என் மலர்
புதுச்சேரி
- எஸ். டி. சேகர் திறந்து வைத்தார்
- ஆறுமுகம், மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆணைக்கிணங்க மக்கள் தாகம் தீர்க்கும் நீர், மோர் பந்தல் வில்லியனூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அலுவலக வாயிலில் மாநிலக் செயலாளர் எஸ். டி சேகர் அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர் லாவண்யா ரகுபதி, துணை செயலாளர்கள் சிலம்பரசன், தமிழரசி, கலைவாணி, மகளிர் அணி செயலாளர் காமாட்சி புஷ்பா, அணி செயலாளர்கள் இளம்வழுதி, ஜான்சன், ஜெகதீஷ், பாலு, வைத்தியநாதன், தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், தனவேல், செந்தில் என்ற குமாரவேல், சிவகுமார், ஆறுமுகம், மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- 8-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் நூறுக்கும், முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்கள் நூறுக்கும் என குறிப்பிட்டு தேர்ச்சி அட்டவணையில் குறிப்பிட வேண்டும்.
- 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித்தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையில் கோடை வெப்பம் அதிகரிப்பு காரணமாக புதுவை மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முன்னரே இறுதி தேர்வு அறிவிக்கப்பட்டது.
தேர்வுகள் நேற்று முன்தினம் முடிந்தது. நேற்றோடு 10-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்தது. இதனால் புதுவை - காரைக்கால் மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுவை கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
8-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் நூறுக்கும், முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்கள் நூறுக்கும் என குறிப்பிட்டு தேர்ச்சி அட்டவணையில் குறிப்பிட வேண்டும்.
9-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித்தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தேர்ச்சி பட்டியலை தயாரிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோர் விவரங்கள் அடங்கிய பட்டியலை கல்வி துறைக்கு சமர்பிக்க வேண்டும். அப்போது இயக்குநரகத்தால் தரப்பட்ட பள்ளி அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் அங்கீகார உத்தரவின் நகலை தனியார் பள்ளிகள் இணைக்க வேண்டும்.
எல்.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரையிலான கோடைவிடுமுறை நேற்று முதல் தொடங்கியது. இதை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 2மாதங்களில் 8 பேர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துள்ளனர்.
- வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் லிங்கில் வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்யாதீர்கள்.
புதுச்சேரி:
புதுவையில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகளவில் நடந்து வருகிறது.
பகுதிநேர வேலை, சினிமா விமர்சனம், பணம் இரட்டிப்பு என பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதில் பணத்தை இழந்தவர்கள் பெரும்பாலனவர்கள் வெளியில் சொல்வதில்லை. அதேநேரத்தில் சைபர் கிரைம் போலீசார் பண மோசடி குறித்து வெளிப்படையாக புகார் தெரிவிக்க வரும்படி அழைப்பு விடுக்கின்றனர்.
மோசடிகளை கண்டறிய நவீன மென்பொருட்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2மாதங்களில் 8 பேர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.2 கோடி அளவில் பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சில மோசடி நபரை கைது செய்துள்ளனர்.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் லிங்கில் வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் அதிக பணத்தை இழக்க நேரிடும் என சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி. விஷ்ணு, இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- அரிச்சந்திரன் கோவிலை புனரமைக்க வேண்டும்.
- உழவர்கரை நகராட்சியிடம் அனுமதிபெறவில்லை எனக்கோரி பணிகளை நிறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி:
கருவடிகுப்பம் சுடுகாடு நுழைவுவாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோவில் பழுதடைந்துள்ளது.
