search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
    X

    மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது. அருகில் முன்னாள் அமைச்சர் கமலகண்ணன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் உள்ளனர்.

    தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    • புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்கால் தனியார் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து நுழைவு வாயில் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இளைஞர் காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோஸ்வா கண்டன உரையாற்றினார்.

    புதுச்சேரி

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்கால் தனியார் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து நுழைவு வாயில் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரசுக்கு வழங்க வேண்டிய உரிமை பங்கு தொகையை உயர்த்தி, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை, சுற்றுப்புற கிராம மக்களுக்கு மருத்துவ பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 20 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார்.

    இளைஞர் காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோஸ்வா கண்டன உரையாற்றினார்.முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாவட்ட தலைவர் சந்திரமோகன், மாநில பொதுச் செயலாளர் மோகனவேல், திருமுருகன், செயலாளர் தங்கவடிவேல், மாவட்ட பொதுச்செயலாளர் கருணாநிதி, ரமேஷ், செயலாளர் அருள், முரளி, சேகர், துரைராஜன், வக்கீல் மருதுபாண்டியன், காரைக்கால் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ஆறுமுகம், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் திராவிட மணி, காதர் மொய்தின்

    மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சமீர் கோவலன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர்கள் சபிக், விக்னேஷ் கிழக்கு மாவட்ட தலைவர் அய்யப்பன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ராம்குமார் மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், ஸ்டாலின் தொகுதி தலைவர்கள் சந்தோஷ், பிரவீன், நாசர், சுரேஷ், முகமது சபீக், ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அத்துமீறி துறைமுக வளாகத்திற்குள் புக முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதில் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.

    Next Story
    ×