என் மலர்
புதுச்சேரி
- அங்காளன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
- இளநிலைப் பொறியாளர் தமிழரசன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை செல்லிப்பட்டு சாலை, விநாயகம்பட்டு, சோரப்பட்டு இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்து டனே அவ்வழியாக பொதுமக்கள் வாகனத்தில் சென்று வந்தனர் இந்நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறையின் மூலம் ரூ. ஒரு கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு செல்லிப்பட்டு, விநாயகபட்டு , சோரப்பட்டு இணைப்பு சாலையை மறு சீர் அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அங்காளன் எம்.எல்.ஏ.கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜீ, உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பாகூர் ஆல்பா இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
- பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.
புதுச்சேரி:
பாகூர் ஆல்பா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்களிடையே சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் மரத்துக்கு பெயர்சூட்டும் விழா மற்றும் கை வினை கண்காட்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் இயக்குனர் தனதியாகு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக செந்தில்குமார் எம்.எல்.ஏ., புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களுக்கு மாணவர்களின் பெயர்களை சூட்டினர்.
இதனை தொடர்ந்து கை வினை கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் சுற்றுச்சூழல், இயற்கை என பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பார்வையிட்டனர்.
- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
- மதுபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினருமான, முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் புதுவையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் துரைப்பாக்கம் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டேங்கர் லாரி ஒன்று மல்லாடி கிருஷ்ணா ராவ் காரின் மீது மோதியது.
இதில் நின்று கொண்டிருந்த கார், அதற்கு முன்னால் நின்றிருந்த மற்றொரு லாரியின் பின்புறம் மோதியது. இதில் காரின் முன்பக்கம் முழுவதும் முன்னால் நின்ற லாரியின் அடிப்பாகத்தில் சிக்கி பலத்த சேதமடைந்தது.
காரின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்தன. இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் உயிர் தப்பினார். அவரது பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார், மற்றும் டிரைவர் ஆகியோரும் உயிர் தப்பினர்.
பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் உடனடியாக காரில் இறங்கி தப்பியோட முயன்ற லாரி டிரைவரை மடக்கிப் பிடித்தார். அவர் மதுபோதையில் லாரியை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கிண்டி போக்குவரத்து போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர் பல்லாவரத்தை சேர்ந்தவர் என்பதும், மதுபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் சேதமடைந்ததால் முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆட்டோவில் ஏறி மீனம் பாக்கம் விமான நிலையம் சென்று விமானத்தில் ஐதராபாத் சென்றார்.
- ஓம்சக்தி சேகர் உறுதி
- இதில் நடராஜன், கோவிந்தராஜ்,நாகராஜ், இளம்வழுதி, இளங்கோ, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
மாநாடு குறித்து புதுவை மாநில ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோ சனை கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்.சக்திசேகர் தலைமையில் லெனின் வீதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருச்சி மாநாட்டில் புதுவை மாநிலம் சார்பில் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்ற பட்டது.கூட்டத்தில் ஓம்சக்தி சேகர் பேசியதாவது:-
ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். மாநாட்டிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் கரம் மீண்டும் வலுப்படும். அ.தி.மு.க.வை ஆக்கிரமிக்க நினைக்கும் சுயநல சக்திகளின் எண்ணம் தவிடு பொடியாகும். தமிழக அரசியலில் திருச்சி மாநாடு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு ஓம்சக்தி சேகர் பேசினார்.
