என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அம்பேத்கர் சிலை மேம்படுத்தும் பணி தீவிரம்- கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    அம்பேத்கர் சிலை மேம்படுத்தும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.

    அம்பேத்கர் சிலை மேம்படுத்தும் பணி தீவிரம்- கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

    • புதுவை தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக இருந்தது.
    • அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்ச்சியாக சந்தித்து வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக இருந்தது.

    அங்குள்ள பூங்கா நீர்வீழ்ச்சி செயலற்று தூய்மையற்று காணப்பட்டது. எனவே சிலையை தொடர்ந்து பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி தி.மு.க. எம்.ஏல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்ச்சியாக சந்தித்து வலியுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் தற்போது எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் சிலை மற்றும் பூங்கா மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பொதுப்பணித்துறை சாலை பிரிவு அதிகாரி ராமனிடம் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். அப்போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் காளியப்பன், ராகேஷ் உடனிருந்தார்.

    Next Story
    ×