என் மலர்
புதுச்சேரி
- மாணவர் கூட்டமைப்பு கண்டனம்
- மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி நிர்வாகக் கோளாறுகளால் சீரழிந்து வருகிறது. அரசின் கவனத்திற்கு பலமுறை நடக்கும் குளறுபடிகளை கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. இதனால் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்கு றியாக உள்ளது.
மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரி துவங்கி 35 நாட்களில் செமஸ்டர் தேர்வு நடத்தியுள்ளனர். இதனால் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்து ள்ளது. எப்போதும் 100 சதவீத தேர்ச்சியை பெறும் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரு சில குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.
இதற்கு கல்வித்துறையும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். கல்லூரிக்கு வழங்கப்ப ட்டிருந்த தன்னாட்சி அங்கீகாரம் 2017 -ம் ஆண்டு முடிவடைந்தது. இதனை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது.
அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எழுந்துள்ள பிரச் சனையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரி மாணவிகளை ஒன்று திரட்டி அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இன்றும் நாளையும் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை
- ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
புதுச்சேரி:
அட்சய திருதியை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம்தான். அட்சய திருதியை என்பது மங்கள கரமான தொடக்கத்திற்கு உகந்த நாள். ஆனால் அதையும் தாண்டி தங்கம் வாங்குவதற்கு உகந்த நாள் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது.
ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு திருதியை திதியானது இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கியது. நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை திருதியை திதி உள்ளது. இன்று காலை 7.49 மணி முதல் பகல் 12.20 மணி வரை தங்கம் வாங்குவதற்கு முகூர்த்த நேரம் என்பதால் இன்று காலையிலேயே ஏராளமானோர் நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்கினார்கள்.
புதுவையில் நேரு வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, பாரதி வீதி, நெல்லுமண்டி சந்து, மிஷன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் நகைகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
- தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் எச்சரிக்கை
- பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான கோபால் நகராட்சி ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புதுவை மாவட்டத்தின் மையப் பகுதியான உருளையன்பேட்டை தொகுதி முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது.
குறிப்பாக இந்திராகாந்தி நகர், சாந்தி நகர், உருளையன்பேட்டை, குபேர் நகர், கென்னடி நகர், கோவிந்தசாலை உள்ளிட்ட தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களால் நடந்து செல்லும் முதியவர்கள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் விரட்டுவதும், அதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. தெருநாய்களின் தொல்லையால் மேற்கண்ட பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது. மேலும், வருகின்ற மாதம் பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால் குழந்தைகள், மாணவர்கள் தெருக்களில் விளையாட முடியாத நிலை ஏற்படும்.
அதுபோல், நாய்கடித்தவர்கள் சிகிச்சைக்கு அரசு மருத்துவனைக்கு சென்றால் போதிய விஷக்கடி மருந்தும் சரிவர இல்லை என்ற நிலையும் இருக்கிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாங்கள் தங்களிடம் புகார் கடிதம் அளித்தோம்.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட தெரு நாய்களின் பிரச்சனை சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரசும் மாநிலம் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது என்றும் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மற்றும் கால்நடைத்துறை இணைந்து தெரு நாய்களை பிடிக்க நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.
ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆகவே, நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அடிப்பை வசதியையும் செய்து தராமல் கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
- சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. டெண்டரை எடுத்த தனியார் டிக்காசை ரூ 10ல் இருந்து ரூ20 உயர்த்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து முத்தியால்பேட்டை, கோரிமேடு, முத்திரையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு டெம்போக்கள் இயக்கப்படுகிறது.
புதுவையை பொருத்த வரையில நகரப் பகுதிகளுக்குள் செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் புதுவை மக்கள் மட்டுமன்றி வெளியூரில் இருந்து வருபவர்களும் டெம்போக்களையே அதிகம் பயன்படுத்துவர்.
பஸ் நிலையத்தில் டெம்போக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு நகராட்சி அடிக்காசு வசூல் செய்கிறது. இந்த அடிக்காசு வசூலுக்கு நகராட்சி சார்பில் டெண்டர் விடப்படும். சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. டெண்டரை எடுத்த தனியார் டிக்காசை ரூ 10ல் இருந்து ரூ20 உயர்த்தியுள்ளது.
