என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மலேசிய தமிழ் அறிஞர்கள் புதுவை வருகை
    X

    புதுவைக்கு வந்த மலேசிய தமிழறிஞர்களுக்கு புதுவை தமிழ்ச்சங்க தலைவர் வி.முத்து தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மலேசிய தமிழ் அறிஞர்கள் புதுவை வருகை

    • புதுவைக்கு வந்திருந்தவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இளங்கோ, ஆறுமுகம் தலைமையில் தமிழ் கலாச்சார பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    மலேசியா நாட்டில் உள்ள மலேசிய தமிழ் மணி மன்ற நிர்வாகிகள் அதன் தேசிய தலைவர் சு.வை.லிங்கம், செயலாளர் கோகிலா வாணி, மகளிர் அணி தலைவி ஜீவரேகா, இளங்கோ, ஆறுமுகம் தலைமையில் தமிழ் கலாச்சார பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

    முதற்கட்ட பயணமாக புதுவைக்கு வந்திருந்தவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் வி.முத்து, செயலாளர் சீனு. மோகன்தாஸ், பொருளாளர் திருநாவுக்கரசு உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×