search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கெங்கை அம்மன் கோவில்  கும்பாபிஷேகம்
    X

    பெரியகோட்டகுப்பம் கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி.

    கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
    • சக்கரபாணி, ஏகாம்பரம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    பெரியக்கோட்டகுப்பம் கெங்கை அம்மன் , அங்காள பரமேஸ்வரி , முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    அம்மனுக்கு 2-ம் கால பூஜையாக காலை 6 மணி அளவில் விசேஷ ஹோமம் மற்றும் கலச புறப்பாடு அலங்கரித்து ஆலய கலச கோபுரத்தில் காலை 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் கண்ணன், அருணாச்சலம் தலைமையில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோட்டகுப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ் ஜெயமூர்த்தி, ஆணையர் மங்கையர்கரசன் முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி யில் தொடர்ந்து சாமிக்கு சந்தன அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை கடந்தது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பாலமுருகன், முத்துக்கு மரன், நாகமுத்து, சக்கரபாணி, ஏகாம்பரம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×