என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற வளர்ச்சி கழக தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    மாமல்லன் சிலம்பம் மற்றும் நாடடுப்புறக்கலை வளர்ச்சி கழகம் சார்பில் 21-ம் ஆண்டு கோடைக்கால இலவச சிலம்ப பயிற்சி முகாம் பூரணாங்குப்பம் மாமல்லன் சிலம்ப பயிற்சி கூடத்தில்  தொடங்கியது.மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற வளர்ச்சி கழக தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார், ஆலோசகர் வெற்றிவேல் வரவேற்றார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டு சிலம்ப பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், மாமல்லன் சிலம்ப நிர்வாகிகள் ஸ்டாலின், ரவிக்குமார் சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு மோர் வழங்கி தொடங்கிவைத்தார்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது.ஊசுடு தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேதராப்பட்டு முகாம் சார்பில் சேதராப்பட்டு- மயிலம் சாலையில் நீர் ,மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

    இதில் லட்சுமி பிளாஸ்டிக் கம்பெனியின் உரிமையாளர் குணசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர் வழங்கி தொடங்கிவைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் சே.கா.முருகையன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் ஊசுடு தொகுதி அமைப்பாளர் வில்லாளன் என்கிற விஜயன், வி.சி.க நிர்வாகிகள் கருணாகரன், தவமணி, வழக்கறிஞர் முனுசாமி, உதயகுமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

    • முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
    • சக்கரபாணி, ஏகாம்பரம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    பெரியக்கோட்டகுப்பம் கெங்கை அம்மன் , அங்காள பரமேஸ்வரி , முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்  நடந்தது.

    அம்மனுக்கு 2-ம் கால பூஜையாக காலை 6 மணி அளவில் விசேஷ ஹோமம் மற்றும் கலச புறப்பாடு அலங்கரித்து ஆலய கலச கோபுரத்தில் காலை 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் கண்ணன், அருணாச்சலம் தலைமையில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோட்டகுப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி, ஆணையர் மங்கையர்கரசன் முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி யில் தொடர்ந்து சாமிக்கு சந்தன அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை கடந்தது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பாலமுருகன், முத்துக்கு மரன், நாகமுத்து, சக்கரபாணி, ஏகாம்பரம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கொலை சம்பவத்தை அரங்கேற்ற நண்பருடன் பதுங்கி இருந்த திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    வில்லி யனூர் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வில்லியனூர் பகுதிகளில் ரோந்து சென்றனர். ஆரியப்பாளையம் அரசு சாராயக்கடை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தனர். சந்தேகம் அடைந்த சப்-இனஸ்ப்பெக்டர் குமார் 2 பேரின் உடைமைகளை பரிசோதனை செய்ததில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதில் ஒருவர் பத்துக்கண்ணு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பதும், மற்றொருவர் திருச்சி பகுதி யைச் சேர்ந்த மதன்ராஜ் என்பதும் தெரியவந்தது.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திருச்சியை சேர்ந்த மதன்ராஜ் மீது திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும், வில்லியனூர் பகுதியில் அசம்பாவி தத்தை ஏற்படுத்த நண்பர் மதன்குமா ருடன் சேர்ந்து நேற்று இரவு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் ஆயுதங்கள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதி சீட்டை 28-ந் தேதி வரை தலைமை செயலகத்தில் பெறலாம்.
    • தேர்வரின் புகைப்பட அடையாள அட்டைகளின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சுருக்கெழுத்தர் நிலை-2 பதவியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிட மிருந்து விண்ணப்பங்களை பல்வேறு தருணங்களில் பெற்றுள்ளது. இவ்வாறு பெற்ற விண்ணப்பங்களை பரிசீலித்த பின் இத்துறை யானது, சுருக்கெழுத்தர் போட்டி தேர்வை வருகிற 30-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளது.

    தேர்வுக்கான அனுமதி சீட்டை தகுதி வாய்ந்த தேர்வர்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கடந்த 5-ந் தேதி வெளியிட்ட அறிவிக்கை மூலம் அறிவு றுத்தியது.

