என் மலர்
புதுச்சேரி
- "சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
- ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் போற்றப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஊக்குவித்ததிலும், ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக அவர் போற்றப்பட்டார்.
அவரது பெருமைகளை இன்றைய நாளில் நாம் நினைவு கூருவோம். அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கல்லூரி முதல்வர் கொட்டூர் தொடங்கி வைத்தார்
- நோயாளிகளுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் இளநிலை மருத்துவம் பயின்ற மாணவர்கள் நேரடியாக நோயாளிகளுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இம்மாணவர்கள் அச்சமின்றி நேர்த்தியான சிகிச்சை அளிக்க ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவ திறன் ஆய்வகம் மற்றும் சிம்புதேவன் சென்டர் லேர்டல் இணைந்து பூட்கேம்ப் எனப்படும் துரிதப்படுத்தப்பட்ட தீவிரமான பயிற்சி தொடங்கி உள்ளது.
முதல் முறையாக தென்னிந்தியாவிலேயே புதுவையில்ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியில் 2 நாள் பயிற்சி பயிலரங்கம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் கொட்டூர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுகாதார தொழில்முறை கல்வி முதல்வர் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணுபட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மனித இயக்கத்து டன் உள்ள பொம்மையில் ரத்த மாதிரி சேகரித்தல், கேத்திடர் டியூப் பொருத்து தல், பிரசவ முறை, சுவாச குழாய் பொருத்துதல் போன்ற 15 செயல்திறன் கற்றல் பயிற்சி அளிக்கப் பட்டது.
இந்த பயிற்சியை 15 மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லு நர்களுடன் 100 பேருக்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மயக்கவியல் துறை தலைவர் எழில் ராஜன், ராஜ்குமார் கொண்ட குழு ஏற்பாடு செய்திருந்தது.
- லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- சாலை மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் சாலை மேம் படுத்துதல் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை பணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ரூ. 25 லட்சம் மதிப்பில் கோர்க்காடு இடுகாட்டு சாலை மேம்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் மாணிக்க சாமி மற்றும் இளநிலை பொறியாளர் அய்யப்பன் உட்பட கட்சி பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கண் தானம் செய்தவர்களுக்கு நன்கொடை
- காளியம்மாள் ஆகியோர் குடும்பத்தினருக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
திருக்கனூர் லயன்ஸ் சங்கத்தின் 2023-2024-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் விஜயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் புதிய தலைவராக திருக்கனூர் அசார் என்கிற முகமது அசாருதீனும், செய லாளராக மண்ணாடிப்பட்டு இளங்கோவன், பொருளாள ராக திருக்கனூர் செல்வ குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு லயன்ஸ் சங்கம் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் திருக்கனூர் லயன்ஸ் சங்கத்தில் கண்தானம் செய்த கூனிச்சம்பட்டைச் சேர்ந்த ராஜம் அம்மாள், காளியம்மாள் ஆகியோர் குடும்பத்தினருக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கப்பட்டது.
- ரூ.15 ஆயிரமாக வழங்க வேண்டும்
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
புதுச்சேரி:
மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி புதுவை யில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.
இடைக்கால நிவாரண மாக மீனவ குடும்பங்களுக்கு புதுவை அரசு வழங்கும் ரூ.6 ஆயிரத்து 500 ஆயிரம் போதுமானது அல்ல. ஏற்கனவே 45 நாட்கள் அறிவிக்கப்பட்ட தடை காலம் 2017ம் ஆண்டு முதல் 61 நாட்களாக அமல்படு த்தப்படுகிறது.
புதுவையில் 18 மீனவ கிராமங்களில் 360 விசைபடகுகளும், ஆழ்கடலுக்கு செல்லும் 50 பெரும் விசைப்படகுகளும், மீன் பிடிதொழிலுக்கு பயன்படுத்தப் பட்டு வருகிறது.
இந்த தொழிலை நம்பி சுமார் 19 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாது காப்பாக நிறுத்துவதோடு படகுகள் மற்றும் எஞ்ஜின், வலைகளை ரிப்பேர் செய்வ தற்கான ெசலவுகளும் அதிகரித்து உள்ளன.
வருமானம் இல்லாத நிலையில் மீனவ குடு ம்பங்கள் பசி பட்டினியால் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே நிவாரண தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 4-வது மாடியில் இருந்து குதித்தார்.
- உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
தமிழ்நாட்டை சேர்ந்த மயிலாடுதுறை அருகே உள்ள தர்மபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி.
இவரது மகன் கார்த்திகேயன் (38).இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார்என்ஜீனியரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்தபோது மன நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள பெரம்பூர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வருடமாக திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி வழக்கம் போல் சிகிச்சைக்காக பெற்றோருடன் வந்த கார்த்திகேயன் ஆஸ்பத்திரியில் மன வேதனையுடன் தனது அம்மாவுடன் உட்கார்ந்து இருந்தார்.
