என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதுகலை பட்டபடிப்பிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 

    முதுகலை பட்டபடிப்பிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.
    • 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் முதுகலை மேலாண்மைதுறை மற்றும் கணினி பயன்பாட்டியியல் இணைந்து நடத்திய இளங்கலை மாணவர்க ளுக்கான முதுகலை பட்ட படிப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் கான்குயர் 23 என்ற தலைப்பில் நடைபெற்றது.

    கருத்தரங்கில் 30-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலிருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், புட் கிங் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சரத்பாபு, ஏழுமலை, ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாரயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கல்லூரியின் இயக்குநர் செந்தில் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    விழாவில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை முதுகலை மேலாண்மைத்துறையின்

    துறைத்தலைவர் மதன் செய்திருந்தார்.நிகழ்ச்சிமுடிவில் கணினி பயன்பாட்டியலின் துறைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    Next Story
    ×