என் மலர்
புதுச்சேரி
- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.
- 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் முதுகலை மேலாண்மைதுறை மற்றும் கணினி பயன்பாட்டியியல் இணைந்து நடத்திய இளங்கலை மாணவர்க ளுக்கான முதுகலை பட்ட படிப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் கான்குயர் 23 என்ற தலைப்பில் நடைபெற்றது.
கருத்தரங்கில் 30-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலிருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், புட் கிங் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சரத்பாபு, ஏழுமலை, ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாரயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரியின் இயக்குநர் செந்தில் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
விழாவில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை முதுகலை மேலாண்மைத்துறையின்
துறைத்தலைவர் மதன் செய்திருந்தார்.நிகழ்ச்சிமுடிவில் கணினி பயன்பாட்டியலின் துறைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- ஆற்றில் குளிக்கும்போது அசம்பாவிதத்தை தவிர்க்க நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
- போக்குவரத்து ஆங்காங்கே மாற்றம் செய்யப்பட்டு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
குரு பெயரும் ராசிக்கான நதிகளில் புஷ்கரணி விழா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மேஷ ராசிக்கு வடக்கில் கங்கை ஆற்றிலும், தெற்கில் சங்கராபரணி ஆற்றிலும் புஷ்கரணிவிழா இந்த ஆண்டு நடக்கிறது.
புதுவையில் முதல் முறையாக வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா இன்று தொடங்கியது. விழாவையொட்டி நேற்று விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, சப்தநதி தீர்த்தகலச பிரதிஷ்டை, முதல்கால யாக பூஜை நடந்தது.
தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு கோ பூஜை, 7 மணிக்கு புஷ்கர கொடியேற்றம் நடந்தது. பின்னர் 2-வது கால சப்தநதி கலச பூஜை சிறப்பு யாகம், யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. காலை 9.41 மணிக்கு புஷ்கரம் பிறக்கும் நேரத்தில் சப்தநதி தீர்த்த கலசாபிஷேகம் நடந்தது.
செங்கோல் ஆதீனம் 103-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்யஞான தேசிய பராமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், காரைக்கால் ஸ்ரீமத் ஸ்ரீகண்ட வித்யாபீட ஸ்தாபகர் பாலசர்வேஸ்வர சிவாச்சாரியார், எழிலன் மற்றும் சிவனடியார்கள் புனித நீராடலை தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடினர். வில்லியனூர், புதுவை சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், கடலூர், விழுப்புரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்காக சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கவர்னர் தமிழிசை, புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ. சரவணன் குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு யாகம் மற்றும் தீர்த்தவாரியில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
புஷ்கரணி விழாவையொட்டி நாள்தோறும் காலை 8 மணி முதல் 11 மணிவரை சிறப்பு யாகம், மதியம் 12 முதல் ஒரு மணி வரை தீர்த்தவாரி, மாலை 6 முதல் 7 மணி வரை கங்கா ஆரத்தி, இரவு 7 முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. புஷ்கரணி விழா மே 3-ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்பதால் திருக்காஞ்சி ஆற்றங்கரையில் பல்வேறு பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு ஆலோசனை வழங்க 2 ஆயிரம் சீருடை வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றில் குளிக்கும்போது அசம்பாவிதத்தை தவிர்க்க நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
புதுவையில் புஷ்கரணி விழாவுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த அந்தந்த பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆங்காங்கே மாற்றம் செய்யப்பட்டு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புஷ்கரணி விழாவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் புதுவை, வில்லியனூர் களைகட்டி உள்ளது.
- கல்லூரி மாணவர் தனது ஆசைக்காக செக்ஸ் விருந்துக்கு அழகிய பெண் வேண்டுமென கேட்டுள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பயன்படுத்திய நபரை பிடித்தனர்.
