என் மலர்

  புதுச்சேரி

  புதிய தொழில்நுட்பத்துடன் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி
  X

  மருத்துவ மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் கொட்டூர் பயிற்சி அளித்த காட்சி.

  புதிய தொழில்நுட்பத்துடன் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லூரி முதல்வர் கொட்டூர் தொடங்கி வைத்தார்
  • நோயாளிகளுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.

  புதுச்சேரி:

  புதுவை கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் இளநிலை மருத்துவம் பயின்ற மாணவர்கள் நேரடியாக நோயாளிகளுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.

  இம்மாணவர்கள் அச்சமின்றி நேர்த்தியான சிகிச்சை அளிக்க ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவ திறன் ஆய்வகம் மற்றும் சிம்புதேவன் சென்டர் லேர்டல் இணைந்து பூட்கேம்ப் எனப்படும் துரிதப்படுத்தப்பட்ட தீவிரமான பயிற்சி தொடங்கி உள்ளது.

  முதல் முறையாக தென்னிந்தியாவிலேயே புதுவையில்ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியில் 2 நாள் பயிற்சி பயிலரங்கம் நடத்தப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் முதல்வர் கொட்டூர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுகாதார தொழில்முறை கல்வி முதல்வர் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணுபட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதில் மனித இயக்கத்து டன் உள்ள பொம்மையில் ரத்த மாதிரி சேகரித்தல், கேத்திடர் டியூப் பொருத்து தல், பிரசவ முறை, சுவாச குழாய் பொருத்துதல் போன்ற 15 செயல்திறன் கற்றல் பயிற்சி அளிக்கப் பட்டது.

  இந்த பயிற்சியை 15 மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லு நர்களுடன் 100 பேருக்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியை மயக்கவியல் துறை தலைவர் எழில் ராஜன், ராஜ்குமார் கொண்ட குழு ஏற்பாடு செய்திருந்தது.

  Next Story
  ×