என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோவில் கட்ட நிதி பெற்று தர கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
    X

    அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்த காட்சி.

    கோவில் கட்ட நிதி பெற்று தர கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை

    • இந்து அறநிலையத்துறை மூலம் பணம் பெற்று தருவது சம்பந்தமாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்து கோரிக்கை வைத்தனர்.
    • சில மாதங்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினையை உடனடியாக சரி செய்து கொடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுைவ உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 2 பகுதியில் உள்ள வேதவல்லி மாரியம்மன் கோவில் கட்டுமான பணிக்காக இந்து அறநிலையத்துறை மூலம் பணம் பெற்று தருவது சம்பந்தமாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்து கோரிக்கை வைத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. அறநிலையத் துறை ஆணையரிடம் அழைத்துச் சென்று மானியத்தொகை கிடைக்க பரிந்துரை செய்கிறேன் என்று உறுதியளித்தார்.

    மேலும் அங்கு சில மாதங்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினையை உடனடியாக சரி செய்து கொடுத்தார். குறைகளைக் கூறியவுடன் உடனுக்குடன் தீர்வு காணும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து நன்றி கூறினர். இதில் கிளை செயலாளர்கள் சேகர் மற்றும் ராகேஷ், உடன் இருந்தனர்.

    Next Story
    ×