இதற்கு டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தள்ளனர். புதுவை பஸ் நிலையத்தில் தங்களுக்கு எந்தவித அடிப்பை வசதியையும் செய்து தராமல் கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
டெம்போ நிறுத்து மிடத்தில் மேற்கூரை சேதம் அடைந்து விழும் நிலையில் உள்ளது குடிநீர், கழிவறை வசதி இல்லை. பஸ் நிலையத்தின உட்புறத்தில் 4 டெம்போக்களை மட்டுமே நிறுத்த முடியும். இவற்றை எல்லாம் சீரமைத்த பிறகுதான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 1-ந் தேதி புதுவை நகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்தனர். நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையம் எடுக்கவிலலை 1-ந் தேதியில் இருந்து அடிகக்காசும் செலுத்தவில்லை.
இந்த நிலையில், டெண்டர் எடுத்த தனியார் உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என டெம்போ டிரை வர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது இதனால் டெம்போ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.
காலை 11 மணி முதல் டெம்போ இயக்குவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.நகரம் மற்றும் புறநகர் பகுதியில் ஒடும் 125 டெம்போக்கள் இயங்கா ததால் பொதுமக்கள் பாதிக்கபட்டனர். இன்று சனிக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் டெம்போ இல்லாமல் அவதிக்கு ள்ளாகினர்.
இந்நிலையில் ஒரு சில டெம்போக்கள் இயங்கியது.
- லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாதாந்திர ஓய்வூதி யம் பெறும் அடையாள அட்டை 10 பேருக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி, எம்.எல்.ஏ அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் புதுவை அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் 93 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 32 லட்சத்து 70 ஆயிரத்திற்கான பணிஆணை வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வீடு கட்டும் மானியம். 30 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சத்திற்கான பணி ஆணை வழங்க ப்பட்டது. தொடர்ந்து சமூக நலத்துறை மூலம் மாற்றுதிறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதி யம் பெறும் அடையாள அட்டை 10 பேருக்கு வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1கோடியே 92 லட்சம் ஆகும்
இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரி சவுந்த ர்ராஜன், உதவி பொறி யாளர் சுதர்சன் தொகுதி என். ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகின்றது.
- மின்விசிறிகள் மின்விளக்குகள் புதிதாக கொண்ட இந்த நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
புதுச்சேரி:
திருபுவனை மற்றும் மதகடிப்பட்டு பகுதியில் நான்கு வழி சாலை சர்வீஸ் ரோடுகளில் பயணியர் நிழற்கு டைகள் அமை க்கப்பட்டு வருகின்றது.சென்னை, நாகப்பட்டினம் ,விழுப்புரம் ,புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதனால் எம்.என். குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடைகள் ஒரு சில இடங்களில் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
சாலை விரிவாக்க பணியின் போது 17 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறமும் இருந்த மிகவும் பழமையான மரங்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தனர்.
இதனால் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பயணிகள் கடுமையான வெயில் மற்றும் மழையில் நின்று தங்களுடைய பஸ் பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
தற்போது புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகின்றது.
மிகவும் சிறிய அளவில் அமைக்கப்படும் இந்த பயணியர் நிழற்குடையில், ஒரு 6 பேர் மட்டும் உட்காருவதற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது அமைக்கப்பட்டு வரும் இந்த பயணியர் நிழற்குடைக்கு பொதுமக்கள் பார்த்து வரவேற்பு அளித்துள்ளனர்.
மேலும் புதிதாக பயணியர் நிழற்குடை கண்டமங்கலம், அரியூர், கெங்கராம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட உள்ளது .
அதே போல் 4 வழி சாலைகளில் 2 புறமும் உள்ள கிராமங்களை ஒன்றிணைக்கும் பஸ் நிறுத்த பகுதிகளில் பயணிகள் அமருவதற்கு நாற்காலிகள், மின்விசிறிகள் மின்விளக்குகள் புதிதாக கொண்ட இந்த நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
- தற்போதுள்ள ரயில் பாதை, விழுப்புரம் வழியாக செல்ல வேண்டியுள்ளது.
- அடுத்த சில மாதங்களில் தயாரித்து, ரயில்வேயிடம் ஒப்படைக்க உள்ளோம்.
புதுச்சேரி:
புதிய ரெயில் பாதை அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வு பணிகள் துவங்கி உள்ளன. இந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் தொகை, தினசரி பயணியர் எண்ணிக்கை, தற்போதுள்ள போக்கு வரத்து இணைப்பு வசதிகள், வழித்தட விவரங்கள் உள்ளிட்டவை, ஆய்வு செய்யப்படுகின்றன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
திண்டிவனம்- புதுவை யிடையே, தற்போதுள்ள ரயில் பாதை, விழுப்புரம் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதன் மொத்த துாரம் 80 கி.மீட்டர், இந்நிலையில், திண்டிவ னத்தில் இருந்து விழுப்புரம் செல்லாமல், நேரடியாக புதுவைக்கு ரயில் பாதை அமைக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இத ற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அறிக்கை அனுப்ப உத்தரவிட ப்பட்டுள்ளது.
