என் மலர்
புதுச்சேரி
- புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர்.
புதுச்சேரி:
ஐ.பி.எல் நிர்வாகம் பேன் பார்க் ஒன்றை அமைத்து கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க நாடு முழுவதும் 45 நகரங்களில் பிரம்மாண்ட திரைகள் மூலம் போட்டிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது.
புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சென்னை அணி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மைதானம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பியது. இதனையடுத்து இரவு 8 மணிக்கு நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் அங்கேயே நின்று கூச்சல் போட்டனர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குடியிருப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மின்துறை செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை இ.சி.ஆர். மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 10 மணியிலிருந்து மாலை 2 மணி வரை தெற்கு இ.சி.ஆர், பழனிராஜா உடையார் நகர்,மகாத்மா நகர்,லட்சுமி நகர்,வடக்கு கிருஷ்ணா நகர், சலவை யாளர் நகர்,சேத்திலால் நகர்,மடுவுபேட், மேற்கு கிருஷ்ணா நகர் ,வினோபா நகர் 1 பகுதி,கவிக்குயில் நகர்,முத்துரங்க செட்டி நகர், பிலிஸ் நகர்,சுந்தர மூர்த்தி நகர் ,கொக்கு பார்க், அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்ப டுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இளம் பெண்கள் மாநாட்டில் வலியுறுத்தல்
- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைத்திட வேண்டும்.
புதுச்சேரி:
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இளம்பெண்கள் மாநாடு முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
விழாவுக்கு அகல்யா தலைமை வகித்தார். உமாசங்கரி,மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம் பேசினார்.
அந்தோணி,அமுதா, ஹே மலதா,பெருமாள்,எழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;- பெண்கள் மீதான பாலியல் பிரச்சினைகள் குறித்து புகார் அளித்திட அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைத்திட வேண்டும்.
படித்த இளம் பெண்களை தொழில் முனைவோர் ஆக்கிட பயிற்சி அளித்து பிணையின்றி கடன் உதவி வழங்கிட வேண்டும்.பாலின சமத்துவத்தை வளர்த்தெடுக்க பள்ளி கல்லூரிகளில் பாலியல் கல்வியை வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
முடிவில் கீர்த்தனா நன்றி கூறினார்.
- ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
- புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தூய லூர்து அன்னை தேவாலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 146 -வது ஆண்டுப் பெருவிழா ஏப்ரல் 15-ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நவநாட்களில் மற்றும் திருப்பலிகள், தேர்பவனி நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி நடந்தது. முன்னதாக புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. 6 மணிக்கு சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு மாதாவுக்கு வைரகிரீடம் சூட்டப்பட்டு, ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
இதில் புதுவை, கடலூர், விழுப்புரம், திண்டிவனம், காரைக்கால் பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மாதாவை வழிபட்டனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
- சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை செயல்படுத்த ஒரு சில விதிமுறைகளை தளர்த்தி ஒப்புதல் வழங்க கோரியுள்ளேன்.
புதுச்சேரி:
புதுவை மடுகரை எம்.ஆர்.சுப்புராயக்கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளியின் 70-ம் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.
துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:-
தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. இதற்காகவே சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கொண்டு வந்து தரமான கல்வியை கொடுப்பதன் மூலம் சிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுவர்.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானிடம் புதுவை அரசின் 121 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை செயல்படுத்த ஒரு சில விதிமுறைகளை தளர்த்தி ஒப்புதல் வழங்க கோரியுள்ளேன். நிச்சயம் அதற்கு அனுமதி கிடைக்கும்.
2 முறை மத்திய மந்திரியை சந்தித்து பேசியுள்ளேன். அவரும் ஒப்புதல் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் வளர வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோ ர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- கதிரவன் அஜய்பிரியன், விஜய்பிரியன், சந்திரகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக் குட்பட்ட நல்லூரில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு வெங்க டேசன், கண்ணன் அருள்மணி, கவிபாரதி, ஜெயராமன், திரிசங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்காளன் எம்.எல்.ஏ. நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி மற்றும் குளிர்பா னங்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.
முன்னாள் வார்டு உறுப்பினர் மணி, பலராமன், சிலம்பரசன், மணிகண்டன், தணிகை முத்து, பரமேஸ்வரன், கவுதம், அங்காளன், கதிரவன் அஜய்பிரியன், விஜய்பிரியன், சந்திரகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.
