search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silent"

    • அன்பழகன் கேள்வி
    • வெற்றியை காலில் போட்டு மிதிக்கும் செயலில் தமிழக தி.மு.க அரசு ஈடுபட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில முதல்- அமைச்சர் ஸ்டாலின் கார்ப்பரேட் கம்பெனிகளின் எண்ணத்தை நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

    இதை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக எதிர்த்துள்ளார்.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் என்பது 8 மணி நேர வேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமையை வேரோடு பிடுங்கி எரியும் செயலாகும்.

    தொழிலாளர் நலனுக்காக பாடுபடும் அத்தனை அரசியல் கட்சிகளும் உறுதியாக எதிர்க்க வேண்டும்.8 மணிநேர வேலை என்பது ஒரு மாபெரும் சரித்திர போராட்டத்தில் தொழிலாளருக்கு கிடைத்த வெற்றியாகும். அந்த வெற்றியை காலில் போட்டு மிதிக்கும் செயலில் தமிழக தி.மு.க அரசு ஈடுபட்டுள்ளது.

    இதனை புதுவை அ.தி.மு.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்பதாக பேசிக் கொண்டிருக்கும் புதுவை அரசியல் கட்சியும் இந்த நிகழ்வை கண்டிக்காதது கண்டனத்துக்குரியது.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் இதில் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?

    இவ்வாறு அன்பழகள் அறிக்கையில் கூறியுள்ளார்.

    வேலூர் ஜெயிலில் 21-வது நாளாக முருகன் தொடர்ந்து மவுன விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை கைதி முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இருவரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஜெயில் வாழ்க்கையில் ஆன்மீக பாதைக்கு திரும்பிய முருகன் நீளமான தலைமுடி, தாடியுடன் இருக்கிறார்.

    கடந்த 23-ந்தேதி முதல் முருகன் சிறையில் மவுன விரதம் இருந்து வருகிறார்.

    தொடர்ந்து 21-வது நாளாக இன்றும் மவுன விரதம் இருந்து வருகிறார். கடந்த 5-ந் தேதி நடந்த நளினி முருகன் சந்திப்பின் போது கூட முருகன் காகிதத்தில் எழுதி நளினியிடம் காண்பித்தார்.

    ஜெயிலிலும் தனது தேவைகளை ஜெயில் அலுவலரிடம் காகிதத்தில் எழுதி காண்பித்து வருகிறார். மன அமைதி வேண்டி முருகன் 48 நாட்கள் மவுன விரதம் இருக்க போவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×