என் மலர்
புதுச்சேரி
- முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
- மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் சிறப்பாக பணியாற்றி வருகிறது
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தில் புதிய பள்ளிக்கூடத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுவை மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை சார்பில் மதகடிப்பட்டு மடுகரை சாலையில் மணக்குள விநாயகர் (எஸ்.எம்.வி.) என்ற பெயரில் புதிய பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
விழாவிற்கு தக்கஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் டாக்டர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தரமான கல்வி வழங்குவதில் மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. கல்வி என்பது சுமையல்ல, அது சுவை என்று சொல்லும் அளவுக்கு சுற்றுச்சூழலை உருவாக்கி மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பதுடன் உயர் கல்வியையும் கொடுக்கும் அளவுக்கு கல்லூரி வளர்ச்சி அடைந்துள்ளது.
இது புதுவைக்கு பெருமை சேர்ப்பதாகும். தொழில் நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க வரும் போது தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்ப்பதற்கும், எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் தரமான கல்வியை மணக்குள விநாயகர் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாசலபதி, மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் மலர்க்கண், பல்லவா கல்வி குழுமங்களின் தலைவர் முத்து, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய் தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமி டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டில் எல்.கே .ஜி. முதல் 8-ம் வகுப்புகள் வரை தொடங்கப்பட்டு உள்ளன.
- கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பல்திறன் போட்டிகள் நடந்தது.
- பங்கேற்றோருக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத்துறை சார்பில் 2 நாள் கருத்தரங்கு தொடக்கவிழா நடந்தது. சினாப்டிக் 2023 என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை எம்.பி.ஏ.படிக்கும் மாணவர்கள் நடத்தினர். கருத்தரங்கை துறை தலைவர் சாருமதி தொடங்கி வைத்தார்.
கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பல்திறன் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் பங்கேற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் உயர் பதவிகளில் உள்ள நிர்வாகிகள், கம்யூடேஷனல் இன்டலிஜென்ஸ் தலைப்பில் விவாதம் நடத்தினர்.
தரணிக்கரசு சிறப்புரை யாற்றனார். கருத்தரங்கை ஒருங்கிணைப்பாளர்கள் சித்ரா வசுப்பிரமணியம், நிஷாந்த் புடோடா ஆகியோர் தொகுத்து வழங்குகினர்.
- போதை கும்பலில் ஒருவர் வழி மறித்தால் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி இறந்தார்.
- மோனிஷா என்ற பெண் தலைமறைவானார்.
புதுச்சேரி:
புதுவை முத்துபிள்ளை பாளையத்தை சேர்ந்தவர் குசும்குமாரி மகன் விஷால் பொறியியல் இவர் கடந்த 7-ந் தேதி இரவு 2.15 மணிக்கு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் அருகே ஸ்கூட்டரில் சென்றபோது, நடுரோட்டில் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய போதை கும்பலில் ஒருவர் வழி மறித்தால் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி இறந்தார்.
ஓதியஞ்சாலை போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போதை கும்பலை சேர்ந்த நவீன்குமார், கார்த்திக் சங்கர், சூர்யகுமார், அருண்தாமஸ், முகேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மோனிஷா என்ற பெண் தலைமறைவானார்.
வழக்கில் சிறையில் உள்ள அருண் தாமஸ் ஜாமீன் கேட்டும், மோனிஷா முன்ஜாமீன் கோரியும் கடந்தவாரம் புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
- ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலில் மீன்வளத்தை பாதுகாத்திட புதுவையில் கவர்னர் உத்தரவின்படி மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கனகசெட்டிகுளம் முதல் புதுக்குப்பம் வரையிலான பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலைகள், இழுமடி வலைகள் கொண்டு விசைப்படகு மற்றும் எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே மீனவர்கள் மீன்பிடி தடைக்கால உத்தரவை முறையாக கடைபிடிக்க வேண்டும். தடைகாலத்தில் எந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகில் இழுவலைகள், இழுமடி வலைகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது புதுவை கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு மீன்வளத் துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
- ஏரி, குளம் தூர்வாரியது.
புதுச்சேரி:
புதுவையில் 84 ஏரிகள், 454 குளங்கள் உள்ளன.
இவை உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விவசாய நிலங்களை வளப்படுத்த வண்டல் மண் தேவை. இதனால் புதுவை அரசு 2020-ல் விவசாயிகளை கொண்டு ஏரி, குளம் தூர்வாரியது.பொதுமக்களே தூர்வாரி அந்த மண்ணை விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தினர்.
உரிமைத்தொகையாக மாட்டு வண்டிக்கு ரூ.50, டிராக்டருக்கு ரூ.100, லாரிக்கு ரூ.150 செலுத்தி இணையம் வழியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம். இந்த ரசீதை கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் தேவையான வண்டல் மண்ணை எடுத்துசெல்லலாம்.
