என் மலர்
புதுச்சேரி
- 2 மற்றும் 3-ம் தவணை தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
- பாலமுருகன், தயாளன், பாலு, முத்து, அசார், சுரேஷ், நடராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதியில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் குடிசைமாற்று வாரியம் மூலம் விண்ணப்பம் செய்துள்ள 45 பயனாளிகளுக்கு முதல், 2 மற்றும் 3-ம் தவணை தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. வீடுகட்டும் பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்திற்கான தவணைத் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடிசைமாற்று வாரிய இளநிலைப் பொறியாளர் அனில்குமார், ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ராமசாமி, செல்வநாதன், தொகுதி செயலாளர் மணிகண்டன், ரமணன், கிளைச் செயலாளர்கள் முருகன், பக்ருதீன், காளி, ஷேக் பாய், கலி முல்லா, பாலமுருகன், தயாளன், பாலு, முத்து, அசார், சுரேஷ், நடராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான நேஷனல் இன்னோவேஷன் புராஜெக்ட் அவார்டு- 2023 என்னும் தேசிய அளவிலான அறிவியல் திட்ட போட்டி நடந்தது.
- போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வீட்டு உபயோக மின்னியல் பொருட்களில் பழுது நீக்கல் பயிற்சி அளிக்கப்பட்டது .
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான நேஷனல் இன்னோவேஷன் புராஜெக்ட் அவார்டு- 2023 என்னும் தேசிய அளவிலான அறிவியல் திட்ட போட்டி நடந்தது.
பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 57 குழுக்களை சேர்ந்து 295 மாணவர்கள் தங்களின் அறிவியல் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தினர்.
அவற்றில் சிறந்த அறிவியல் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்திய 5 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வீட்டு உபயோக மின்னியல் பொருட்களில் பழுது நீக்கல் பயிற்சி அளிக்கப்பட்டது .
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயண சாமி, பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் அன்பு மலர் வரவேற்றார்.
புதுவை லூகாஸ் டி.வி.எஸ். சீனியர் நலப்பிரிவு அதிகாரி தமிழ்செல்வி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்புரை யாற்றினார். கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் அகாடமிக் டீன் அறிவழகர் கலந்து கொண்டனர்.வேலைவாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் நன்றி கூறினார்.
- புதுவை முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை அரசு கால்நடை பராமரிப்பு துறையின் மூலமாக புதுவை முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திருபுவனை தொகு திக்குட்பட்ட கொத்த மபுரிநத்தம் கிராமத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள சுமார் 200 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமில் கால்நடைத்துறை மருத்துவர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
- 65 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் முதியோர் , விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியவருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த தகுதி வாய்ந்த 65 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி முதலியார் பேட்டை பாரதிதாசன் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலியார் பேட்டை சம்பத் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான ஆணையை வழங்கினார். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
- புதுவை அருகே அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் பிரம்மன் சதுக்கம் எதிரே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரி பழம், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்கினார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் பிரம்மன் சதுக்கம் எதிரே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவுக்கு அ.தி.மு.க. மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரி பழம், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்கினார். மாநில துணைத் தலைவர் ராஜாராம், நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில துணை செயலாளர் கணேசன், சேரன், நாகமணி அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாபுசாமி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், தொகுதி அவை தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன், தட்சிணாமூர்த்தி, தொகுதி பொருளாளர் மஞ்சினி, வார்டு செயலாளர் ஜெயக்குமார், சிவரவி, ரங்கநாதன், செங்கேனி, குமரன், குப்புசாமி, ரமேஷ் ,கோபி, மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் ராஜா செய்திருந்தார்.
- மர்மபெண் ஒருவர், பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய போலி கணக்கு தொடங்கினார்.
- சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
அவர் சமூக அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருகிறார். அப்பெண் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வருகிறார்.
அந்த சமூக வலைதளங்களில் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே மர்மபெண் ஒருவர், அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய போலி கணக்கு தொடங்கினார்.
அந்த கணக்கில் தன்னுடன் உல்லாசமாக இருக்கலாம் போன்ற பதிவும் இடம் பெற்றிருந்தது. அதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
மேலும் அவரது புகைப்படங்களை வைத்து தொடங்கப்பட்டுள்ள போலி கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மதரசா கல்வி நிறுவன புனரமைப்புப் பணிக்கு வஃபு வாரியம் மூலம் ரூ. 10 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது
- தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் சுல்தான்பேட்டை வக்பு முஹமதியா பள்ளிவாசல் மற்றும் மதரசா கல்வி நிறுவன புனரமைப்புப் பணிக்கு வஃபு வாரியம் மூலம் ரூ. 10 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது
இதற்கான காசோலையை எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில், பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏ.எச்.எம் நாஜிம் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், முகமதியா பள்ளிவாசல் தலைவர் முகம்மது யாசிம், செயலாளர் உபயதூர் ரஹிமான் மற்றும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சத்தியாகிரகம், மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- அவ்வை திடலில் நடந்த போராட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சத்தியாகிரகம், மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
புதுவை காங்கிரசாரும் தொகுதிதோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காமராஜர் நகர் தொகுதி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. அவ்வை திடலில் நடந்த போராட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார்.
மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள்
எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், நீலகங்கா தரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், வக்கீல் மருதுபாண்டியன், சிறப்பு அழைப்பாளர் வினோத், ராஜா, ஆர்.இ.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியாகிரக போ ராட்டத்தில் எதிர்கட்சி த்தலைவர் சிவா, இந்தியகம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், மார்க்சிஸ்டு மூத்த தலைவர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது.
- நெட்டப்பாக்கம் தொகுதி பா.ஜனதா செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் கல்மண்டபம் பகுதியில் பா.ஜனதா ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
- புதுவையில் விரைவில் ரேஷன் கடைகளில் மீண்டும் அரிசி வழங்கப்படும்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் தொகுதி பா.ஜனதா செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் கல்மண்டபம் பகுதியில் பா.ஜனதா ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
அமைச்சர் நமச்சிவாயம் ஏழைகளுக்கு வேட்டி,சேலை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி புதுவையில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கி தருகிறார். இதனால்தான் புதுவையில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. புதுவையில் விரைவில் ரேஷன் கடைகளில் மீண்டும் அரிசி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை குமரன், தனஞ்செழியன், அய்யப்பன் ஜெயமூர்த்தி, கதிரேசன், அரிபாசுகுமார், முருகையன், லோகநாதன், விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
- புதுவை அருகே கிருமாம்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தில் ஏம்பலம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- ராஜீவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்காதது குறித்தும் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தில் ஏம்பலம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு லட்சுமி காந்தன் எம். எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் பாகூர் தாசில்தார் பிரதீவ்ராஜ், துணை தாசில்தார் விமலன் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து வருவாய் கிராமத்திலும் ஸ்வமித்ரா திட்டத்தின் கீழ் சொத்து அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்குவது குறித்தும், அரசு புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு கண்டறிந்து பட்டியல் தயாரிப்பது, அரசு துறையில் உள்ள காலியிடங்களை கணக்கிடுதல் பற்றி பேசப்பட்டது.
மேலும் ராஜீவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்காதது குறித்தும் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கூறுகையில் முதல் கட்டமாக அரசு புறம்போக்கு மற்றும் நத்தம் புறம்போக்கு இடங்களை கண்டறிந்து முதல் கட்டமாக சுமார் ஆயிரம் பேருக்கு இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.
- புதுவை அருகே திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளியின் 11- வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- பள்ளி மாணவர்களின் பல்வேறு விளையாட்டுகள், நடனம், தனித்திறமை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புதுச்சேரி:
திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளியின் 11- வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் தனசெல்வம் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை விஜ யலட்சுமி தனசெல்வம் அனை வரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னர்களாக புதுவை சுயநிதி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்.ரங்கநாதன், பொருளாளர் டாக்டர். சிவசுப்பிரமணி, அப்பு ஆங்கிலப் பள்ளி தாளாளர் சுப்பிரமணியன், இளமதிழகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர்,
எம்.ஜே.எப் லையன். சிவகாந்தன், தியாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள். பள்ளியின் ஆசிரியை கமலி ஆண்டறிக்கை வாசித்தார்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்வேறு விளையாட்டுகள், நடனம், தனித்திறமை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் அருள்மொழி, கவிதா, பாக்கியலட்சுமி, வனிதா, சத்தியமூர்த்தி மற்றும் ஊர் பிரமுகர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவினை பள்ளியின் ஆசிரியை சாந்தினி தொகுத்து வழங்கினார். விழாவின் முடிவில் ஆசிரியை நர்மதா நன்றி கூறினார்.
- திருபுவனை தொகுதி பா.ஜனதா சார்பில் மதகடிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- புதுவை மாநில சட்டசபையில் முழு பட்ஜெட் அறிவிக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதி பா.ஜனதா சார்பில் மதகடிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருபுவனை தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிகண்டன் வரவேற்றார். பொதுச் செயலாளர் பாலகுமார், செயலாளர் மோகன்ராஜ், பயிற்சி தலைவர் அமரீத், சத்யநாராயணன், விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழு கூட்டத்துக்கு புதுவை பா.ஜனதா மாநில செயலாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஆனந்தன், மாநில விவசாயி தலைவர் புகழேந்தி, பயிற்சி அணி தலைவர் பாலாஜி, செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, பாஸ்கரன், எஸ்.சி. அணி செயலாளர் வீரப்பன், மாவட்ட விவசாயி தலைவர் சச்சிதானந்தம் ஆகியோர் பேசினார்கள்.
மதகடிப்பட்டு வார சந்தை தரம் உயர்த்தப்பட்டது, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கியது, திருபுவனை தொகுதியில் புதிய சாலை அமைத்து வருவது, புதுவை மாநில சட்டசபையில் முழு பட்ஜெட் அறிவிக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இளைஞர் அணி செயலாளர் விக்ரம் நன்றி கூறினார்.






