என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சென்னையில் இருந்து புதுவைக்கு பீர் பஸ் சுற்றுலா- பயணிகளை குஷிப்படுத்த ஏற்பாடு
    X

    சென்னையில் இருந்து புதுவைக்கு 'பீர்' பஸ் சுற்றுலா- பயணிகளை குஷிப்படுத்த ஏற்பாடு

    • சென்னையில் இருந்து 40 சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அழைத்து செல்லப்பட்டு அன்றைய தினமே மீண்டும் சென்னை திரும்பலாம்.
    • ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும், பல விதமான உணவு வகைகளை சாப்பிட்டுக்கொண்டே புதுவையை சுற்றி பார்க்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் விதவிதமான மதுக்கடைகள், மது அருந்தும் வசதியுடன் பார்கள் உள்ளன.

    வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை புதுவை கடற்கரைகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. சென்னையில் இருந்து அதிகளவில் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    குறிப்பாக மது பிரியர்கள் விதவிதமான பீர்களை வாங்கி குடித்து பொழுதை கழிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அடுத்தக்கட்டமாக உணவு சாப்பிடும் ரெஸ்ட்டாரண்டுகள் பாரம்பரிய வீடுகள் அனைத்திலும் சுற்றுலா என்ற பெயரில் ரெஸ்டோபார்கள் திறக்க அரசு தாராளமாக அனுமதி அளித்து வருகிறது.

    அதற்கு மேல் இப்போது மது பிரியர்களுக்காக சென்னையில் இருந்து புதுவைக்கு தனியாக வருகிற 22-ந் தேதி முதல் பீர் பஸ் இயக்கப்பட உள்ளது. இதனை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

    ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும், பல விதமான உணவு வகைகளை சாப்பிட்டுக்கொண்டே புதுவையை சுற்றி பார்த்து விட்டு அன்றைய தினமே சென்னைக்கு திரும்பி விடலாம். இதற்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து நிறுவன ஏற்பாட்டாளர்கள் கூறியிருப்பதாவது:-

    பீர் பஸ் என்று அழைப்பதால் பஸ்சில் குடிப்பது என்று யாரும் நினைத்து கொள்ள வேண்டாம். பஸ்சில் பீர் குடிக்க அரசு அனுமதி இல்லை.

    எனவே புதுவையில் அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பஸ் நிறுத்தப்படும். அந்த இடத்தில் பீர் அருந்த அனுமதிக்கப்படும்.

    சென்னையில் இருந்து 40 சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அழைத்து செல்லப்பட்டு அன்றைய தினமே மீண்டும் சென்னை திரும்பலாம். அன்றாட வேலைகளில் மூழ்கி கிடப்பவர்கள், வார விடுமுறையில் ரிலாக்சாக உற்சாகப்படுத்தி புதுப்பித்து கொள்ள இந்த சுற்றுலா உதவும் என்றனர்.

    Next Story
    ×