என் மலர்
புதுச்சேரி

லூர்து அன்னை ஆலய தேர் பவனி நடந்த காட்சி.
வில்லியனூர் லூர்து அன்னை தேவாலயத்தில் தேர் பவனி
- ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
- புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தூய லூர்து அன்னை தேவாலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 146 -வது ஆண்டுப் பெருவிழா ஏப்ரல் 15-ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நவநாட்களில் மற்றும் திருப்பலிகள், தேர்பவனி நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி நடந்தது. முன்னதாக புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. 6 மணிக்கு சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு மாதாவுக்கு வைரகிரீடம் சூட்டப்பட்டு, ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
இதில் புதுவை, கடலூர், விழுப்புரம், திண்டிவனம், காரைக்கால் பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மாதாவை வழிபட்டனர்.