    பெரும்பாலான தேர்வர்கள் போட்டி தேர்வுக்கான அனுமதி சீட்டை பெற்ற போதிலும், சிலர் மட்டும் இன்னும் அனுமதி சீட்டை பெறவில்லை என்று இத்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதுவரை அனுமதி சீட்டை பெறாத தேர்வர்கள், அதனை புதுவை தலைமை செயலகத்தில் உள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் தேர்வு பிரிவில் வருகிற 28-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5மணி வரை நேரில் வந்து அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார், வாக்காளர், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி பெற்றுக் கொள்ளலாம்.

    அனுமதி சீட்டை நேரில் பெற இயலாதவர்கள், அதனை தங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் மூலம் பெற்று கொள்ளலாம். அவ்வாறு வருபவர் தேர்வர் கொடுத்த அங்கீகார கடிதம், தன்னு டைய மற்றும் தேர்வரின் புகைப்பட அடையாள அட்டைகளின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மருத்துவ பேராசிரியர் அமெரிக்க பெண்ணுக்கு 8 முறை மொத்தம் ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்.
    • மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் டாக்டர். தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு, அவரது பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். புதுவையில் உள்ள ஒரு தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை அங்கிருந்து எடுத்து சமூக வலைதள மோசடிக்காரர்கள், மருத்துவ பேராசிரியரை ஒரு பெண் மூலம் தொடர்பு கொண்டனர்.

    தொடர்பு கொண்ட பெண் தான் சிரியாவில் இருப்பதாகவும் இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி அவருடைய அனைத்து விவரங்களையும் அனுப்பியுள்ளார். அந்த பெண் தான் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் சிரியாவில் நடந்த நிலநடுக்கத்திற்காக தன்னார்வலராக வேலை செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.

    இங்கு வந்த பிறகு அமெரிக்கர் என்பதால் தன்னுடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

    அவருடைய கணக்குகள் முடக்கப்பட்ட விவரங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கான லொகேஷன், அவர் பணிபுரிகின்ற மருத்துவமனை போன்றவற்றை அனுப்பியுள்ளார். நீங்கள் உதவி செய்தால் மட்டுமே நான் இங்கிருந்து வெளியேற முடியும்.

    வரி, சுங்கக்கட்டணம், டாக்குமெண்டேஷன் இன்னும் சில தேவைகள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய மருத்துவ பேராசிரியர் அவருக்கு 8 முறை மொத்தம் ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்.

    ரூ.35 லட்சம் பணத்தை பெற்ற பிறகு, அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை டாக்டர் உணர்ந்தார். இதுகுறித்து அவர், இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் (சைபர் கிரைம்) புகார் அளித்தார்.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதிப்பு
    • கடந்த வாரம் அந்த வழியாக வந்த தனியார் லாரி ஒன்று புதிதாக கட்டப்பட்ட கால்வாய் மீது மோதி நின்றது.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு பாளை யத்தில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்துள்ளனர். மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை தொகுதியில் உள்ள, மதகடிப்பட்டுபாளையம் பகுதியில் கடலூர் சாலை யில் பொதுப்பணித்துறை கழிவு நீர் பாசன உட்கோட்டத்தின் மூலம் கழிவு நீர் வாய்க்கால் மேம்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.

    அந்தப் பகுதியில் உள்ள துலுக்கான மாரியம்மன் கோவிலுக்கு செல்ல குறுக்கே கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் துலுக்கான மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேர் திருவிழா காலங்களில் அந்த வழியாக தேரின் சக்கரங்கள் சென்று திரும்புவதற்கு தரமான சாலையை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    தேர் திரும்பும் பகுதியில் இரும்பிலான கான்கிரீட் சாலையை போடும்படி பொதுமக்கள் ஒப்பந்ததார ர்களிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் அரசு அதற்கு அதிக செலவில் சாலைகள் போடுவதற்கு நிதி அளிக்க வில்லை என்றும் தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் மட்டுமே கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பொது மக்களுக்கு பதில் அளித்தனர்.

    இதனால் பொது மக்களுக்கும் அதிகாரி களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நின்று போனது. கடந்த வாரம் அந்த வழியாக வந்த தனியார் லாரி ஒன்று புதிதாக கட்டப்பட்ட கால்வாய் மீது மோதி நின்றது.

