என் மலர்
புதுச்சேரி

காட்டுக்குப்பத்தில் உள்ள துணை நிலையத்தில் கம்பிகள் பழுதாகி உள்ளதை படத்தில் காணலாம்.
6 மணிநேரம் மின் வினியோகம் நிறுத்தம்
- கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதி பொதுமக்கள் பாதிப்பு
- துணை மின் நிலைய கம்பிகள் பழுதானது
புதுச்சேரி:
காட்டுக்குப்பத்தில் பாகூர் துணை மின் நிலையம் இருந்து வருகிறது. இதன் பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் துணை மின் நிலையம் பராமரிப்பு இன்றி பழுதடைந்து வருவதால் அடிக்கடி பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும், மின் ஒயர்களும், மின் கம்பங்களும் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. துணைமின் நிலைய கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது.
ஆனால் அரசு மற்றும் உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத–தால் இருக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு மின்துறை ஊழியர்கள் அவ்வப்போது சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 6 மணி அளவில் துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதியில் மின்கம்பிகள் அறுந்துவிட்டது.
இதனால் கன்னிய–கோயில், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், பனித்திட்டு, தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், நல்லவாடு ஆகிய பகுதி–களில் மின் விநியோகம் தடைப்பட்டு பிற்பகல் 12 மணி வரையும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், சிறிய தொழிற்சாலைகள் மின்சாரம் இன்றி பணிகள் பாதிக்கப்பட்டது.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பெரிதும் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு போர்க்காள அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






