும் அனுமதிக்கலாமா? இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். புதுவை கலாச்சார சீரழிவு மையமாக மாறுவதை தடுக்க நள்ளிரவில் ரெஸ்டோபார் திறப்பதை அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அ.தி.மு.க. மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
- பாகூர் தொகுதி வாய்க்கால் ஓடை கிராமத்தில் தனியார் கொசுவத்தி கம்பெனி இயங்கி வருகிறது.
- இந்த ரசாயன டேங்க் நிலத்துக்கு அடியில் புதைத்தால் அப்பகுதி கிராமத்திற்கு தீங்கு விளைவிக்கும் மேலும் நிலத்தடி நீர் பாதிக்கும் என அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் திரண்ட னர்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி வாய்க்கால் ஓடை கிராமத்தில் தனியார் கொசுவத்தி கம்பெனி இயங்கி வருகிறது.
இந்த கம்பெனியில் கொசுவத்தி, கொசு ஒழிப்பதற்கான ராசாயணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பெனிக்கு என புதியதாக ராட்ச கெமிக்கல் டேங்க் ஒன்று கண்டெய்னர் லாரியில் வந்தது.
இந்த ரசாயன டேங்க் நிலத்துக்கு அடியில் புதைத்தால் அப்பகுதி கிராமத்திற்கு தீங்கு விளைவிக்கும் மேலும் நிலத்தடி நீர் பாதிக்கும் என அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் திரண்ட னர்.
பின்னர் லாரியை சிறை பிடித்தனர். ஏற்கனவே இந்த தொழிற்சாலையில் 3-க்கும் மேற்பட்ட பாய்லர்கள் இருந்து வருவதாகவும் இந்த டேங்க் வைத்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்று சாட்டினர்.
தகவல் அறிந்தவுடன் கிருமாம்பாக்கம் போலீசார் அப்பகுதி மக்களை சமாதானம் செய்து வைத்து அனுப்பினர். ஆனால் டேங்கரை கம்பெனிக்குள் எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த வாகனம் கடலூர்-புதுவை ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கம்பெனிக்குள் ராட்சச டேங்க் வந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடு வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று 2-வது நாளாக அப்பகுதி மக்கள் பாதைகைகளுடன் சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புதுவைக்கு வந்திருந்தவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இளங்கோ, ஆறுமுகம் தலைமையில் தமிழ் கலாச்சார பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
புதுச்சேரி:
மலேசியா நாட்டில் உள்ள மலேசிய தமிழ் மணி மன்ற நிர்வாகிகள் அதன் தேசிய தலைவர் சு.வை.லிங்கம், செயலாளர் கோகிலா வாணி, மகளிர் அணி தலைவி ஜீவரேகா, இளங்கோ, ஆறுமுகம் தலைமையில் தமிழ் கலாச்சார பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
முதற்கட்ட பயணமாக புதுவைக்கு வந்திருந்தவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் வி.முத்து, செயலாளர் சீனு. மோகன்தாஸ், பொருளாளர் திருநாவுக்கரசு உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்களின் கிரிக்கெட் போட்டிகள் வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
- ஆட்டநாயகன் விருது அபைஸ் கிரிக்கெட் அணியின் ரித்திக்குமரன் பெற்றார்.
புதுச்சேரி:
புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கிரிக்கெட் போட்டிகள் வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டி பரிசளிப்பு விழாவிற்கு அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் என்ற தட்சிணா மூர்த்தி. பாகூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை வெரோனஸ் விஜயலட்சுமி வீராம்பட்டினத்தில் எம்.ஆர்.பி. கெஸ்ட் ஹவுஸின் உரிமையாளர் ராஜாராம் ஓய்வு பெற்ற ஆய்வாளர் மனோகர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
முதல் இடத்தை பிடித்த வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் அகாடமி அணிக்கு தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி முதல் பரிசு கோப்பையை வழங்கி வீரர்களுக்கு பதக்கத்தையும் அணிவித்தார்.
ஆட்டநாயகன் விருது அபைஸ் கிரிக்கெட் அணியின் ரித்திக்குமரன் பெற்றார். மேலும் அந்த அணியின் ரோகன் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார். ஜோதி மெமோரியல் கிரிக்கெட் அகாடமி அணியின் யுக்காஷ் சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியை திறம்பட நடத்திய புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேசன் சங்க நிர்வாகிகளையும் பாஸ்கர் எம்.எல்.ஏ வாழ்த்தி பாராட்டினார். கிரிக்கெட் போட்டி ஏற்பாடுகளை புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் நடத்தி முடித்தனர்.
