என் மலர்
நீங்கள் தேடியது "business rivalry"
- புதுவை முல்லா வீதியை சேர்ந்தவர் பைகல்லா பேக் (வயது 62) . வீட்டிலேயே சமையல் ஆர்டர் எடுத்து செய்து வருகிறார்.
- இதனால் பைகல்லா பேக்கிற்கும், ஷ்புதீனுக்கும் இடையில் தொழில்போட்டி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முல்லா வீதியை சேர்ந்தவர் பைகல்லா பேக் (வயது 62). வீட்டிலேயே சமையல் ஆர்டர் எடுத்து செய்து வருகிறார். இவரது மகன் பைரோஸ் (வயது 28) தந்தைக்கு துணையாக சமையல் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஷர்புதீன். டிரைவர் வேலை பார்த்து வந்த அவர் சில மாதங்களாக சமையல் செய்த ஆர்டர்களை பிடித்து வந்துள்ளார். இதனால் பைகல்லா பேக்கிற்கும், ஷ்புதீனுக்கும் இடையில் தொழில்போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஷர்புதீனின் மாமனார் ரபிக் உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கையில் எடுத்து வந்து பைகல்லாபேக்கின் வீட்டின் முன்பு போட்டதாக கூறப்படுகிறது. இதனை அவர் தட்டிக்கேட்டுள்ளார்,
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் ஆதரவாக அவர்களது குடும்பத்தினரும் வந்து ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டது.
இதுகுறித்து இருவரும் தனித்தனியாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்துள்ளனர். ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து இருதரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.