- அரசியல்கட்சிகள் தங்கள் நிர்வாகிகளை தக்க வைப்பதிலும் பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. புதுவையில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பணிகளை தொடங்கியுள்ளன.
புதுவை மக்களிடம் செல்வாக்கை பெற மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், சத்தியாகிரகம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகளை இழுக்கும் வேலையும் நடந்து வருகிறது.
கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற தி.மு.க. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பிரமுகர்கள், அனுதாபிகளை தங்கள் பக்கம் இழுத்துள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஞானசேகரனை தேடிவந்தனர்.
- ஞானசேகரனை கத்தியால் வெட்டி கொலை செய்து புதைத்ததாக கூறினார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அடுத்த அரியாங்குப்பம் பூங்கொடிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 39). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி லூர்துமேரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 29-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஞானசேகரன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து லூர்துமேரி அரியாங்குப்பம் போலீசில் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஞானசேகரனை தேடிவந்தனர்.
ஞானசேகரனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் கடைசியாக பக்கத்து வீட்டை சேர்ந்த வியாபாரி செல்வம் (40) என்பவரிடம் அடிக்கடி பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவர்களது பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது ஞானசேகரனை கத்தியால் வெட்டி கொலை செய்து புதைத்ததாக கூறினார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கொலை செய்யப்பட்ட ஞானசேகரன் மனைவி லூர்துமேரிக்கும், செல்வத்துக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது ஞானசேகரனுக்கு தெரியவந்தது. அவர் 2 பேரையும் கண்டித்தார். அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் கள்ளத்தொடர்பை தொடர்ந்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஞானசேகரனை கொலை செய்ய 2 பேரும் திட்டம் தீட்டினர்.
சம்பவத்தன்று செல்வம், ஞானசேகரன் வீட்டுக்கு சென்று மதுகுடிக்க அழைத்தார். 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இடையார்பாளையம் அலுத்தவேலி காட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர்.
போதை தலைக்கேறியதும் செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானசேகரனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஞானேசகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் ஞானசேகரன் உடலை அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டு 2 பேரும் தப்பி சென்று விட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து செல்வத்தையும், லூர்துமேரியையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள செல்வத்தின் நண்பரை தேடிவருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று ஞானசேகரனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேராசிரியர் ராமதாஸ் வலியுறுத்தல்
- புதுவையில் இன்று பலர் கோடிஸ்வரர்களாக உருவாகி உள்ளனர்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை வம்பாக்கீரப்பாளையம் சன்னியாசித்தோப்பில் பல ஆண்டுகளாக மீனவர்கள் பயன்பாட்டிலும் பராமரிப்பிலும் இருந்து வந்த பரமேஸ்வரி கோவில் திடலை சிலர் திட்டமிட்டு அபகரித்துள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
நீண்ட காலமாக இல்லாமல் திடீரென்று எப்படி 4 பேர் இந்த இடத்திற்கு பத்திரம் பதிந்து திடல் அவர்களுக்கு சொந்தம் என்று கொண்டாட முடியும் என்பதை இந்த அரசுதான் விளக்க வேண்டும்.
புதுவையில் தொடர்ந்து வீடு மற்றும் நிலம் அபகரிக்கும் கும்பல்தான் இந்த காரியத்தை செய்கிறார்கள். இதனை புதுவையின் அதிகார வர்க்கத்தின் துணையும் உதவியும் இல்லாமல் செய்திருக்க முடியாது .
ஏழை மீனவ சமுதாயத்தின் நிலத்தை அபகரித்தால் இதைத் தட்டிக் கேட்க யாரும் வரமாட்டார்கள் என்ற நினைப்பில் இந்த காரியம் நடைபெற்று உள்ளது. புதுவையில் பல்வேறு பகுதிகளில் இருந்த சீமான் செல்வராஜ் செட்டியாரின் சொத்தை அபகரித்து புதுவையில் இன்று பலர் கோடிஸ்வரர்களாக உருவாகி உள்ளனர்.
சுற்றுலாவை வளர்க்கி றோம் என்று மீனவர்கள் பயன்படுத்தும் கடற்கரை சூறையாடப்பட்டு வருகிறது. அரசு இந்த சட்ட விரோத காரியங்களை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வம்பாக்கீரப் பாளை யத்தில் நடந்துள்ள அபகரிப்பு சம்பந்தமாக அரசுத்துறைகள் சரியான நடவடிக்கை எடுக்காது. எனவே இந்த விஷயத்தை புதுவை சி.பி.சி.ஐ.டி விசாரித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க சொல்ல வேண்டும்.
