என் மலர்
புதுச்சேரி

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தொடங்கி வைத்த காட்சி.
போதை கும்பல் அட்டகாசத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்-அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
- அ.தி.மு.க. உறுப்பினர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் உறுப்பினர் உரிமைச்சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற சட்ட திட்ட விதிமுறை உள்ளது.
- அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு புதுவை மாநில மக்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பது.
புதுச்சேரி:
அ.தி.மு.க. உறுப்பினர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் உறுப்பினர் உரிமைச்சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற சட்ட திட்ட விதிமுறை உள்ளது.
இதன்படி அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர் சேர்க்க விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும். உறுப்பினர் பதிவு புதுப் பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் முத்தியால்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர், வையாபுரி மணி கண்டன் தலைமை தாங்கி புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நிர்வாகிகளிடம் வழங்கினார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு புதுவை மாநில மக்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பது. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்குகள் போடும் தமிழக தி.மு.க. அரசை கண்டிப்பது 4 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து ஜெயலலிதா அரசை புதுவை மாநிலத்தில் கொண்டுவர அயராது பாடுபடுவது.
புதுவை மாநிலம் போதையின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது. இளைஞர்கள், இளம்பெண்கள் மது அருந்தி விட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபடும் கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக புதுவை வாலிபர் போதை கும்பலின் அட்டூழியத்தால் மரத்தில் வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை கும்பலின் அட்டகாசம் எல்லை மீறுவது புதுவை மாநில மக்களின் கலாச்சாரத்திற்கும், நல்வாழ்வுக்கும் உகந்தது அல்ல. இதுபோன்ற செயல்களை அரசு முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். உயிர்பலிகளை பற்றி கவலைப்படாமல், மேலும் ரெஸ்டோ பார்கள் வரும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் விக்னேஷ் காசிநாதன் , மணி, கோபால், பழனிசாமி, கஜேந்திரன், மோகன், செல்வம், விஸ்வநாதன், அந்துவான், குப்பன், மண்ணாங்கட்டி, தனலட்சுமி, ராதா, ஹரி கிருஷ்ணன், செல்வம், கன்னியப்பன், ராமமூர்த்தி, ஜெயபால், நாராயணசாமி, நாதன் முனியாண்டி, கார்த்திக், விநாயகமூர்த்தி, ஜான், பஞ்சவர்ணம், பச்சையப்பன், வினோத் குமார், பிரபா, எத்திராஜ், முரளிதரன், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவத்தை அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணி கண்டன் நிர்வாகிகளிடம் வழங்கினார்.






