search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரிச்சாலையா? நீச்சல் குளமா? வடிகால் வசதி இல்லாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு கொடைக்கானலில் தீராத துயரம்
    X

    ஏரிச்சாலையில் தேங்கியுள்ள நீரில் திக்குமுக்காடி செல்லும் வாகனங்கள்.

    ஏரிச்சாலையா? நீச்சல் குளமா? வடிகால் வசதி இல்லாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு கொடைக்கானலில் தீராத துயரம்

    • சாலைகள் சீரமைக்கப்படாததால் கோடை சீசன் துவங்குவதற்கு முன்னரே சீரமைக்கப்படாததால் சீசன் நேரத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • ஆங்காங்கே எரிச்சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல்-பழனி சாலை, கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலைகள் கோடை சீசன் துவங்குவதற்கு முன்னரே சீரமைக்கப்படாததால் சீசன் நேரத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அதிகமான சுற்றுலா பயணிகள் பழனி- கொடைக்கானல் சாலையில் வரும் வேளையில் சாலையின் ஓரத்தில் வடிகால் வாய்க்கால் அமைப்பதாக கூறி சாலையை சுருக்கி அமைத்து பணி செய்ததால் அவதி அடைந்தனர்.

    இது ஒரு புறம் இருக்க, கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலைகளில் இதே நிலையே தொடர்ந்தது. இப்பகுதியிலும் வடிகால் வாய்க்கால் அமைப்பதாக கூறி சாலையை சுருக்கியுள்ளனர்.

    பல மாவட்டங்களில் நான்கு வழிச்சாலை எட்டு வழி சாலை என பணிகள் நடந்து வரும் வேளையில் கொடைக்கானல் மலைச் சாலைகள் ஒரு வழிப்பாதையாக சுருங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.

    பழனிச்சாலை, வத்தலகுண்டு சாலைகளில் அமைக்கப்பட்டு வரும் வாய்க்கால்களை அகற்றி முறையாக சாலைகளை விரிவாக்கம் செய்ய சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சாலைகளை சுருக்கி வடிகால் அமைக்கும் பணிகளால்போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது.

    குறிப்பாக பழனிசாலையில் ஒரு சில வளைவுகளில் வடிகால் வாய்க்கால் அமைத்ததால் எதிர் எதிர் வரும் பேருந்துகள் சாலைகளை கடந்து செல்வதில் கடும் இன்னல் ஏற்பட்டு வருகிறது.

    கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் நகராட்சி மூலம் பல கோடி திட்ட மதிப்பீட்டில் நடைமேடை, சைக்கிளில் செல்வோர், குதிரை சவாரி செய்வோர், வாகனங்களில் செல்வோர் என அனைவருக்கும்தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்பட இருப்பதாக திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    தற்போது அந்தப் பணிகள் தாமதமாகி வருவதால் எப்போது பணிகள் நடக்கும் என்று எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.ஏரி சாலையை சுற்றி தற்போதுமுறையான சமதளத்தில் சாலைகளை அமைக்காததால் ஆங்காங்கே தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. சாலையின் ஒரு சில பகுதிகளில் முறையாக வடிகால் அமைக்காததால் சாலைகளிலேயே தண்ணீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் சைக்கிள் சவாரி செய்வோர், குதிரை சவாரி செய்வோர், நடைப்பயிற்சி செய்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏரிச்சாலைகளில் செல்லும் அதிவேக வாகனங்களால் சுற்றுலா பயணிகள் மீதும் பொதுமக்கள் மீதும் தண்ணீர் தெறித்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    ஆங்காங்கே எரிச்சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×