என் மலர்
புதுச்சேரி
- விரிவாக்கத்திற்கு 550 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
- அதிகாரிகள் ஆய்வு.
புதுச்சேரி:
புதுவை விமான நிலைய ஆலோசனை குழுவின் கூட்டம் விமான நிலையத்தில் நடந்தது.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, விமான நிலைய இயக்குனர் விஜய்உபாத்யாய், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யாய் பேசியதாவது:-
புதுவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படாததால் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் விமானப் பயணிகள் பெங்களூர், சென்னை விமான நிலையங்களுக்கு செல்கின்றனர். இதனால் வருவாயும் அங்கு செல்கின்றது. புதுவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, கூடுதல் விமானங்களை இயக்கினால், விமான பயணிகளால் பொருளாதாரம் புதுவைக்கு கிடைக்கும். புதுவை விமான நிலையம் சுமார் 176 ஏக்கரில் அமைந்துள்ளது. இதனை விரிவாக்கம் செய்ய இன்னும் 550 ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. நிலத்தை கையகப்படுத்த ரூ.600 கோடியும், அதை மேம்படுத்த ரூ.1000 கோடி வரை நிதியும் தேவைப்படுகின்றது. இதற்கு மாற்றாக புதியதாக 700 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டால் அங்கு விமான நிலையத்தை கொண்டு செல்லலாம். விமான நிலையத்திற்கு அருகிலேயே அனுமதியின்றி உயரமான கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இறந்துபோன பறவை மற்றும் விலங்குகளின் உடல்களை விமான நிலையத்திற்குள் தூக்கி வீசுகின்றனர். இவைகளை தடுக்க வேண்டும். விமான நிலைய பாதுகாப்பிற்கு 51 ஐ.ஆர்.பி போலீசார் வேண்டும். 2 பெண் போலீசாரும் வேண்டும். விமான நிலையத்திற்கு வந்து செல்ல பொது போக்குவரத்து வசதி வேண்டும். புதுவை விமான நிலையத்தில் இருந்து திருப்பதி, சீரடி, கோவா, கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானம் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தால் விமான நிலைய மேம்பாட்டிற்கு நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறலாம். காலாப்பட்டு பல்கலைக் கழகத்திற்குப் பின்னால் 200 ஏக்கர் நிலம் கல்வி துறையிடம் உள்ளது. வேறு எங்கும் இடமில்லை. அங்கு வேண்டுமானால் விமான நிலையத்தை கொண்டுசெல்ல பரிசீலிக்கலாம். இவ்வாறு கல்யாணசுந்தரம் கூறினார்.இறுதியில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
சேதராப்பட்டில் அரசுக்கு சொந்தமான 700 ஏக்கர் நிலத்தில் விமான நிலையத்தை கொண்டு செல்லலாமா? என்று விமான நிலைய அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். புதுவையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்குவதை விட, புதுவையில் இருந்து சீரடிக்கு விமான சேவையை தொடங்கலாம். அதனை புதுவை-பெங்களூர்-சீரடி எனத் தொடங்கினால் நிச்சயம் அதிக பயணிகள் வருவார்கள். இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.
- கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்றவர்கள் மழையில் நனைந்த படி சென்றனர்.
- வெயிலின் காரணமாக அவசர அவசரமாக ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் மார்ச் மாத இறுதியிலேயே வெயில் தாக்கம் கடுமையாக இருந்தது. மேலும் கொரோனா தாக்கமும் லேசாக அதிகரித்ததால் மார்ச் மாதம் 11 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வெயிலின் காரணமாக அவசர அவசரமாக ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 19-ந் தேதி முதல் கோடை விடுமுறை பள்ளிகளில் தொடங்கியது.மேலும் 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் வெயில் தாக்கத்தால் நோய்வாய் பட்டவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் வெளியே வர வேண்டாம் என உத்தரவு அறிவித்தது. வெயில் தாக்கத்தால் புதுவை நகர பகுதியில் பகல் நேரத்தில் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் புதுவையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.காலை 7 மணிக்கு இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மழையின் வேகம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து லேசான சாரல் மழை பெய்து வருகிறது.வெயில் தாக்கம் மறைந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. புதுவை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை கடற்கரை சாலையில் நடை பயிற்சிக்கு வந்தவர்கள் மழையில் நனைந்த படி கோடை மழையை ரசித்தனர்.
