search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்தது
    X

    புதுவை சுகாதாரத்துறை, ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்தது

    • புதுவை அரசு சுகாதார துறையுடன் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
    • ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ஜெய்சீங், துணை முதல்வர் அருணாச்சலம், இணை பதிவாளர் பெருமாள், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிகழ்நிலைப் பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் புதுவை கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, புதுவை அரசு சுகாதார துறையுடன் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு, அலுவலக சிறப்பு அதிகாரி சாவித்திரி, முதல்-அமைச்சர் தனி செயலர் அமுதன், ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ஜெய்சீங், துணை முதல்வர் அருணாச்சலம், இணை பதிவாளர் பெருமாள், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஒப்பந்தத்தின் படி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் அபிஷேகப்பாக்கம், அரியாங்குப்பம், ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை ஆகிய சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவைகள் செய்வார்கள் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×