    இதனால் 3 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் தடுப்பு சுவர்கள் உடைந்தன. இதனால் ஒப்பந்ததாரருக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நின்று போய் உள்ளது. இதனால் திருபுவனை-கடலூர் சாலையில் உள்ள கிராம தெருக்கள் துண்டிக்கப்பட்டு, அந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாமல் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    • முன்னாள் நீதிபதி சந்துரு பேச்சு
    • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் கவர்னரை வைத்து ஆட்சியை எப்படி கவிழ்க்கலாம் என திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    மணற்கேணி ஆய்வெளி இலக்கிய அமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கு புதுவை தனியார் ஒட்டலில் நடந்தது.கேசவானந்த பாரதி தீர்ப்பும் அரசியலைப்பு சட்டத்தின் பாதுகாப்பும் என்ற தலைப்பில் நீதிபதி சந்துரு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    தான் இன்னும் ஐ.பி.எஸ் என்று தமிழக கவர்னர் நினைத்துக் கொண்டிருக்கிறார். கவர்னரை கண்டித்து தீர்மானம் இயற்றும் சட்டமன்றத்தை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் கவர்னரை வைத்து ஆட்சியை எப்படி கவிழ்க்கலாம் என திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

    கவர்னர்கள் மூலம் மாநில அரசின் ஸ்திரத்தன்மையை அசைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இதனால் நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உருவாகி வருகிறது. நீதிபதிகள் செல்லக்கூடிய போக்கு 2 வழிகளில் உள்ளது.அரசியலமைப்பு சட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு அதனை நம்பாமல் சிலர் அந்த அரியணையில் அமர்ந்திருக்கிறார்கள்.

    துறவிகள் மாநாட்டில் வேதங்கள் ஓதுவார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி வருகிறார்கள்.பள்ளி பாட திட்டத்தில் வரலாற்றை திருத்தி எழுதுகிறார்கள்.இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

    அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை.நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை ஒருபோதும் மாற்ற விட மாட்டோம்.மோடியை விமர்சனம் செய்யும் யாரும் நீதிபதியாக அமர முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. உளவு அமைப்புகளை நம்பாமல் தற்போது அனைத்து சமூக வலைதளங்களையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது.இவ்வாறு சந்துரு பேசினார்.

    நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.பி, புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், பேராசிரியர் கல்விமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்ச்சங்க பொதுக்குழு தீர்மானம்
    • தமிழ் வளர்ச்சி சிறகம் என்று அறிவித்திருப்பதை மாற்றி தமிழ் வளர்ச்சித் துறையை ஏற்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவைத் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு கூட்டம் வில்லியனூரில் நடைபெற்றது. தலைவர் வி.முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு.மோகன் தாசு ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ப.திருநாவுக்கரசு வரவு-செலவு திட்டங்களை சமர்ப்பித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி சேது.முருகபூபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    கூட்டத்தில் மே மாதம் 28-ந் தேதி சங்க தேர்தலை நடத்துவது என்றும், திருக்குறளைத் தமிழ்ச்சங்க பொதுக்குழு தீர்மானம் விமான நிலையத்துக்கு பாரதிதாசன் பெயர் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ் வளர்ச்சி சிறகம் என்று அறிவித்திருப்பதை மாற்றி தமிழ் வளர்ச்சித் துறையை ஏற்படுத்த வேண்டும்.

    புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரைதமிழைகட்டாயப் பாடமாக கற்பிக்கப்பட வேண்டும்.கலைப் பண்பாட்டுத்துறையில் நிலுவையில் உள்ள தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள், நலிந்த கலைஞர்களுக்கான ஊக்கத் தொகை, நூல் உதவித் தொகை, சிறந்த நூல்களுக்கான பரிசு ஆகியவற்றை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை விமான நிலையத்திற்கு பாவேந்தர் பாரதிதாசன் பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், மு.பாலசுப்பிரமணியண், துணைச் செயலாளர் அருள் செல்வம் , ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சீனு.கந்தகுமார், தினகரன், சிவேந்திரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    • எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே குடும்பத்தகராறில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வில்லியனூர் அடுத்த அரசூர் குளத்துமேடு வீதியை சேர்ந்தவர் ரவிசங்கர்பாபு. இவருடைய மனைவி வனிதா வயது (42). இருவருக்கும் திருமணம் ஆகி யுவஸ்ரீ என்ற மகளும், பரத்வாஜ் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று  ரவிசங்கர்பாபு மது அருந்தி விட்டு வனிதாவிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வாந்தி எடுத்து மயக்க நிலைக்கு ஆளான வனிதாவை உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர்.