- சங்கராபரணி புஷ்கரணி விழா
- பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது.
ஆதி புஷ்கரணி விழாவின் 3-ம் நாளான இன்று காலை 9 மணிக்கு வராஹி சிறப்பு யாகம், வேத பாராயணம், சைவாகம பாராயணம், பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது.
இதில் திரான பக்தர்கள் புனித நீராடி பங்கேற்றனர். மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு கங்கா ஆரத்தியும், 6.30 மணிக்கு மங்கள இசையுடன், வாண வேடிக்கை நடத்தப் படுகிறுது. இரவு 7.30 முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
புஷ்கரணி விழாவில் இன்று மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திர பக்தர்களுக்காக சிறப்பு யாகம் நடந்தது. இந்த நட்சத்திரத்தை கொண்ட பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் புதுவையில் இருந்து திருக்காஞ்சிக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
- கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ பங்கேற்பு
- மேலாளருக்கு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களில் கையெழுத்திட்டார்.
புதுச்சேரி:
காலாப்பட்டு தொகுதி யில் உள்ள காலாப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் வங்கியின் புதிய நிர்வாக குழு பதவி ஏற்பு விழாவில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.
காலப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் வங்கியின் புதிய நிர்வாக குழு அமைக்க கூட்டுறவு துறை இயக்குனர் யஸ்வந்தையா உத்தரவின் பேரில் புதிய நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டது.
அதன்படி காலாப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் வங்கியின் தலைவராக தங்கவேல் என்ற பெரி யண்ணன், இயக்குனர்களாக கண்ணன் என்கிற குண சேகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப் பட்டனர்.
பெரிய காலாப்பட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் வங்கியில் நடந்த பதவி ஏற்பு விழாவில் வங்கி மேலாளர் பூபாலன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய நிர்வாக குழுவினருக்கு பதவியேற்பு செய்து வைத்தார்.
கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக பொறுப்பேற்ற தங்கவேல் என்கிற பெரியண்ணன் 3 தீர்மானங்களில் கையெழுத்திட்டார்.
அதன்படி, புதிய நிர்வாகி கள் பதவி யேற்பு, காலாப் பட்டு கூட்டுறவு சங்க கடன் வங்கியில் காசோலையில் கையெழுத்திட வங்கி மேலாளர் மற்றும் தலைவ ருக்கு அதிகாரம் வழங்குதல், கூட்டுறவு சங்கத்தில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு ஆகியவற்றை வரவு செலவு செய்தல், கூட்டுறவு வங்கி யின் மூலம் தனியார் வங்கி யில் உள்ள வரவு செலவு ஆகியவற்றை பராமரிப்ப தற்கு தலைவர் மற்றும் மேலாளருக்கு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களில் கையெழுத்திட்டார்.
நிகழ்ச்சியில் காலாப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் காலாப்பட்டு, கருவடிக்குப்பம், ஆலங் குப்பம், முத்தியால்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கை யாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உதவி மேலாளர் தங்கராசு நன்றி கூறினார்.
- அரவிந்தர் ஆசிரமத்தில் ஆசிரமவாசிகளின் சிறப்பு கூட்டு தியானம் நடந்தது.
- குழந்தையாக பிறந்தார் 1914-ம் ஆண்டு ஆர்யா பத்திரிகையில் பணிபுரிய புதுவையில் அரவிந்தரை சந்தித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் புகழ்பெற்ற அரவிந்தர் அன்னை ஆசிரமம் உள்ளது. பக்தர்களால் அன்னை என அழைக்கப்படும் மிரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி பாரீசில், துருக்கியை சேர்ந்த எகிப்து யூத தம் பதிக்கு 2-வது குழந்தையாக பிறந்தார் 1914-ம் ஆண்டு ஆர்யா பத்திரிகையில் பணிபுரிய புதுவையில் அரவிந்தரை சந்தித்தார்.
