என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
    X

    ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய காட்சி.

    ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

    • தியாகு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
    • மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா கம்பன் கலை அரங்கில் நடந்தது.

    விழாவினை ஆல்பா கல்வி நிறுவனங்களின் துணை சேர்மன் தனலட்சுமி பாஷிங் கம், ராஜலட்சுமி, நந்தினி நவீன் தியாகு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக டாக்டர் மகேஸ்வரி நடராஜன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    மேலும் இவ்விழாவில் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கும், நீட் தேர்வில் முதலிடம் பெற்று பல்வேறு மருத்துவ பிரிவில் இடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

    ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தன தியாகு நன்றி கூறினார். தொடர்ந்து ஆல்பா பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதனை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

    Next Story
    ×