search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drainage facility"

    • ரூ.9 1/2 லட்சம் செலவில் யூ வடிவ வாய்க்காலுடன் சிமெண்டு குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது.
    • இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் புதுவை நகராட்சி சார்பில் ரூ.9 1/2 லட்சம் செலவில் யூ வடிவ வாய்க்காலுடன் சிமெண்டு குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது.

    இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், பரமானந்தம், ஒப்பந்ததாரர் அழகேசன், தொகுதி செயலாளர் சக்திவேல், கட்சி நிர்வாகிகள் ராஜி, விநாயகமூர்த்தி, நோயல், முரளி, கோபி, காளப்பன், மோரீஸ், ரகுமான், பாஸ்கல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதிய சாலை பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்பதால், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சாலையோரம் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது.

    கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் பயணிகளுக்கு நிழற்கூடம் அமைக்கவில்லை.மழை பெய்யும் போது பயணிகள் நனைந்தபடி நின்று பயணம் செய்து வருகின்றனர்.

    குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீர் காரணமாக இவ்வழியே வாகனங்கள் மூலம் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

    பேரூராட்சி நிர்வாகம் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் போதிய வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • சாலை மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் சாலை மேம் படுத்துதல் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை பணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ரூ. 25 லட்சம் மதிப்பில் கோர்க்காடு இடுகாட்டு சாலை மேம்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் மாணிக்க சாமி மற்றும் இளநிலை பொறியாளர் அய்யப்பன் உட்பட கட்சி பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சாலைகள் சீரமைக்கப்படாததால் கோடை சீசன் துவங்குவதற்கு முன்னரே சீரமைக்கப்படாததால் சீசன் நேரத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • ஆங்காங்கே எரிச்சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல்-பழனி சாலை, கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலைகள் கோடை சீசன் துவங்குவதற்கு முன்னரே சீரமைக்கப்படாததால் சீசன் நேரத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அதிகமான சுற்றுலா பயணிகள் பழனி- கொடைக்கானல் சாலையில் வரும் வேளையில் சாலையின் ஓரத்தில் வடிகால் வாய்க்கால் அமைப்பதாக கூறி சாலையை சுருக்கி அமைத்து பணி செய்ததால் அவதி அடைந்தனர்.

    இது ஒரு புறம் இருக்க, கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலைகளில் இதே நிலையே தொடர்ந்தது. இப்பகுதியிலும் வடிகால் வாய்க்கால் அமைப்பதாக கூறி சாலையை சுருக்கியுள்ளனர்.

    பல மாவட்டங்களில் நான்கு வழிச்சாலை எட்டு வழி சாலை என பணிகள் நடந்து வரும் வேளையில் கொடைக்கானல் மலைச் சாலைகள் ஒரு வழிப்பாதையாக சுருங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.

    பழனிச்சாலை, வத்தலகுண்டு சாலைகளில் அமைக்கப்பட்டு வரும் வாய்க்கால்களை அகற்றி முறையாக சாலைகளை விரிவாக்கம் செய்ய சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சாலைகளை சுருக்கி வடிகால் அமைக்கும் பணிகளால்போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது.

    குறிப்பாக பழனிசாலையில் ஒரு சில வளைவுகளில் வடிகால் வாய்க்கால் அமைத்ததால் எதிர் எதிர் வரும் பேருந்துகள் சாலைகளை கடந்து செல்வதில் கடும் இன்னல் ஏற்பட்டு வருகிறது.

    கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் நகராட்சி மூலம் பல கோடி திட்ட மதிப்பீட்டில் நடைமேடை, சைக்கிளில் செல்வோர், குதிரை சவாரி செய்வோர், வாகனங்களில் செல்வோர் என அனைவருக்கும்தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்பட இருப்பதாக திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    தற்போது அந்தப் பணிகள் தாமதமாகி வருவதால் எப்போது பணிகள் நடக்கும் என்று எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.ஏரி சாலையை சுற்றி தற்போதுமுறையான சமதளத்தில் சாலைகளை அமைக்காததால் ஆங்காங்கே தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. சாலையின் ஒரு சில பகுதிகளில் முறையாக வடிகால் அமைக்காததால் சாலைகளிலேயே தண்ணீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் சைக்கிள் சவாரி செய்வோர், குதிரை சவாரி செய்வோர், நடைப்பயிற்சி செய்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏரிச்சாலைகளில் செல்லும் அதிவேக வாகனங்களால் சுற்றுலா பயணிகள் மீதும் பொதுமக்கள் மீதும் தண்ணீர் தெறித்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    ஆங்காங்கே எரிச்சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×