என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுருக்கெழுத்தர் பணிக்கு 30-ந் தேதி போட்டி தேர்வு
    X

    கோப்பு படம்.

    சுருக்கெழுத்தர் பணிக்கு 30-ந் தேதி போட்டி தேர்வு

    • அனுமதி சீட்டை 28-ந் தேதி வரை தலைமை செயலகத்தில் பெறலாம்.
    • தேர்வரின் புகைப்பட அடையாள அட்டைகளின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சுருக்கெழுத்தர் நிலை-2 பதவியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிட மிருந்து விண்ணப்பங்களை பல்வேறு தருணங்களில் பெற்றுள்ளது. இவ்வாறு பெற்ற விண்ணப்பங்களை பரிசீலித்த பின் இத்துறை யானது, சுருக்கெழுத்தர் போட்டி தேர்வை வருகிற 30-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளது.

    தேர்வுக்கான அனுமதி சீட்டை தகுதி வாய்ந்த தேர்வர்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கடந்த 5-ந் தேதி வெளியிட்ட அறிவிக்கை மூலம் அறிவு றுத்தியது.

    பெரும்பாலான தேர்வர்கள் போட்டி தேர்வுக்கான அனுமதி சீட்டை பெற்ற போதிலும், சிலர் மட்டும் இன்னும் அனுமதி சீட்டை பெறவில்லை என்று இத்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதுவரை அனுமதி சீட்டை பெறாத தேர்வர்கள், அதனை புதுவை தலைமை செயலகத்தில் உள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் தேர்வு பிரிவில் வருகிற 28-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5மணி வரை நேரில் வந்து அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார், வாக்காளர், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி பெற்றுக் கொள்ளலாம்.

    அனுமதி சீட்டை நேரில் பெற இயலாதவர்கள், அதனை தங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் மூலம் பெற்று கொள்ளலாம். அவ்வாறு வருபவர் தேர்வர் கொடுத்த அங்கீகார கடிதம், தன்னு டைய மற்றும் தேர்வரின் புகைப்பட அடையாள அட்டைகளின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×