என் மலர்
புதுச்சேரி

தார்சாலை, வடிகால் வசதியை லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
தார்சாலை, வடிகால் வசதி
- லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- சாலை மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் சாலை மேம் படுத்துதல் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை பணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ரூ. 25 லட்சம் மதிப்பில் கோர்க்காடு இடுகாட்டு சாலை மேம்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் மாணிக்க சாமி மற்றும் இளநிலை பொறியாளர் அய்யப்பன் உட்பட கட்சி பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