அப்போது திடீரென எழுந்து ஓடிய கார்த்திகேயன் ஆஸ்பத்திரியில் இருந்த 4 மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அதேஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.இந்நிலையில் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவலறிந்த திருபுவனை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கருவடிக்குப்பத்தில் இயங்கி வருகிறது.
- கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் இயங்கி வரும் எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் 11-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
மருத்துவ மையத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனர் டாக்டர் எம்.ஆர்.வித்யா தலைமையில், இணை மருத்துவ இயக்குனர் டாக்டர் தேவநாதன், டாக்டர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
விழாவில் பொறியாளர் வாசு கலந்து கொண்டு, எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் பணியாற்றி வரும் ஊழி யர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் டாக்டர் எம்.ஆர்.வித்யா பேசுகையில், இந்த மருத்துவ மையமானது கடந்த 11 ஆண்டுகளாக புதுவை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்து வருகிறது.
பல்லாயிரக்கணக்கான அறுவை சிகிக்சைகள் மற்றும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹீமோடயலிஸிஸ் மூலம் மருத்துவ சேவையாற்றி, நமது தரமான மருத்துவ சேவைக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் மற் றும் என்.ஏ.பி.எச். என்ட்ரி லெவல் அங்கீகாரம் ஆகியவைகள் பெற்றுள்ளோம். புதிதாக நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட விபத்து மருத்துவப்பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
- பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
- 200 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்னாத்தா அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவ- மாணவிக ளுக்கு பிற்படுத்தப்பட்டடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 200 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் குமரன், உதவி இயக்குனர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- கட்சியினர் ரகுராமன்,லாரன்ஸ், மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு சமூக நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்.
பயனாளிகளுக்கு நிதி உதவி அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் தோறும் செலுத்தப்படும்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்தி வேல், துணைத் தொகுதி செயலாளர் ஆரோக்கிய ராஜ், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளை செயலாளர் செல்வம் மற்றும் கட்சியினர் ரகுராமன், லாரன்ஸ், மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பள்ளி முதல்வர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
- சைக்கிள் வழங்கும் விழா நடந்தது
புதுச்சேரி:
புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக திட்டம் நிறுத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வந்த இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. தற்போது திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மங்களம் தொகுதி கணுவாப்பேட்டை பகுதி யில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி முதல்வர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தன செல்வன் நேரு முன்னிலை வகித்தார்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மாணவர்க ளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.அதன்படி 9-ம் வகுப்பு மாணவர்கள் 53 பேருக்கு இலவச சைக்கிளும், 7-ம் வகுப்பு மாணவர்கள் 41 பேருக்கு இலவச யோகா மேட்டும், 2ம் வகுப்பு மாணவர்கள் 16 பேருக்கு இலவச துண்டும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை போக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா பங்கேற்றார்.
- பேருந்துகளை மாற்றம் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கள் அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் டெல்லியில் அனைத்து மாநில போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் புதுவை போக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா பங்கேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசு ம்போது, புதுவை அரசின் பி.ஆர்.டி.சி.க்கு சொந்தமான பேருந்துகளை மாற்றம் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும். புதுவையின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி தொகுப்பில் புதுவைக்கும் ஒதுக்கீடு வழங்கி போதுமான பஸ்கள் வழங்க வேண்டும்.
புதிய விதியின் கீழ் சுற்றுலா பர்மிட் வழங்குவதில் உள்ள இடர்பாடுகள், சாலைப் பாதுகாப்பிற்கு மத்திய அரசு மூலம் தனி நிதி ஒதுக்கீடு, மின்னனு வாகனப் பயன்பாட்டிற்கான ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் புதுவையை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு சந்திர பிரியங்கா பேசினார்.
- புதுவை நண்பேன்டா கில்லி குரூப் சார்பில் மாநில அளவிலான கில்லி போட்டி நடந்தது.
- எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுவை நண்பேன்டா கில்லி குரூப் சார்பில் மாநில அளவிலான கில்லி போட்டி நடந்தது.
போட்டி தொடக்க விழா வுக்கு தொகுதி தி.மு.க. செயலாளர் மோகன், மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர் வீரய்யன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
போட்டியை மாநில தி.மு.க. அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டியில் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கில்லி விளையாட்டு குழுவினர் பங்கேற்றனர். பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியில தொகுதி செயலாளர்கள் மணிகண்டன், சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வநாதன், தர்மராஜ், முருகையன், அங்காளன், செல்வநாதன், மிலிட்டரி முருகன், அரிகிருஷ்ணன், மந்திரிகுமார், ரமணன், கார்த்திகேயன், அன்பு, தயாளன், அஞ்சாபுலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






