என் மலர்
புதுச்சேரி

புதிய வகுப்பறை கட்டும் பணியை சம்பத் எம்.எல்.ஏ முன்னிலையில் வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
அரசு ஆரம்ப பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டும் பணி
- வைத்திலிங்கம் எம்.பி தொடங்கி வைத்தார்.
- பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர் மணவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சி முதலியார்பேட்டை வேல்ராம் பட்டில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையேற்று வைத்திலிங்கம் எம்.பி பரிந்துரையின் பேரில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை நடந்தது. வைத்திலிங்கம் எம்.பி. முதலியார்பேட்டை தொகுதி சம்பத் எம்.எல்.ஏ ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், கல்வித் துறை துணை இயக்குனர் சிவராமரெட்டி, துணை ஆய்வாளர் குமார், உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒப்பந்ததாரர் மணவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






