என் மலர்
நீங்கள் தேடியது "Abhishekam for Anjaneya"
- ஆஞ்சநேயர் திருக்கோவிலில் லட்சதீப சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- ராமர் சீதை ஆஞ்சநேயர் சாமிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு அருகே உள்ள எல். ஆர். பாளையத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் திருக்கோவிலில் லட்சதீப சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ராமர் சீதை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
தொடர்ந்து ராமர் சீதை ஆஞ்சநேயர் சாமிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிகான ஏற்பாடு களை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.






