என் மலர்
புதுச்சேரி

அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் நீர்மோர் வழங்கி தொடங்கி வைத்த காட்சி.
அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு-மாநில செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்
- கோடைகால வெயிலை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மணவெளி தொகுதி அ.தி.மு.க. சார்பில் தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கப்பட்டது.
- சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
கோடைகால வெயிலை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மணவெளி தொகுதி அ.தி.மு.க. சார்பில் தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநில கழக துணை செயலாளர் குமுதன் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் அன்பானந்தன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, தொகுதி அவைத்தலைவர் மூர்த்தி, பொருப்பாளர்கள் ஜானகிராமன், சிவராம ராஜா, தீனதயாளன், தர்மன், முனுசாமி, காந்தாரி, குணாலன், சேது, காத்தவ ராயன், சசிகுமார், தாஸ், செல்வமணி, சத்தியசீலன்,
சங்கர், விஜயன், பன்னீர் செல்வம், மேகநாதன், பிரஷ்நேவ், ராமு, மதன், சோமு, வேல்முருகன், பெருமாள் மற்றும் மாநில, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