இந்த கோவிலை புனரமைக்கும் பணியில் நந்தீஸ்வரர் அறக்கட்டளை மற்றும் மாநில ஒருங்கிணைந்த சிவனடியார் பக்தர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
2 ஆண்டாக நடைபெறும் பணிக்கு இந்து அறநிலையத்துறை, உழவர்கரை நகராட்சியிடம் அனுமதிபெறவில்லை எனக்கோரி பணிகளை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சிவன டியார்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோவில் புனரமைப்பு பணிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- சங்க தலைவர் முருகன் பிரபாகரன் தேவா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மணவெளி விக்டோரியா நகர், டோல்கேட் அரவிந்த நகர் பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 23¼ லட்சம் செலவில் சாலை, வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதற்கான பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, பா.ஜனதா நிர்வாகிககள் லட்சுமி காந்தன், சக்திபாலன் அறங்காவல் குழு தலைவர் காமராஜ், நாகராஜ், ரஞ்சித், தனுசு, பன்னீர், குமரன், ரமேஷ், ரேவதி, தினகரன், மூர்த்தி, வீராசாமி, அருள்ராஜ், தங்கதுரை, செந்தில், அபிஷேகம், இளஞ்செழியன், சக்திவேல், வேலாயுதம், முகிலால் வருமா, சிவப்பிரகாசம், சபரி, ஹயாத்பாஷா, வேணுகோபால், கதிரேசன், கோபிகிருஷ்ணா, தமிழ்வாணன், வசந்தி ராஜா, முரளி, அரவிந்தர் நகர் குடியிருப்பு சங்க தலைவர் முருகன் பிரபாகரன் தேவா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
- கட்சியின் தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை பத்துக்கண்ணு சந்திப்பில் மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் தலைமையில் நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நீர்மோர் வழங்கும் பணியானது ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து பத்துக்கண்ணு சந்திப்பில் நடைபெறும். இதனை முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் புதுவை மாநில பொதுச் செயலாளர் சங்கர் ஊசுடு வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர்பாபு ரெட்டியார், மாநிலச் செயலாளர் லோகையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அப்பகுதியாக வந்து செல்லும் கனரக வாகன ஓட்டுனர்கள் பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், எஸ்சி, எஸ்டி பிரிவு பொதுச் செயலாளர் சேட்டு என்ற செங்கேணி, ஊசுடு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் வேலு, மாநில சிறப்பு அழைப்பாளர் பாபு என்ற பழனிராஜா மற்றும் தொண்டமானதாம் குமார், ராமநாதபுரம் செல்வமணி, உசுடு தொகுதி பொதுச் செயலாளர்கள் சுபான், ராஜா என்கிற ராஜேந்திரன், சோனி விநாயகம், லோக நாதன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வப் பிரியன், ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேந்தர், ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் உதயகுமார், ஊடக பிரிவு தலைவர் வெங்கடேஷ், காங்கிரஸ் கட்சி உறுப்பி னர்கள் பரமசிவம், பாவாடை ராயன், சக்திவேல், ராஜா, சந்திரன், அங்காளன், வினோத், ஐயப்பன், வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
- குறைகேட்பு கூட்டத்தில் போலீசார் வலியுறுத்தல்.
- பற்றாக்குறைவாக உள்ள போலீசாரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா கலந்து கொண்டு அரியாங்குப்பம், தவளக்குப்பம் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்தக் கூட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தற்கொலை, குற்ற சம்பவங்கள், விபத்தில் சிக்குவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தை போலபுதுவையிலும் வாரிசுதாரர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதால் தங்கள் குடும்பத்தை சரிவர கவனித்துக் கொள்ள முடியாமல் போகிறது. எனவே வார விடுமுறை அளிக்க வேண்டும். குரூப் இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை தொடங்க வேண்டும். குற்றத்தை குறைக்கும் வகையில் தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு நேரத்தில் மின்தடையால் பணிகள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையத்திற்கு என இன்வெர்ட்டர், ஜெராக்ஸ் மிஷின் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் தொகை அதிகரிப்பாலும் குற்றச்சம்பவங்கள் நூதன முறையில் நடந்து வருவதால் பற்றாக்குறைவாக உள்ள போலீசாரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்கு பகுதிக்கென தடுப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கணேசன், இனியவன்,சிவஜான்சன் கென்னடி, சப்- இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், திருமுருகன், போக்குவரத்து போலீஸ் பாஸ்கரன் மற்றும் போலீசார் இருந்தனர்.
- உடனடியாக நிரப்ப அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- புதுவை மாநிலத்தில் அரசு ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.
