என் மலர்
புதுச்சேரி

123 பேருக்கு ரூ. 1.92 கோடியில் வீடுகட்ட தவணை தொகையை லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ வழங்கினார்
123 பேருக்கு ரூ. 1.92 கோடியில் வீடுகட்ட தவணை தொகை
- லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாதாந்திர ஓய்வூதி யம் பெறும் அடையாள அட்டை 10 பேருக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி, எம்.எல்.ஏ அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் புதுவை அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் 93 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 32 லட்சத்து 70 ஆயிரத்திற்கான பணிஆணை வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வீடு கட்டும் மானியம். 30 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சத்திற்கான பணி ஆணை வழங்க ப்பட்டது. தொடர்ந்து சமூக நலத்துறை மூலம் மாற்றுதிறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதி யம் பெறும் அடையாள அட்டை 10 பேருக்கு வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1கோடியே 92 லட்சம் ஆகும்
இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரி சவுந்த ர்ராஜன், உதவி பொறி யாளர் சுதர்சன் தொகுதி என். ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






