என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரியில் சாலை,கால்வாய் பணிகள்-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமி சாலை, கால்வாய் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய காட்சி.

    இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரியில் சாலை,கால்வாய் பணிகள்-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

    • ரூ. 67.40 லட்சம் செலவில் மாணவியர் விடுதியையும் புனரமைக்கும் பணிக ளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது
    • சாலைப்பணிகள் 8 மாத காலத்திலும் மாணவ- மாணவியர் விடுதி சீரமைப்பு பணிகள் 6 மாத காலத்திலும் முடிக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ரூ.3.57 கோடி செலவில் உள்சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மற்றும் ரூ. 67.85 லட்சம் செலவில் மாணவர் விடுதியையும் ரூ. 67.40 லட்சம் செலவில் மாணவியர் விடுதியையும் புனரமைக்கும் பணிக ளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரும் கல்லூரி நிர்வாகத்தின் தலைவருமான ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரதுறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கல்லூரி இயக்குனர் உதயசங்கர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, கல்லூரி ஆசிரியர்கள், மருத்துவர்கள் பொறியாளர்கள் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சாலைப்பணிகள் 8 மாத காலத்திலும் மாணவ- மாணவியர் விடுதி சீரமைப்பு பணிகள் 6 மாத காலத்திலும் முடிக்கப்பட உள்ளது.

    இப்பணிகளை தொடர்ந்து மருத்துவமனை கட்டிடத்தின் 4-வது மாடியில் அதிநவீன வசதிகள் கொண்ட 11 அறுவை சிகிச்சை கூடங்கள் ரூ.32 கோடி செலவில் கட்டி முடித்து இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமி டப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதற்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது.

    மேலும், உள்ளிருப்பு மருத்துவர்கள் தங்கு வதற்காக ரூ.32 கோடி மதிப்பீட்டில் 240 அறைகளுடன் கூடிய 8 மாடி விடுதி கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் 2 மாதங்களில் தொடங்கப்பட உள்ளன.மருத்துவமனை, கல்லூரி, நூலகம் மற்றும் அதைச்சார்ந்த அனைத்து கட்டிடங்களையும் சீரமைக்க ரூ.6.50 கோடி செலவில் பல்வேறு பணிகள் மிக விரைவில் மேற் கொள்ளப்படவுள்ளன.

    பணிகள் தேசிய மருத்துவ கவுன்சிலின் அனைத்து தேவைகளுக்கு ஏற்ப 1½ ஆண்டு காலத்தில் நிறைவு பெற்று புதுவை மக்களின் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×