புதுச்சேரி:
அரசின் அனைத்து துறைகளிலும் உதவியாளர்க ளின் காலி பணியிட எண்ணிக்கை 600க்கும் மேற்பட்டதாகும்.
தற்போது டி.பி., ஏ.ஆர். எனப்படும் பொது நிர்வாக சீர்திருத்த துறையின் நடவடிக்கையால் ஏற்பட்ட குளறுபடி யால் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இதனால் அரசுத்துறை இயங்குவதில் பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதம் எந்த அடிப்படையில் உதவியாளர்கள் பதவி உயர்வு கொடுக்கப்பட்டதோ அதே அடிப்படையில் 7 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து வரும்
யூ.டி.சி. எனப்படும் முதுநிலை எழுத்தர்களை கொண்டு 600 உதவியாளர் பதவிகளை மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
ஆனால் தற்போது டி.பி., ஏ.ஆர். வெளியிட்ட உதவி ஐ.டி.சி.இ. தேர்வால் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 750 யூ.டி.சி. எனப்படும் முதுநிலை எழுத்தர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பதவி உயர்வு சம்பந்தமாக அரசு ஊழியர்கள் தொடுத்துள்ள வழக்கு முடிய எத்தனை மாதங்கள்- ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. டி.பி., ஏ.ஆர். எனப்படும் பொது நிர்வாக சீர்திருத்த துறையால் எடுக்கும் இந்த தவறான கொள்கை முடிவுகளால் யூ.டி.சி., ,எல்.டி.சி. உதவி பதவிகள் மாநிலத்தில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.
அத்தியாவசிய துறையாக கருதப்படும் வருவாய்த்துறை- கலால் துறை-பதிவுத்துறை- போக்குவரத்து துறை- போன்ற இடங்களில் மிகுந்த காலி பணியிடங்கள் உருவாகி மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் அரசு தவிப்பதை மக்கள் விரும்பவில்லை..
முதுநிலை எழுத்தர்களை கொண்டு உதவியாளர்கள் பணி பதவி உயர்வு மூலம் நிரப்பினால் ஏறத்தாழ 800 யூ.டி.சி. பணியிடங்கள் காலியாக இருக்கும். அதை நேரடி நியமனம் மூலம் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால் இந்த சமுதாயத்தில் இருக்கும் இளைஞர்களும் அரசு துறையில் சேருவார்கள் .
எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி இதனை அரசு ஊழியர்கள் பிரச்சனை என்று பாராமல் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனை-சமூகப் பிரச்சனை என்று கருதி பதவிஉயர்வின் மூலம் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என தி.மு.க. சார்பில் வேண்டுகோள் வைக்கின்றேன்.
- சிவா எம்.எல்.ஏ. தி.மு.க.வினருக்கு திடீர் கட்டுப்பாடு
- கட்சி வளர்ச்சிக்காகவோ வைத்திருந்தாலும் கூட அது மக்கள் மத்தியில் தவறாகவே சித்தரிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்,எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
பிறந்த நாள் கொண்டாடுவதை நான் விரும்புவதில்லை. ஆனால் என் மீதுள்ள அன்பின் காரணமாக தி.மு.க நிர்வாகிகள் எனது பிறந்த நாள் விழாவிற்காக பேனர் வைத்திருப்பது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
தி.மு.க தலைவரும், தலைமையும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என கட்டளையிட்டு உள்ளனர்.
விழா, நிகழ்ச்சி பற்றி தெரிவிக்க சம்பந்தப்பட்ட இடத்தில் சிறிய அளவில் பேனர் வைக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைமையின் அறிவிப்பை மீறி திரும்பும் இடமெல்லாம் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலையிலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் பேனர் வைக்கும் செயலை அனுமதிக்க முடியாது.
இது தலைமை கழகத்திற்கு ஏற்புடையதும் அல்ல. பேனர் வைப்பது என்பது என்னை மகிழ்ச்சி படுத்துவதற்காகவோ அல்லது கட்சி வளர்ச்சிக்காகவோ வைத்திருந்தாலும் கூட அது மக்கள் மத்தியில் தவறாகவே சித்தரிக்கப்படுகிறது.