- புதுவை தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக இருந்தது.
- அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்ச்சியாக சந்தித்து வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக இருந்தது.
அங்குள்ள பூங்கா நீர்வீழ்ச்சி செயலற்று தூய்மையற்று காணப்பட்டது. எனவே சிலையை தொடர்ந்து பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி தி.மு.க. எம்.ஏல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்ச்சியாக சந்தித்து வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையில் தற்போது எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் சிலை மற்றும் பூங்கா மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பொதுப்பணித்துறை சாலை பிரிவு அதிகாரி ராமனிடம் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். அப்போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் காளியப்பன், ராகேஷ் உடனிருந்தார்.
- புதுவையில் 227 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 12, காரைக்காலில் ஒருவர் என 13 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுச்சேரி:
புதுவையில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
புதுவையில் 227 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 7, காரைக்காலில் 4 பேர் என மொத்தம் 11 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் புதுவையில் 4, காரைக்காலில் 2, ஏனாமில் ஒருவர் என 7 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 87, காரைக்காலில் 95, ஏனாமில் 13, மாகிவில் 2 பேர் என மொத்தம் 197 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 12, காரைக்காலில் ஒருவர் என 13 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவையில் இதுவரை ஆயிரத்து 977 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உட்பட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் குயவர்பாளையம் லெனின்வீதியில் உள்ள ஓம்சக்திசேகர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- வேல்முருகன்,குப்புசாமி உடையார், கண்ணையன், முனியன், கணேசன், அருள், சேகர், ஜெய்,தேவா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் குயவர்பாளையம் லெனின்வீதியில் உள்ள ஓம்சக்திசேகர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கி பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, வெள்ளரி, இளநீர் உள்ளிட்ட தாகம் தணிக்கும் இயற்கை உணவுகளை வழங்கி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மாசிலா குப்புசாமி, மகேஸ்வரி, விஜயலட்சுமி, கோவிந்தம்மாள், செல்வராஜ், சதாசிவம், சங்கர் உடையார், முருகன், வெரோனிகா, லட்சுமணன்,புகழ் பாரி,தம்பா, இருசப்பன், சேகர்,ஆர்.வி.ஆர். வெங்கடேசன், அப்பாவு, நாக.லோகநாதன், சுப்பிரமணியன்,
அய்யப்பன்,சுந்தர மூர்த்தி, பாலசுப்ரமணியன், எம் .ஆர். கே கலியபெருமாள், இளம்வ ழுதி, நாகராஜ்,திருபுவனை கலியபெருமாள், குணசேகர், ஞானப் பூங்கோதை, கணபதி, மாயகிருஷ்ணன்,தங்கராசு,
மோகன்தாஸ், சித்தா கணேசன், இளவரசு, வேல்முருகன்,குப்புசாமி உடையார், கண்ணையன், முனியன், கணேசன், அருள், சேகர், ஜெய்,தேவா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநில செயலாளர் அன்பழகன் அனுமதியோடு, அ.தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கூட்டத்திற்கு மாநில கழகத் துணைச் செயலாளர் குமுதன்புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணை க்கிணங்க, புதுவை மாநில செயலாளர் அன்பழகன் அனுமதியோடு, அ.தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மணவெளி தொகு திக்குட்பட்ட கிராமங்களில் அதிமுகவில் உறுப்பி னர்கள் சேர்ப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தவளகுப்பத்தில் நடைபெற்றது.
.இந்த கூட்டத்திற்கு மாநில கழகத் துணைச் செயலாளர் குமுதன்புருஷோத்தமன் தலைமை தாங்கினார். தொகுதி நிர்வாகிகள் பார்த்தசாரதி, நடராஜன், மாணிக்கவேல், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி அவைத்தலைவர் பி.ஆர்.மூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் காத்தவராயன், ரகுராமன், தர்மன், பர்குணன், அய்யப்பன், சோமு, மாரியப்பன், அஞ்சாபுலி, இளங்கோ, சிவசங்கரன், காந்தாரி, ஜீவா, சேது, பன்னீர்செல்வம், உள்பட அனைவரும், தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் எடுத்துக் கூறினர்.
முடிவில் மணி நன்றி கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில மற்றும் தொகுதி கழக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
- கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது.
- ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏற்கனவே வருகிற 24-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடத்த கல்வித்துறை திட்டமிட்டது. இப்போது தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
போலீஸ், எல்.டி.சி., யூ.டி.சி. உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்துவது என்று ஆலோசித்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும்.