சேதராப்பட்டு:
புதுவை நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தை சேர்ந்தவர் எம்.எஸ்.சி. படித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் (வயது23). இவர் தனது செல்போன் காணாமல் போய்விட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் கீர்த்தி இது தொடர்பாக விசாரணை நடத்தி மாணவனின் செல்போனை பயன்படுத்திய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் செல்போன் எவ்வாறு காணாமல் போனது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. எம்.எஸ்.சி. படித்து வரும் மாணவர் சமூக வலைதள மூலம் பலருக்கு நண்பர் ஆகி உள்ளார். லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரியில் படித்து வரும் வில்லியனூர் ஜி.என்.பாளையத்தைச் சேர்ந்த சஞ்சய்குமாருக்கு (22) பேஸ்புக் மூலம் நண்பர் ஆகி உள்ளார். ஒரு நாள் கல்லூரி மாணவரும், சஞ்சய் குமாரும் சாட் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கல்லூரி மாணவர் தனது ஆசைக்காக செக்ஸ் விருந்துக்கு அழகிய பெண் வேண்டுமென கேட்டுள்ளார். சஞ்சய் குமாரும் பெண்ணை அழைத்து வருவதாக கூறி திருக்காஞ்சி ரோடு ஒதியம்பட்டு அருகே உள்ள ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு கல்லூரி மாணவரை, சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர் பாலா என்ற சரவணன் (23) இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.
அவரிடம் இருந்து ரூ. 8500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானாமாகிவிடும் என்று கருதிய கல்லூரி மாணவர் செல்போன் மட்டும் கிடைத்தால் போதும் என சைபர் கிரைம் போலீசில் செல்போன் தொலைந்து விட்டதாக புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பயன்படுத்திய நபரை பிடித்தனர். அப்போது சஞ்சய்குமாரும், பாலா என்ற சரவணனும் ஓ.எல்.எக்ஸ்-இல் செல்போனை விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு விசாரணை நடத்தி சஞ்சய்குமார், பாலா 2 பேரையும் கைது செய்தனர்.
- கராத்தே சுந்தர்ராஜன் வீரர்களை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வழி அனுப்பினார்.
- பொதுச்செயலாளர் ரகுமான் சேட்டு அவர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் அமைச்சூர் லத்தி சங்கம் சார்பில் மத்திய பிரதேஷ் போபாலில் வருகின்ற ஏப்ரல் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 2-வது அகில இந்திய அளவிலான போட்டிக்கு புதுவையில் இருந்து பல்வேறு பிரிவுகளில் 70 மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
இவர்களை வழி அனுப்பும் விழா புதுவை ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளரும் புதுவை மாநில அமைச்சூர் லத்தி சங்கத்தின் தலைவருமான கராத்தே சுந்தர்ராஜன் வீரர்களை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வழி அனுப்பினார்.
இவ்விழாவில் லத்தி அசோசியேஷன் இணைச்செயலாளர் அசாருதீன், ரியாஸ் மற்றும் பயிற்சியாளர் குமார பாண்டியன் , இத்தியாஸ் , அப்துல் கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் புதுவை மாநில அமைச்சூர் லத்தி சங்கம் பொதுச்செயலாளர் ரகுமான் சேட்டு அவர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
- காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை குயவர் பாளையம் சுப்ரமணிய சிவா வீதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 47) பக்கத்து தெருவான சுந்தரமேஸ்திரி வீதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று வேலை முடித்து 2 மோட்டார் சைக்கிளை கடை வாசலில் நிறுத்தி இரும்பு சங்கிலி இணைத்து பூட்டியுள்ளார், மறுநாள் காலை சென்று பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிளும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவருகின்றனர்.
- உதவி வேளாண் அலுவலர் பக்கிரி அனைவரையும் வரவேற்று பேசினார்.
- காய்கறி சாகுபடி பற்றிய 90 பக்க விளக்க கையேடு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு பாளையத்தில் விவசாயிகளுக்கு அனுபவ விவசாயிகளே பயிற்சியளிக்கும் பண்ணைப்பள்ளி பயிற்சி நிறைவு விழா விவசாய பண்ணை வளாகத்தில் நடைபெற்றது.
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணை த்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் மதகடிப்பட்டு பாளையம் கிராமத்தில் பண்ணைப்பள்ளியின் நிறைவு வகுப்பு மற்றும் விவசாயிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் வேளாண் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் பக்கிரி அனைவரையும் வரவேற்று பேசினார்.