புதுவை மாநிலத்தில் நமது இயக்கம் எதனை நோக்கி பயணிக்கிறதோ அந்த இலக்கை அடைவதற்கு இந்த பேனர் கலாச்சாரம் பெரும் தடையாக இருக்கும் என்பதையும், என்னையும் புதுவை மக்களிடையே சராசரி விளம்பர அரசியல்வாதியாக காட்டிவிடும் என்பதையும் தி.மு.க.வினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், மரியாதை நிமித்தமாக எனக்கு சால்வை மற்றும் மாலை அணிவிப்பதை தவிர்த்து மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்தும் விதத்தில் புத்தகங்களை பரிசளிக்க தலைவர் கட்டையிட்டுள்ளதை பின்பற்ற வேண்டுகிறேன். பேனருக்கும், சால்வை மற்றும் மாலை போன்றவைகளுக்கும் செலவு செய்யும் தொகையை புத்தகங்கள் பரிசளித்தால் புதியதாக திறக்க இருக்கும் லாசுப்பேட்டை, நெல்லித்தோப்பு ஆகிய தி.மு.க அலுவலகங்கள் மற்றும் தொகுதிகள் தோறும் நூலகங்கள் அமைத்து மாணவர்களின் அறிவு வளர்ச்சி பெருக வழிவகுக்கும்.
ஆகவே, தி.மு..கவினர் மக்களை அச்சுறுத்தும் வகையில் பேனர் வைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும். கட்சி கட்டுப்பாடுடன் நமது இலக்கை நோக்கிய பயணத்திற்கு ஒத்துழைப்பை தாருங்கள் என அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ அறிக்கையில் கூறியுள்ளார்.
- தமிழகம் மட்டுமின்றி மும்பை கல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.
- திருநங்கைகளுக்கான அழகி போட்டியும் நடைபெறும்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த பிள்ளையார்க்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டு பழமையான பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந் தேதி ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சியும், மே 2-ந் தேதி இரவு கூத்தாண்டவர் சாமிக்கு திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு திருநங்கைகளுக்கான அழகி போட்டியும் நடைபெறும்.
அழகி போட்டியில் பங்கேற்க திருநங்கைகள் புதுவை, தமிழகம் மட்டுமின்றி மும்பை கல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.
இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 3-ந் தேதி காலை 9.30 மணிக்கு நடக்க உள்ளது மாலை 4.30 மணிக்கு அழுகள நிகழ்ச்சியும், மே 18-ந் தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
- காலாவதியான மது பாட்டில்களை விற்பதாக கூறி தகராறு செய்தார்.
- பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியகோயில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார். வயது (33). இவர் பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று இவர் பணியில் இருந்த போது குருவிநத்தம், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் கடைக்கு வந்து மதுபானங்கள் வாங்கினர். அதில் ஒன்றில் காலாவதியான மது பாட்டில் இருந்ததாக கூறி மணிகண்டன் தகராறு செய்தார். பின்னர் ஒரு கட்டத்தில் கடையை மூட முயற்சித்தார்.
இதனை தடுத்த வசந்தகுமாரை கையால் தாக்கி கடையை இழுத்து மூடி கொளுத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சித்திரை 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
கல்மண்டபம் கிராமத்தில் 80ம் ஆண்டு சிறுத்தொண்ட நாயனார் அமுது படையல் பெருவிழா, மணலிப்பட்டு சைவத்திருமடம் வாமதேவசிவ குமாரசாமி தேசிகப் பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சித்திரை 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து திருமுறை வீதியுலா, சிறுதொண்ட நாயனார் மனைவியிடம் ஆலோசனை கேட்டல், சிறுதொண்டர் சங்கமரை தேடுதல், சங்கமர் பிள்ளைக்கறி வேண்டுல், சீராளனை அழைத்து திருவமுது படைத்தல் ஆகியன நடைபெற்றது. பின்னர் திருவிளக்கு ஏற்றப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவனுக்கு படைக்கப்பட்ட அமுதுபடையல் உணவை உண்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம் . இவ்விழாவில் ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ, சிவனடியார் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