இந்த மண் தூர்வாரும் கண்டனம் தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இதற்காக கனிமங்கள் ஒழுங்குமுறை மேம்பாட்டு விதிகளின் கீழ் திருத்தம் செய்யப்பட்டு, அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி சாதாரண மணல், களிமண், செம்மண் எடுக்க மாட்டு வண்டிக்கு ரூ.125, டிராக்டரில் 3 கியூபிக் மீட்டர் மண் எடுக்க ரூ.325, லாரியில் 8.5 கியூபிக் மீட்டர் மண் எடுக்க ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுண்ணாம்பு எடுக்க மாட்டு வண்டிக்கு ரூ.200, டிராக்டர், லாரிக்கு ரூ.1000, இதர தாது மணல் எடுக்க ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- நேரு எம்.எல்.ஏ. அறிவிப்பு.
- விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்த வில்லை.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமை செயலர், கலெக்டர், உள்ளாட்சித் துறை இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் எஸ்.பி.சி.ஏ. எனும் விலங்குகள் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தவில்லை. இதனால் விலங்குகள் துன்புறத்தப்படுவதுடன், அவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. தெருநாய் போன்ற விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்த வில்லை. நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு, வாகனங்களில் அடிப்பட்டு இறக்கிறது.
தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்தாததால் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. தெருக்களில் கொட்டப்படும் உணவு கழிவுகளை தின்ன சண்டையிட்டு கடித்து கொள்வதால் ரேபிஸ் போன்ற வைரஸ் கிருமிகள் தாக்குகின்றன. ரேபிஸ் தாக்கிய நாய்கள் வெறி பிடித்து மனிதர்களை துரத்தி கடிக்கின்றன.
எனவே இதை தவிர்க்க விலங்குகள் கண்காணிப்பு அமைப்பை தலைமை செயலர் தலைமையில் செயல்படுத்த வேண்டும். இந்த குழுவுக்கு கலெக்டரை தலைவராக நியமிக்க வேண்டும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய நாய் பிடி சாதனங்கள், வாகனங்கள் நகராட்சி, கொம்யூனில் இடம்பெற வேண்டும்.
விலங்குகளை சித்ரவதை செய்யாமல் துகாக்கவும், மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 1-ந்தேதி புதுவை திடீர் நகரில் ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் காத்திருந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பொதுமக்கள் பீதியில் நடைபயிற்சியை பாதியில் கைவிட்டு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையில் அதிகாலையிலும், இரவிலும் மக்கள் நடை பயிற்சி செல்வது வழக்கம்.
நேற்று இரவு பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது பொது கழிப்பிடம் அருகே ஒருவர் 3 அடி நீள பட்டா கத்தியுடன் மிரட்டும் தோணியில் சுற்றி வந்தார். இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வாலிபர் கடற்கரை சாலையில் பலூன் விற்கும் நரிக்குறவர் இன பெண்கள், குழந்தைகள் மத்தியில் கத்தியை காட்டி, என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது, என ஆவேசமாக தெரிவித்தார்.
மேலும், கத்தியை தரையில் தேய்த்து நெருப்பு பொறி பறக்க வைத்தார். யாரோ சிலரை தகாத வார்த்தைகளால் திட்டி, நாளை இதே கத்தியால் தலையில் ஒரே வெட்டு என ஆத்திரத்தோடு பேசினார். இதைக்கண்ட பொதுமக்கள் பீதியில் நடைபயிற்சியை பாதியில் கைவிட்டு சென்றனர்.
இதுகுறித்து பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்கு முன்பு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பட்டாக் கத்தியுடன் வாலிபர் சுற்றிய வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.
இதேபோல புதுவை திடீர் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 2 அடி நீள பட்டாக்கத்தியை தனது பேண்ட்டில் இருந்து உருவி எடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 1-ந்தேதி புதுவை திடீர் நகரில் ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் காத்திருந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கைதான 17 வயது சிறுவனின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் பட்டா கத்தியுடன் சிறுவன் இருக்கும் ஏராளமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது. இவற்றை பேஸ்புக் பக்கத்திலும் சிறுவன் வெளியிட்டுள்ளார்.
சிறுவன் மீது ஏற்கனவே ஆயுதம் வைத்திருந்த வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிதாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
புதுவையில் இளைஞர்களும், வாலிபர்களும் பட்டாக்கத்திகளுடன் சர்வசாதாரணமாக சாலைகளில் நடமாடுவது, சமூகவலைதளத்தில் பதிவிடுவதும் பொதுமக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- சீருடைகளை தனது சொந்த செலவில் வழங்கி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி:
இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களில் ஈடுபடாமல் விளையாட்டில் ஈடுபடுத்து வதற்கான பிரச்சாரம் இயக்கத்தினை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து கிராமப்புற இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகர ணங்களை வழங்கினார்.