பின் முதலாம் உலகப்போர் காரணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்று சிறிதுகாலம் வாழ்ந்தார். 1920-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி புதுவைக்கு இறுதியாக வந்து அரவிந்தருடன் ஆன்மீக பணியில் ஈடுபட்டார்.
அன்னை வாழ்ந்த காலத்தில் அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள தனது அறை அருகில் உள்ள பால்கனியில் நாள்தோறும் 6 மணிக்கு நின்று பக்தர்களை ஆசீர்வதித்து தனது தொடங்குவது வழக்கம். அன்னை இறுதியாக புதுவைக்கு வந்து நிரந்தரமாக தங்கிய தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் ஆசிரமவாசிகளின் சிறப்பு கூட்டு தியானம் நடந்தது. தொடர்ந்து அரவிந்தர் அறை காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. உள்ளூர், வெளிமாநில பக்தர்கள் அரவிந்தர் அறையை தரிசனம் செய்தனர்.
- 2000 காட்டன் துணி பைகள் பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மணிரத்தினம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதுச்சேரி:
பிளாஸ்டிக் பயன்பா ட்டை தடுக்க வலியுறுத்தி துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி அனைத்து சமூக பேரமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்புகளின் சார்பில் சிவாஜி சிலை அருகில் மீனாட்சி கணேஷ் பொது சேவை இயக்கம் தயாரித்த 2000 காட்டன் துணி பைகள் பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் கணபதி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்து சமூக பேரமைப்பின் கௌரவ தலைவர் புதுவை குமார் தலைவர் இளங்கோ ,செயலாளர் சசிகுமார் மற்றும் வில்லியனூர் ராணி, அறம் நிஷா செய்திருந்தனர்.
உடன் காலாபட்டு தொகுதி தலைவர் மணிகண்டன் , வடக்கு ஒன்றியம் முன்னாள் செயலாளர் பாரதிராஜா , சமூக சேவகர் உடையார்பாளையம் மணிரத்தினம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- பைக்கில் புதுவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
கடலூர் மஞ்சக்கு ப்பத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 24) இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு தற்சமயம் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான சுந்தராஜுலு (வயது 25) ஆகியோர் பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அரியாங்குப்பம் புதிய பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பேரிகேட் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஹரிகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுந்தராஜுலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஹரிஹரன் கண்களை அவரது பெற்றோர் தானம் செய்தனர்.
விபத்து சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையில் செல்பவர்களை, ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்துள்ளனர்.
- பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் ஆலன் சாலை பகுதியில், 2பேர் குடித்துவிட்டு பொது மக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நெட்டப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பார்த்த போது, அப்பகுதியில் 2 வாலிபர்கள் குடித்துவிட்டு சாலையில் செல்பவர்களை, ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்துள்ளனர். போலீ சார் இருவரையும் பிடித்து விசாரித்த போது, தமிழக பகுதியான பள்ளி புதுப்பட்டு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த முருகையன் மகன் மாதவன் வயது 25, அன்பழகன் மகன் தீர்த்தமலை வயது 22 என்பது தெரியவந்துள்ளது.
பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதால், அவர்கள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- சில நாட்களாக தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்துள்ளார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வினோபா நகரை சேர்ந்தவர் பெரிய சாமி. இவரது மனைவி பிரமிளா (வயது45). இவர்க ளுக்கு நவீன் ( 24), பிரவின் (22) என்ற மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மூத்த மகன் நவின் பெரிய சாமியுடனும், இளையமகன் பிரவின் பிரமிளாவுடனும் வசித்து வருகின்றனர்.