பண்ணை பள்ளி நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரியின் முதல்வர் முகமதுயாசின் கலந்துகொண்டு காய்கறி பயிர்களில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நு ட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ள உத்திகள் குறித்து விளக்கி பேசி
னார். மதகடிப்பட்டு பாளையத்தின் முன்மாதிரி விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை சக விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கெடுத்த விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களில் பயன்படுத்த உபகரணம் பரிசாக வழங்கப்பட்டது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தோட்டக்கலை முன்மாதிரி விவசாயிகள் அனைவருக்கும் காய்கறி சாகுபடி பற்றிய 90 பக்க விளக்க கையேடு வழங்கப்பட்டது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஸ்வரி, செயல்விளக்க உதவி யாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர் சண்முகம், விஜயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- முகமது யூனுஸ்1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
- சுல்தான் பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி பா.ஜனதா சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தலின் பேரில் வில்லியனூர் பா.ஜனதா பிரமுகரும், ஜம் ஜம் அறக்கட்டளை நிர்வாகியுமான முகமது யூனுஸ் தலைமையில் சுல்தான் பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை யொட்டி சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு வீடு வீடாக சென்று அமைச்சர் நமச்சி வாயம் படம் அச்சடிக்க ப்பட்ட டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுல்தான்பேட்டை ஜம்ஜம் காய்கறிமண்டி எதிரில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் படம் அச்சடிக்கப்பட்ட டோக்கன் வைத்திருந்த சுமார்1000 பேருக்கு இலவச கைலி ,சேலை, ஜமாத்தார்கள் ,முகமது யூனுஸ் நண்பர்கள் மற்றும் ஆதரவா ளர்கள் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- நடன மது பார்களை கண்காணிக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
- புதுவை நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கவும், வருவாயை பெருக்கும் நோக்கில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.
இந்த ரெஸ்டோ பார்கள் அனுமதி நேரத்தை தாண்டி நள்ளிரவிலும் செயல்படுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நடன மது பார்களை கண்காணிக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
அதன்பேரில் கலால் மற்றும் போலீசார் மது பார்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஒரு ரெஸ்டோ பாரில் பெரியக்கடை போலீசார் சோதனை செய்தனர். அந்த பார் அனுமதியின்றி செயல்படுவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகராஜ், புதுவை நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆணையர் உத்தரவின் பேரில், வருவாய் அதிகாரி சாம்பசிவம் தலை மையில் நகராட்சி ஊழியர்கள் பெருமாள் கோவில் வீதியில் இயங்கி வந்த ரெஸ்டோ பாரை பூட்டி 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.
- இந்தியகம்யூனிஸ்டு தீர்மானம்
- காரைக்கால் துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில குழு கூட்டம் முதலியா ர்பே ட்டை கட்சி அலுவலகத்தில் தேவசகாயம் தலைமையில் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் நாராயணா, மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில துணை செயலாளர் சேது செல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ நாரா கலைநாதன், பொருளாளர் சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, அமுதா, மதி, கோவிந்தசாமி, மாநில குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெருகி வரும் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுவையின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் புதிய மதுபான கடைகள் திறப்பதற்கான அனுமதியை கைவிட வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் நிவாரணம் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களின்போது தொடர்ந்த வழக்குகளை வாபஸ்பெற வேண்டும். காரைக்கால் துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி காரைக்காலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட கூட்டத்தில் பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மரங்களில் இருந்து மரங்கள் பூத்து குலுங்குகிறது.
- பாரதி பூங்கா ஆகிய பகுதிகளில் கொன்றை மரங்கள் அதிகளவில் உள்ளது.
புதுச்சேரி:
பிரெஞ்சு ஆட்சிக்கால த்தில் நிர்மாணிக்க ப்பட்ட புல்வார் என அழைக்கப்படும் புதுவை நகர பகுதியில் அதிகளவில் மரங்கள் வைத்திருந்தனர்.
பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றாலும், புதுவை மக்கள் தொடரும் ஒரு சில பழக்கங்களில் மரங்கள் வளர்ப்பதும், பராமரிப்பதும் இருந்து வருகிறது. இதனால் நகர பகுதிகளில் பல சாலைகளில் வீடுகளுக்குள்ளும், வீடுகளுக்கு வெளியிலும் மரங்கள் இருப்பதை பார்க்கலாம்.