    மேலும் வனிதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மீனவர்கள் போராட்டம் ந டத்தி டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • சட்டசபையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, டீசல் மானியம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் 2009 முதல் டீசல் வழங்கப்படுகிறது.

    கூட்டுறவு சம்மே ளனத்தின் அங்கீ கரிக்கப்பட்ட நுகர்வோர் பெட்ரோல் பங்குகளில் மீனவர்கள் டீசல் வாங்கினால் மானியம் கிடைத்தது. இங்கு ரூ.10 வரை குறைந்த விலையில் டீசல் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை அரசு குறைத்தது.

    இதனால் மீனவர்களுக்கு கிடைக்கும் டீசல் மானியம் மிகவும் குறைந்து ரூ.4 மட்டுமே மானியமாக கிடைத்தது. இதனால் மீனவர்கள் போராட்டம் ந டத்தி டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    சட்டசபையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, டீசல் மானியம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

    இதன்படி மீனவர்களுக்கு டீசல் மானியம் தெடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இனி லிட்டருக்கு ரூ.12-க்கு மிகாமல் மானியம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டீசலுக்காக புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 8.65 சதவீதம், ஏனாமில் 8.91 சதவீதம், மாகியில் 6.91 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது.

    மீனவர்கள் நுகர்வோர் பங்குகளில் டீசல் வாங்கும்போதே வாட் வரி ரூ.6.87 கழிக்கப்படும். மீதமுள்ள ரூ.5.13 3 மாதம் ஒருமுறை கணக்கிடப்பட்டு மீனவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

    இதனால் ஆண்டுக்கு வாட் வரி சலுகையாக ரூ.13.67 கோடியும், திரும்ப செலுத்தும் மானியமாக ரூ.10.35 கோடி என மொத்தம் ரூ.24 கோடி அரசுக்கு செலவாகும்.

    இந்த அறிவிப்பு மீனவர்க ளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. யாருக்கு எவ்வளவு மானியம் ஆழ்கடலில் பல நாட்கள் தங்கி மீன்பி டிக்கும் விசைப்ப டகுக்கு நாள்தோ றும் 300 லிட்டர் வீதம் ஆண்டுக்கு 40 ஆயிரம் லிட்டர், தினசரி மீன் பிடிக்கும் விசை படகுக்கு நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் வீதம் ஆண்டுக்கு 36 ஆயிரம் லிட்டர் வரை மானியம் பெறலாம். எப்.ஆர்.பி படகுக்கு நாள்தோறும் 20 லிட்டர் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் லிட்டர், ஓ.பி.எம், ஐ.ஐ.பி.எம். பொருத்திய கட்டு மரங்களுக்கு தினசரி 15 லிட்டர்வீதம் ஆண்டுக்கு 4 ஆயிரம் லிட்டர் வரை மானியத்தில் டீசல் பெறலாம்.

    • உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து பிராந்திய தளபதியிடம் விளக்கினார்.
    • மீனவர்களின் பாதுகாப்பிற்கும், மீட்பு நடவடிக்கைக்கும் உதவும் என கிழக்கு பிராந்திய தளபதி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆனந்த் பிரகாஷ் படேலா புதுவைக்கு வந்தார்.

    தொடர்ந்து பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அவர் புதுவையில் உள்ள கடலோர காவல்படை மாவட்ட தலைமையக உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.

    புதுவை மாவட்ட கடலோர காவல்படை கமாண்டர் டி.ஐ.ஜி அன்பரசன், புதுவையில் அமைய உள்ள கடலோர காவல் படையின் விமா னப்பிரிவு தளம் மற்றும் கடலோர கண்காணிப்பு மையம் உட்பட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து பிராந்திய தளபதியிடம் விளக்கினார்.

    தொடர்ந்து மத்திய பொதுப்பணித்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் திட்ட ங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரை யாடினார்.

    புதுவையில் விமான நிலையத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் விமானப்பிரிவு தளம், புதுவை, மத்திய தமிழக கடலோர மீனவர்களின் பாதுகாப்பிற்கும், மீட்பு நடவடிக்கைக்கும் உதவும் என கிழக்கு பிராந்திய தளபதி தெரிவித்தார்.

    ×