தமிழகத்தை போன்று புதுவை மாநிலத்தில் விளையாட்டுகென்று தனி துறை கிடையாது. இதனால் இளைஞர்கள் பலர் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. புதுவை மாநிலத்தில் விளையாட்டு கென தனி துறையை ஏற்படுத்த வேண்டுமென தி.மு.க. சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுவை மாநிலத்தில் இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களில் ஈடுபடாமல் விளையாட்டில் ஈடுபடுத்துவதற்கான பிரச்சார இயக்கத்தை முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கியுள்ளார்.
அதன்படி இன்று திருபுவனை தொகுதி குட்பட்ட செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புபட்டு, விநாயகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்ற சம்பத் எம்.எல்.ஏ. இளைஞர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை தூண்டவும், அவர்கள் போதைப்பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், வாலிபால், கேரம் போர்டு, செஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை தனது சொந்த செலவில் வழங்கி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
மேலும் விளையாட்டு மைதானம் இல்லாத பகுதிகளில் புதிதாக மைதானம் ஏற்படுத்தும் பணியையும் அவர் மேற்கொ ண்டார். இதேபோல் வருகிற வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் இந்த பிரசார இயக்கம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
- கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதி பொதுமக்கள் பாதிப்பு
- துணை மின் நிலைய கம்பிகள் பழுதானது
புதுச்சேரி:
காட்டுக்குப்பத்தில் பாகூர் துணை மின் நிலையம் இருந்து வருகிறது. இதன் பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் துணை மின் நிலையம் பராமரிப்பு இன்றி பழுதடைந்து வருவதால் அடிக்கடி பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும், மின் ஒயர்களும், மின் கம்பங்களும் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. துணைமின் நிலைய கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது.
ஆனால் அரசு மற்றும் உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத–தால் இருக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு மின்துறை ஊழியர்கள் அவ்வப்போது சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 6 மணி அளவில் துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதியில் மின்கம்பிகள் அறுந்துவிட்டது.
இதனால் கன்னிய–கோயில், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், பனித்திட்டு, தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், நல்லவாடு ஆகிய பகுதி–களில் மின் விநியோகம் தடைப்பட்டு பிற்பகல் 12 மணி வரையும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், சிறிய தொழிற்சாலைகள் மின்சாரம் இன்றி பணிகள் பாதிக்கப்பட்டது.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பெரிதும் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு போர்க்காள அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
- அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சத்யசாய் திருமண மண்டபத்தில் நடந்தது.
புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடந்த விழாவுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார்.
9 பஞ்சாயத்து அளவி லான மகளிர் கூட்டமைப்பு சுய உதவிக்குழு உறுப்பி னர்களுக்கு சமுதாய முதலீட்டு கடன், நலிவுற் றோர் நிதிக்கடன், வங்கி கடன், விவசாய கருவிகள் என சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான நலத்திட் டங்களை வழங்கினார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- என். ஆர். காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ஏம்பலம் கிராமத்தில் கிளை எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
இந்த அலுவலகத்தில் ஏம்பலம், செம்பி யப்பாளையம், கம்பிளிகாரன்குப்பம், கோர்க்காடு, கரிக்க லாம்பாக்கம், தனிககுப்பம், தனத்துமேடு உள்ளிட்ட கிராம மக்கள் நலத்திட்ட பணிகள் மற்றும் மக்கள் குறைகள் இப்பகுதியில் அளிக்கலாம்.
கிருமாம்பாக்கம் பகுதியில் குடியிருப்புபாளையம், சேலியமேடு, அரங்கனூர், பிள்ளையார்குப்பம், பனித்திட்டு பகுதியை சேர்ந்தவர் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏம்பலம் பகுதி அலுவலகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் என். ஆர். காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவிப்பு
- ரூ 6,500 -ஆக உயர்த்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் மீன்வளத் துறை சார்பில் மீனவர்களின் விசை படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. டீசலுக்காக மீனவர்கள் நெடும் தூரம் செல்ல வேண்டியுள்ளதால் அந்தந்த கிராமங்களில் டீசல் பங்க் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக வீராம்பட்டி னத்தில் ஐ.ஓ.சி. நிறுவனம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலையில் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
மீன்பிடி தடை கால நிவாரணமாக ரூ.5 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை உயர்த்தவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மீன்பிடி தடை கால நிவாரணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி யின் அனுமதியின் பேரில் ரூ.6 ஆயிரத்து 500 ஆக உயர்த்தியுள்ளோம். உயர்த்தப்பட்ட மீன்பிடி தடை கால நிவாரணம் வரும் (புதன்கிழமை)முதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த தொகையை புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 298 மீனவர்கள் பெறுகின்றனர்.
அரபி கடல் பகுதியில் உள்ள மாகி பிராந்தியத்தில் மீன்பிடி தடை காலம் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. அப்போது அங்குள்ள 515 மீனவர்களுக்கு உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை தெரிவித்து உள்ளது.