சில சாலைகள் வெயில் தரையில் படாமல் நிழலாக காட்சியளிக்கும். கடற்கரை சாலையை ஒட்டியுள்ள சாலைகள், பாரதி பூங்கா ஆகிய பகுதிகளில் கொன்றை மரங்கள் அதிகளவில் உள்ளது.
தற்போது இந்த மரங்களில் அதிகளவில் மஞ்சள் பூக்கள் பூத்து குலுங்குகிறது. பூக்கள் உதிர்ந்து சாலை முழுவதும் மஞ்சள் மலர் விரிப்பு போலவும் காட்சியளிக்கிறது.
புல்வார் பகுதியில் லபோர்தனே வீதி, லப்போர்த் வீதி, காமாட்சி யம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட சாலைகளில் இருபுறங்களிலும் கொன்றை மரங்களில்
இருந்து மரங்கள் பூத்து குலுங்குகிறது. இது புதுவைக்கு வந்தள்ள சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்கள் சாலைகளில் நின்று போட்டோ எடுத்து செல்கின்றனர்.
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் யோசனை
- 2 வருடங்களுக்கு தலை சிறந்த பயிற்சியாளர்களால் கொடுக்கப்பட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதற்காக இந்த ஆண்டு ரூ.924.68 கோடி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. இருப்பினும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரம் உயர்வ தற்கான முயற்சிகளில் பின்தங்கியே உள்ளோம்.
எந்த பாடத்திட்ட மாக இருந்தாலும் மாணவர்களின் கற்கும் ஆற்றல் உயர்ந்தால்தான் கல்வியின் தரம் உயரும். அரசு பள்ளி மாணவர்களிடையே, படித்தல் திறன், எழுதுதல் திறன், கணிதத் திறன், கல்வி கற்கும் அறிவு, சிந்திக்கும் திறன் ஆகிய வற்றில் குறைபாடுகள் அதிகம் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வுகள் கூறுகின்றன.
புதுவை அரசு பள்ளிகளின் தரத்தை தேசிய தேர்வுகளில் மாணவர்கள் பெறும் தேர்ச்சி எண்ணிக்கை பொறுத்து தெரிந்து கொள்ளலாம். அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பில் சேர அரசு சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் 11 -ம் வகுப்பு வந்தவுடன் ஒவ்வொரு நாளும் மாலை யில் 2 மணி நேர பயிற்சியை அரசு செலவில் 2 வருடங்களுக்கு தலை சிறந்த பயிற்சியாளர்களால் கொடுக்கப்பட வேண்டும்.
நீட் தேர்வில் தகுதி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 10 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டும். 500
மதிப்பெண்களுக்கு மேல் பெறும் இப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு உதவித்தொகை வழங்க வேண்டும். 11 மற்றும் 12-ம் வகுப்பு களுக்கு அனுபவம் வாய்ந்த அற்பணிப்புள்ள ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் நீட் தேர்வில் அதிக தேர்ச்சியை கொடுக்கும் இந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஊக்கத்தொகை, போன்றவற்றை வழங்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தைஅரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்
- பணியிடங்களுக்கான ஆணை வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
காலியாக உள்ள என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப நடந்த போராட்ட ங்களை தொடர்ந்து பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் செயலருடனான பேச்சு வார்த்தையில் ஒரூ கண்காணிப்பு பொறியாளர் பதவியையும், 13 செயற்பொறியாளர் பதவி களையும் பதவி உயர்வு மூலமாக நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஆணை, கடந்த மாதம் 23-ந் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்த பதவி உயர்வு அளிக்கும்போதே, பணி யிடங்களையும் குறிப் பிட்டு ஆணையை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த வுடன் பணியிடங்களுக்கான ஆணை வெளியிடப்படும் என உறுதிய ளிக்கப்பட்டது.
பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைய உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தும் 20 நாட்கள் கடந்து விட்டது. ஆனால், பதவி உயர்வு வழங்கப்பட்டவர் களுக்கான பணியிடங்கள் இதுவரை ஒதுக்கப்பட வில்லை. இந்த பிரச்னையில் முதல் அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் தலையிட்டு, ஒரு கண்காணி ப்பு பொறியாளர் மற்றும் 13 செயற்பொறியாளர் பதவி களுக்கான பணியிடங்களை அறிவித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