கூட்டத்தில் மாசிலா குப்புசாமி, மகேஸ்வரி,சதாசிவம்,செல்வராஜ்,விஜயலட்சுமி,கோவிந்தம்மாள்,முருகன்,வெரோனிகா,சேகர், ராதாகிருஷ்ணன், அப்பாவு, வெங்கடேசன்,நாக லோகநாதன், சுந்தரமூர்த்தி, அய்யப்பன், கலியபெருமாள், புஷ்பராஜ், வினோபா நகர் சுப்பிரமணி, நடராஜன், கோவிந்தராஜ்,நாகராஜ், இளம்வழுதி, இளங்கோ, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- இதில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
புதுச்சேரி:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெரிய பள்ளியில் சுமார் 600-க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச புடவை,கயிலி மற்றும் மளிகை பொருட்களை புதுவை மாநில தி.மு.க துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில், பெரிய பள்ளி வார்டில் ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான ஏழை எளிய மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் பொருட்களை வழங்கி ரமலான் வாழ்த்துக்களை கூறினர். தொகுதி செயலாளர் சக்திவேல், துணை தொகுதி செயலாளர் ராஜி மற்றும் நாசர், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி , தி.மு.க. இளைஞர்அணி முஹம்மத் இர்பான், ஜாவித், அனஸ், அஜ்மல், ரஹ்மான், இர்பான், உமர், விஷ்வா மாலிக், நவீன் உடன் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவையில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
- கொரோனாவுக்கு முதியவர் பலியாகியுள்ளார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
புதுவையிலும் சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து பின் குறைந்தது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு முதியவர் பலியாகியுள்ளார். இதனால் புதுவையில் கொரோனாவுக்கு பலியா னவர்கள் எண்ணிக்கை 1,979 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து புதுவை கவர்னர் தமிழிசை சுகாதாரத்துறை அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், கவர்னரின் தனி செயலாளர் அபிஜித்விஜய் சவுத்ரி, இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அரசு மருத்துவமனைகளின் முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- 60 வயதை கடந்த முதியவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு கருவூல அலுவலகங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினர் 2023-ம் ஆண்டுக்கான வாழ்வாதார உறுதி சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலுவலத்திற்கு நேரில் வந்தோ, அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அளித்த சான்றிதழ் மூலமாகவே, இணையதளம், தபால் அலுவலக சேவை மூலமாகவே சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என கருவூலகத்துறை இயக்குனர் கெடு விதித்துள்ளார்.
சான்றிதழ் சமர்பிக்க தவறினால் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.புதுவையில் பல ஆயிரக்க ணக்கானவர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதில் 60 வயதை கடந்த முதியவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
குறிப்பாக முத்தி யால்பேட்டை தொகுதியில் மட்டும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் இந்த ஓய்வூதியத்தை பெறுகின்றனர். புதுவையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது.முதியோர், குழந்தைகள் வெயில் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என அரசின் சுகாதாரத்துறையே அறிவிப்பு செய்துள்ளது.
இந்த சூழலில் வாழ்வாதார சான்றிதழ் சமர்பிக்க முதியவர்களை கடுமையான வெயிலில் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கடும் வெயிலில் கருவூலகத்துறை அலுவலகத்திற்கு நேரில் முதியவர்கள் வந்து செல்ல முடியாது. பிற வழிகளில் சான்றிதழ் பெறவும் முதியோர் அலைக்கழிக்கப்படுவர்.
எனவே அரசின் அங்கன்வாடி ஊழியர்கள், அல்லது பிற அரசு பணியாளர்கள் மூலம் அந்தந்த பகுதியில் ஓய்வூதியம் பெறுவோரின் வீட்டுக்கே சென்று முதியோர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்த கணக்கெ டுப்பின்படி சான்றிதழை ஏற்று ஓய்வூதி யதாரர்க ளுக்கும், ஓய்வூதியதா ரர்களின் குடும்பத்திற்கும் ஓய்வூதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- ஆசை அதிகமான நாகேஸ்வரி ரூ.1 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.
- சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை கூடப்பாக்கம் மேலக்கரை வீதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி .
இவர் இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் கிரிப்டொ கரன்சியில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபத்தை பெறலாம் என கவர்ச்சிகரமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை நம்பி நாகேஸ்வரி முதலில் ரூ.4ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார். உடனே இருமடங்கு பணம் வந்துள்ளது. பின்னர் படிப்படியாக பணத்தை முதலீடு செய்வதை அதிகரித்துள்ளார். அதற்கான இரட்டிப்பு பணம் வரவே, ஆசை அதிகமான நாகேஸ்வரி ரூ.1 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அதற்கான இருமடங்கு பணம் வரவில்லை.
அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரி குறிப்பிட்ட இணையதளத்தை தொடர்பு கொண்டபோது, இன்னும் அதிக பணம் முதலீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய நாகேஸ்வரி ரூ.4 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் உரிய தொகையை தராமல் அந்த தளம் முடக்கப்பட்டிருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாகேஸ்வரி வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பாலத்தின் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
- அவரது நண்பர்கள் மீட்டு அரியூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 29)எலக்ட்ரிஷியன்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.சில நாட்களுக்கு முன்னர் விநாயகமூர்த்தி, தினேஷை தாக்கியுள்ளார். இதுகுறித்து தினேஷ் தனது கடை உரிமையாளர் ஆனந்தகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு விநாயமூர்த்தி தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தினேசுடன் வந்த ஆனந்தகுமார், என் கடையில் வேலை பார்க்கும் தினேசை ஏன் அடித்தாய் என கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.
ஆனந்தகுமார் வைத்திருந்த கத்தியை எடுத்து விநாயகமூர்த்தியை வெட்டியுள்ளார். அவர் தடுத்தபோது அவரது கையில் வெட்டு விழுந்துள்ளது. காயமடைந்த விநாயகமூர்த்தியை அவரது நண்பர்கள் மீட்டு அரியூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கலால்துறை அதிரடி
- மது அருந்தி விட்டு சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்வது தொடர்கிறது.
புதுச்சேரி:
புதுவையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு ள்ளது.
இவை நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவில் மது அருந்தி விட்டு சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்வது தொடர்கிறது.
இதுபோன்ற சம்பவத்தில் என்ஜினீயர் ஒருவர் இறந்தார். இதையடுத்து ரெஸ்டோ பார்களை கண்காணிக்கவும், நள்ளிரவில் ரோந்து சுற்றவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து புதுவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தர வின்படி ரெஸ்டோ பார்கள், பப்புகள், குறிப்பிட்ட நேரத்தில் மூடப்படுகிறதா? என கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கலால் ஆய்வாளர் ஜோதிவெங்கடேஸ்வர ராவ் மற்றும் போலீசார் நள்ளிரவு ரெஸ்டோ பார்களில் திடீர் சோதனை நடத்தினர்.
லாஸ்பேட்டை வாட்டர் டேங்க் அருகில் உள்ள பாரில் நடந்த சோத னையின் போது 12 மணிக்கு பார் மூடப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. சவுண்ட் ப்ரூப் கதவுகள் உள்ளதா? என அதிகாரிகள் சோதனையிட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு முன்பாகவே பார்களை மூட வேண்டும் என பார் மேலாளரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
- தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் வெனிசா.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி நவசக்தி நகரில் வசிப்பவர் ராஜ்மோகன்.
இவரின் மனைவி தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வெனிசா (வயது 54). தென்னாப்பிரிக்கா காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று புதுவையில் வசித்து வருகிறார். தனது வீட்டு அலமாரியில் வைத்திருந்த நகையை சரிபார்த்தார்.
அப்போது 1 பவுன் செயின் , 7 பவுன் தாலி செயின் உள்பட பவுன் நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். வீட்டில் வேலை செய்து வந்த சரஸ்வதி மீது சந்தேகப்படுவதாக குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருபுவனையில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
- ஆலையை திறப்பதற்கு அரசு முன்வரவில்லை.
புதுச்சேரி:
திருபுவனை கூட்டுறவு நூற்பாலை கடந்த 11 மாதமாக இயங்காமல் மூடி கிடக்கின்றது. அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் 600 க்கும் மேற்பட்டோர் வேலை இழந்து ஆலையை எப்போது திறப்பார்கள் என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு கட்ட போராட்டங்களை தொழிற்சங்கங்கள் நடத்திய போதும் இதுவரை ஆலையை திறப்பதற்கு அரசு முன்வரவில்லை.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசின் சார்பில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளனர் ஆனால் திருபுவனை கூட்டுறவு நூற்பாலை இயக்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் அரசு இதுவரை எடுக்காத காரணத்தை கருத்தில் கொண்டு வருகின்ற ஏப்ரல் 26-ந் தேதி காலை 10 மணி அளவில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள், தலைமையில் தொழிலாளர்கள், ஊழியர்கள் தொழிற்சாலையின் கதவுகளை திறந்து அங்குள்ள இயந்திரங்களை இயக்குவது என்று முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்காக நடைபெற்ற வாயிற் கூட்டத்தில் ஸ்பின்கோ பி.எம்.சி தொழிற்சங்க தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.
தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் நடராஜன், ஸ்பின்கோ தொழிலாளர்கள் யூனியன் துணைத் தலைவர் சிவகடாட்சம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






