search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    600-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது
    X

    கோப்பு படம்.

    600-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது

    • உடனடியாக நிரப்ப அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • புதுவை மாநிலத்தில் அரசு ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

    புதுச்சேரி:

    அரசின் அனைத்து துறைகளிலும் உதவியாளர்க ளின் காலி பணியிட எண்ணிக்கை 600க்கும் மேற்பட்டதாகும்.

    தற்போது டி.பி., ஏ.ஆர். எனப்படும் பொது நிர்வாக சீர்திருத்த துறையின் நடவடிக்கையால் ஏற்பட்ட குளறுபடி யால் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

    இதனால் அரசுத்துறை இயங்குவதில் பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதம் எந்த அடிப்படையில் உதவியாளர்கள் பதவி உயர்வு கொடுக்கப்பட்டதோ அதே அடிப்படையில் 7 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து வரும்

    யூ.டி.சி. எனப்படும் முதுநிலை எழுத்தர்களை கொண்டு 600 உதவியாளர் பதவிகளை மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

    ஆனால் தற்போது டி.பி., ஏ.ஆர். வெளியிட்ட உதவி ஐ.டி.சி.இ. தேர்வால் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 750 யூ.டி.சி. எனப்படும் முதுநிலை எழுத்தர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பதவி உயர்வு சம்பந்தமாக அரசு ஊழியர்கள் தொடுத்துள்ள வழக்கு முடிய எத்தனை மாதங்கள்- ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. டி.பி., ஏ.ஆர். எனப்படும் பொது நிர்வாக சீர்திருத்த துறையால் எடுக்கும் இந்த தவறான கொள்கை முடிவுகளால் யூ.டி.சி., ,எல்.டி.சி. உதவி பதவிகள் மாநிலத்தில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.

    அத்தியாவசிய துறையாக கருதப்படும் வருவாய்த்துறை- கலால் துறை-பதிவுத்துறை- போக்குவரத்து துறை- போன்ற இடங்களில் மிகுந்த காலி பணியிடங்கள் உருவாகி மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் அரசு தவிப்பதை மக்கள் விரும்பவில்லை..

    முதுநிலை எழுத்தர்களை கொண்டு உதவியாளர்கள் பணி பதவி உயர்வு மூலம் நிரப்பினால் ஏறத்தாழ 800 யூ.டி.சி. பணியிடங்கள் காலியாக இருக்கும். அதை நேரடி நியமனம் மூலம் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால் இந்த சமுதாயத்தில் இருக்கும் இளைஞர்களும் அரசு துறையில் சேருவார்கள் .

    எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி இதனை அரசு ஊழியர்கள் பிரச்சனை என்று பாராமல் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனை-சமூகப் பிரச்சனை என்று கருதி பதவிஉயர்வின் மூலம் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என தி.மு.க. சார்பில் வேண்டுகோள் வைக்கின்றேன்.

    Next Story
    ×