இந்த பாதை, 50 கி.மீ. துார இடைவௌியில் தான் இருக்கும். வழித்தடங்கள், பயணியர் எண்ணிக்கை, ரயில் நிலைய அமைவிட ங்கள் உள்ளிட்ட விபரங்கள் குறித்த அறிக்கையை அடுத்த சில மாதங்களில் தயாரித்து, ரயில்வேயிடம் ஒப்படைக்க உள்ளோம். இதையடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் மேற்கொ ள்ளப்படும். இந்த பாதை பணிகளை, மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்து வதா என்பது குறித்து, பின்னர் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- தி.மு.க . சார்பில் கோரிக்கைகள் சட்டசபையில் வைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலையில் உள்ள புனித மத்தியாஸ் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக திட்டம் நிறுத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சைக்கி ள் வழங்கப்பட வில்லை.
அதனால் தி.மு.க. சார்பில் பலவிதமான போராட்டங்கள் எதிர்ப்புகள் போன்றவை நடத்தப்பட்டு வந்தது. மாணவர்களுக்கு வழங்க ப்படும் இலவச சைக்கிள் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க . சார்பில் கோரிக்கைகள் சட்டசபையில் வைக்க ப்பட்டது. தி.மு.க. கோரிக்கை யை ஏற்று முதல்-அமைச்சர் அதன்படி 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கு வதற்கான உத்தரவை வழங்கினார். அதன் அடுத்த கட்டமாக பள்ளி மாணவர்க ளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. அதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை செய்தனர்.
- முஸ்லிம்கள் தொழுகை செய்து, ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
புதுச்சேரி:
நாடுமுழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை யொட்டி இன்று சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை செய்தனர்.
பின்னர் ஒருவரு க்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இதுபோல் புதுவையில் உள்ள குத்பா பள்ளிவாசல், அகமதியா பள்ளிவாசல், மீரா பள்ளிவாசல், சுல்தா னியா பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. சுல்தான்பேட்டையில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் முத்தவல்லி முகமது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகை செய்து, ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
- பா.ஜனதா பிரமுகர் காட்டேரிக்குப்பம் போட்டோ ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பிரதம மந்திரி கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருக்கனூரில் நடைபெற்றது.
விழாவிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி 35 ஆதி திராவிட பயனாளி களுக்கு வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக 2 லட்சத்தி ற்கான பணி ஆணையினை வழங்கினார். தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அடை யாள அட்டை யினையும் வழங்கினார்.
இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ அருள்முருகன், பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், பா.ஜனதா பிரமுகர் காட்டேரிக்குப்பம் போட்டோ ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.
- சுற்றுச்சூழல் பாதுகாத்தலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
புதுச்சேரி:
புதுவை கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழல் இயக்கம் சார்பில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு புதுவை பிரிவு இயக்குனர் பொறுப்பு ஆண்ட்ரூ ஜான் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக புதுவை பல்கலை கழக சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாத்தலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த போட்டியில் சிறந்த படைப்பிற்கு ரொக்க பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முடிவில் இதயவியல் தொழில் நுட்ப துறை விரிவுரையாளர் குளோரி மெர்லின் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அதிகாரி சந்துரு மற்றும் துணை பேராசிரியர் வளர்மதி, விரிவுரையாளர்கள் சந்தோஷ், கோவர்தன விஷ்ணு, சிவசங்கரி, கல்லூரி சுற்றுச்சூழல் இயக்க மாணவர்கள் செய்து இருந்தனர்.
- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.
- 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் முதுகலை மேலாண்மைதுறை மற்றும் கணினி பயன்பாட்டியியல் இணைந்து நடத்திய இளங்கலை மாணவர்க ளுக்கான முதுகலை பட்ட படிப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் கான்குயர் 23 என்ற தலைப்பில் நடைபெற்றது.
கருத்தரங்கில் 30-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலிருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், புட் கிங் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சரத்பாபு, ஏழுமலை, ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாரயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரியின் இயக்குநர் செந்தில் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
விழாவில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை முதுகலை மேலாண்மைத்துறையின்
துறைத்தலைவர் மதன் செய்திருந்தார்.நிகழ்ச்சிமுடிவில் கணினி பயன்பாட்டியலின் துறைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.






