என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூட்டுறவு நூற்பாலையை இயக்ககோரி  போராட்டம் நடத்த முடிவு
    X

    ஸ்பின்கோ தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் வாயிற்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம்.

    கூட்டுறவு நூற்பாலையை இயக்ககோரி போராட்டம் நடத்த முடிவு

    • திருபுவனையில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
    • ஆலையை திறப்பதற்கு அரசு முன்வரவில்லை.

    புதுச்சேரி:

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலை கடந்த 11 மாதமாக இயங்காமல் மூடி கிடக்கின்றது. அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் 600 க்கும் மேற்பட்டோர் வேலை இழந்து ஆலையை எப்போது திறப்பார்கள் என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு கட்ட போராட்டங்களை தொழிற்சங்கங்கள் நடத்திய போதும் இதுவரை ஆலையை திறப்பதற்கு அரசு முன்வரவில்லை.

    நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசின் சார்பில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளனர் ஆனால் திருபுவனை கூட்டுறவு நூற்பாலை இயக்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் அரசு இதுவரை எடுக்காத காரணத்தை கருத்தில் கொண்டு வருகின்ற ஏப்ரல் 26-ந் தேதி காலை 10 மணி அளவில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள், தலைமையில் தொழிலாளர்கள், ஊழியர்கள் தொழிற்சாலையின் கதவுகளை திறந்து அங்குள்ள இயந்திரங்களை இயக்குவது என்று முடிவு செய்துள்ளனர்.

    இந்த போராட்டத்திற்காக நடைபெற்ற வாயிற் கூட்டத்தில் ஸ்பின்கோ பி.எம்.சி தொழிற்சங்க தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.

    தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் நடராஜன், ஸ்பின்கோ தொழிலாளர்கள் யூனியன் துணைத் தலைவர் சிவகடாட்சம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×