என் மலர்
நீங்கள் தேடியது "Ambedkar Birthday Celebration"
- புதுவை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- பல்கலை துணைவேந்தர் குர்மீத்சிங் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை பல்கலை க்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இடஒதுக்கீடு பிரிவு தொடர்பு அதிகாரி அருள் வரவேற்றார். பல்கலை துணைவேந்தர் குர்மீத்சிங் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர் கூறும்போது, புதுவை பல்கலைக்கழகத்தில் தலித் வரலாறு மதம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மத்திய மந்திரி முருகன் தலைமையில் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இயக்குனர் தர ணிக்கரசு, சிறப்பு அதிகாரி ராஜீவ்ஜெயின், பதிவாளர் ரஜ்னீஸ்புட்னி, நிதி அதிகாரி லாசர், தேர்வு கட்டுப்பாட்டாளர் சதனாந்தஜிசாமி, நூலகர் விஜயகுமார், உதவி பதிவாளர்கள் மகேஷ், முருகையன் உட்பட பலர் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.