வரும் 20-ந் தேதியுடன் முடிகிறது. கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது. ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
கல்லூரிகளை பொறுத்தவரையில் இன்னும் ஆலோசனை செய்யவில்லை. சிறுவர்கள் என்பதால் முதலில் அவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிகளுக்கு மருத்துவத்துறை ஒப்புதல் கேட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
- புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்கால் தனியார் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து நுழைவு வாயில் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இளைஞர் காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோஸ்வா கண்டன உரையாற்றினார்.
புதுச்சேரி
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்கால் தனியார் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து நுழைவு வாயில் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுக்கு வழங்க வேண்டிய உரிமை பங்கு தொகையை உயர்த்தி, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை, சுற்றுப்புற கிராம மக்களுக்கு மருத்துவ பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 20 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார்.
இளைஞர் காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோஸ்வா கண்டன உரையாற்றினார்.முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாவட்ட தலைவர் சந்திரமோகன், மாநில பொதுச் செயலாளர் மோகனவேல், திருமுருகன், செயலாளர் தங்கவடிவேல், மாவட்ட பொதுச்செயலாளர் கருணாநிதி, ரமேஷ், செயலாளர் அருள், முரளி, சேகர், துரைராஜன், வக்கீல் மருதுபாண்டியன், காரைக்கால் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ஆறுமுகம், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் திராவிட மணி, காதர் மொய்தின்
மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சமீர் கோவலன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர்கள் சபிக், விக்னேஷ் கிழக்கு மாவட்ட தலைவர் அய்யப்பன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ராம்குமார் மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், ஸ்டாலின் தொகுதி தலைவர்கள் சந்தோஷ், பிரவீன், நாசர், சுரேஷ், முகமது சபீக், ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அத்துமீறி துறைமுக வளாகத்திற்குள் புக முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதில் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெங்கசாமி தலைமையில் வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் முன்னிலையில் நடைபெற்றது.
- தனவேலு, ரத்தினகுமார், கலியமூர்த்தி, தனசேகரன், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.ம.மு.க. வடக்கு மாநில நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெங்கசாமி தலைமையில் வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் துணை செயலாளர்கள் சிலம்பரசன், தமிழரசி பொருளாளர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நந்தகோபால் ஜெ. பேரவை செயலாளர் காண்டீபன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சுதாகர், மகளிரணி செயலாளர் காமாட்சி, இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், இலக்கிய அணி செயலாளர் பாலு, மருத்துவர் அணி செயலாளர் எழில், ரகுபதி, கலைவாணி, தொகுதி செயலாளர்கள் செந்தில் என்ற குமாரவேல், ராமசந்திரன், செல்லா என்ற தமிழ்செல்வன், தனவேலு, ரத்தினகுமார், கலியமூர்த்தி, தனசேகரன், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சகோதர- சகோதரிகள் அனைவருக்கம் எனது இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
- இயேசு கிறிஸ்துவின் அளவற்ற அன்பையும், கருணையையும் நினைவுபடுத்திக்கொள்ள இந்த ஈஸ்டர் ஒரு நல்ல வாய்ப்பு.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-
மனித குலத்தை வாழ்விக்க தன்னுயிரை தந்த அன்பின் திருவுருமான இயேசு பிரான் புத்துயிர் பெற்ற நாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி மகிழும், கிறித்துவ சகோதர- சகோதரிகள் அனைவருக்கம் எனது இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நாம் நமது வாழ்வை மகிழ்ச்சியை புதுப்பித்துக் கொள்வதற்கான நம்பிக்கை யை தருவதே ஈஸ்டர் பண்டிகையின் உள்ளார்ந்த அர்த்தமாக உள்ளது. ஆண்டவனின் கிருபை இதில் அடங்கியுள்ளது. இயேசு கிறிஸ்துவின் அளவற்ற அன்பையும், கருணையையும் நினைவுபடுத்திக்கொள்ள இந்த ஈஸ்டர் ஒரு நல்ல வாய்ப்பு.
புத்துயிர் பெற்ற இறைவனின் அருட்கொ டையானது, உங்கள் வீடுகளை பேரொளியாலும், உங்கள் ஆன்மாக்களை கருணை யாலும், எண்ண ங்களை மேன்மையான சிந்தனை களாலும் நிரப்பட்டும். கருணாமூர்த்தியின் அளவற்ற ஆசீர்வாதம் உங்களோடும், உங்கள் குடும்பத்தாரோடும் என்றும் நிலைத்திருக்க பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