நில அளவைத் துறை மற்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள் நில அபக ரிப்புக்காக தனியாருக்கு பத்திரம் தயார் செய்து கொடுத்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.இந்த இட அவகரிப்பு எம்.எல்.ஏ.க்கள் செய்தி ருக்கிறார்கள் என்பது உண்மையானால் அது வெட்கக்கேடானது.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் புதுவையில் இடம் மற்றும் வீடுகள் அபகரிப்பு தொடர்கதை யாக இல்லாமல் முடிவுக்கு வர அரசில் இருப்பவர்கள் இந்த குற்றத்தை செய்தவர்களை காப்பாற்ற முயன்றால் அவர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.
குற்றம் செய்தவர்களை மக்கள் முன் நிறுத்த வேண்டியது ஒரு நியாயமான அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அன்பழகன் கேள்வி
- வெற்றியை காலில் போட்டு மிதிக்கும் செயலில் தமிழக தி.மு.க அரசு ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில முதல்- அமைச்சர் ஸ்டாலின் கார்ப்பரேட் கம்பெனிகளின் எண்ணத்தை நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
இதை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக எதிர்த்துள்ளார்.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் என்பது 8 மணி நேர வேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமையை வேரோடு பிடுங்கி எரியும் செயலாகும்.
தொழிலாளர் நலனுக்காக பாடுபடும் அத்தனை அரசியல் கட்சிகளும் உறுதியாக எதிர்க்க வேண்டும்.8 மணிநேர வேலை என்பது ஒரு மாபெரும் சரித்திர போராட்டத்தில் தொழிலாளருக்கு கிடைத்த வெற்றியாகும். அந்த வெற்றியை காலில் போட்டு மிதிக்கும் செயலில் தமிழக தி.மு.க அரசு ஈடுபட்டுள்ளது.
இதனை புதுவை அ.தி.மு.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்பதாக பேசிக் கொண்டிருக்கும் புதுவை அரசியல் கட்சியும் இந்த நிகழ்வை கண்டிக்காதது கண்டனத்துக்குரியது.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் இதில் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?
இவ்வாறு அன்பழகள் அறிக்கையில் கூறியுள்ளார்.
- தியாகு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
- மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா கம்பன் கலை அரங்கில் நடந்தது.
விழாவினை ஆல்பா கல்வி நிறுவனங்களின் துணை சேர்மன் தனலட்சுமி பாஷிங் கம், ராஜலட்சுமி, நந்தினி நவீன் தியாகு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக டாக்டர் மகேஸ்வரி நடராஜன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கும், நீட் தேர்வில் முதலிடம் பெற்று பல்வேறு மருத்துவ பிரிவில் இடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தன தியாகு நன்றி கூறினார். தொடர்ந்து ஆல்பா பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
- ஓம்சக்தி சேகர் அழைப்பு
- மாபெரும் முப்பெரும் விழா மாநாட்டை கூட்டி உள்ளார்கள்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தீய சக்தியிடம் இருந்து தொண்டர்களை காக்க எம்.ஜி.ஆரால் உருவான இயக்கமான அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் உச்சபட்ச பதவிக்கு வரலாம் என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கி தொண்டர்களின் இரும்பு கோட்டையாக்கினார்.
ஜெயலலிதா எண்ணங்களை அறவே நீக்கி அ.தி.மு.க. வை அபகரிக்க முயற்சிக்கும் சுயநல கூட்டத்திடம் இருந்து காத்து மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக மாற்ற ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், முதல் -அமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட ஜல்லிக்கட்டு நாயகர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் நிரூபிக்க திருச்சியில் மாபெரும் முப்பெரும் விழா மாநாட்டை கூட்டி உள்ளார்கள்.
அ.தி.மு.க ஆண்டு விழா, எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவை தொண்டர்களால் சிறப்பாக நடத்திட திருச்சியில் ஒன்று கூட அனை வரையும் அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று லட்சக்க ணக்கான ஜெயலலிதா தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து மலைக்கோட்டை மாநகரில் கூட உள்ளனர்.
புதுவை மாநில ஜெயலலிதாவின் உண்மை யான தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு திருச்சி மாநகர் நோக்கி புறப்படுவோம் ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம். என்று அனைவரையும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு ஓம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.