கொசக்கடையில் உள்ள ஒரு மெஸ்சில் வேலை செய்யும் பிரமிளா மகனுடன் மரியாள் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இதனிடையே பிரவின் 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன் றுள்ளார். இதனால் அவருக்கு நரம்பு பாதிக்கப் பட்டுள்ளது. இதற்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மேற்கொண்டு படிக்காமல் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
சில நாட்களாக தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் பயந்து போன பிரமிளா மகனை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரமிளா வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது பிரவின் வீட்டில் தூக்கு போட்டு பிணமாக தொங்கியுள்ளார்.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சிறப்பு முகாமை நடத்துகிறது.
- பொம்மைகளை வீட்டில் அலங்கார பொருட்களாகவும் பரிசு பொருட்களாகவும் வழங்க இருப்பதாக மாணவியர் கூறினர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 20-ந்தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களை பயனுள்ளதாக்கி கொள்ள புதுவை அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சிறப்பு முகாமை நடத்துகிறது.
இந்திரா நகரில் உள்ள இந்திரா காந்தி அரசு மேனிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் பயனற்ற காகிதங்களை கலை நயமிக்க பொம்மைகளாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
அய்யனார், பழங்கால மக்களின் அலங்காரம், போர் வீரர்கள்,தேசத் தலைவர்கள், சாமிகள் என பல விதமான பொம்மை செய்ய மாணவர்களுக்கு நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் பயிற்சி அளித்தார். ஆண்டுதோறும் கோடை காலத்தில் சிறப்பு முகாம்களை நடத்தி 7 ஆயிரம் மாணவர்களுக்கு இவர் பயிற்சி அளித்து ள்ளார்.
ஒரே நாளில் பெற்ற பயிற்சியில் விதவிதமான பொம்மைகளை உருவாக்க பயிற்சி பெற்றதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த பொம்மைகளை வீட்டில் அலங்கார பொருட்களாகவும் பரிசு பொருட்களாகவும் வழங்க இருப்பதாக மாணவியர் கூறினர்.
- வைத்திலிங்கம் எம்.பி தொடங்கி வைத்தார்.
- பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர் மணவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சி முதலியார்பேட்டை வேல்ராம் பட்டில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையேற்று வைத்திலிங்கம் எம்.பி பரிந்துரையின் பேரில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை நடந்தது. வைத்திலிங்கம் எம்.பி. முதலியார்பேட்டை தொகுதி சம்பத் எம்.எல்.ஏ ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், கல்வித் துறை துணை இயக்குனர் சிவராமரெட்டி, துணை ஆய்வாளர் குமார், உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர் மணவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- புதுவை காங்கிரஸ் வலியுறுத்தல்
- மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறை வேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அரசியல் சாசனத்தின் சட்டப்படி அளிக்கப்படுகின்ற, உதவிகள், உரிமைகள், பாதுகாப்புகள், மற்றும் இட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ள அட்டவணை இனத்தில் இருந்த தலித் கிறிஸ்தவ மக்களுக்கும் கிடைக்க வழி செய்யும் ஒரு அரசியல் திருத்த சட்டத்தை நிறைவேற்றி தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
இதேபோல புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அனுப்ப வேண்டும். தலித் அல்லது ஆதிதிராவிட அட்டவணை ஜாதியில் இருந்த மக்கள், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்பும் அவர்களது சமூக மற்றும் பொருளாதார நிலை அப்படியே உள்ளது. இந்து மதத்தில் இருந்து மாறிய கிறிஸ்தவ மக்களையும் தீண்டாமை எண்ணத்தோடுதான் பார்க்கின்றனர். கிறிஸ்தவ மதத்தில் தீண்டாமை இல்லை என்பதை காரணம் காண்பி த்து அவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படக்கூடாது. இட ஒதுக்கீடுகளே இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பொருளாதார அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கொடுக்க முன்வந்தால், இந்த தலித் கிறிஸ்தவர்கள் நிச்சயமாக அதிக ஒதுக்கீடு பெறுவார்கள்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித் ஆதிதிராவிட மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைகளுக்கு ஏற்ப, பூர்வீக இந்தியர்களா கிய இவர்களுக்கும் உதவு வதுதான் மனித நேயமாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






