என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
- புதுவையில் ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 325, காரைக்காலில் 144, ஏனாமில் 21, மாகேவில் 7 பேர் என மொத்தம் 497 பேர் கொரோனா தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 100, காரைக்காலில் 32, ஏனாமில் 5, மாகியில் 2 பேர் என மொத்தம் 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 15, காரைக்காலில் 2, ஏனாமில் ஒருவர் என 18 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 325, காரைக்காலில் 144, ஏனாமில் 21, மாகேவில் 7 பேர் என மொத்தம் 497 பேர் கொரோனா தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவையில் 36, காரைக்காலில் 4 பேர் என 40 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டனர்.
புதுவையில் இதுவரை கொரோனாவுக்கு ஆயிரத்து 978 பேர் பலியாகியுள்ளனர். புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறு த்தியுள்ளது.






