என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New railway"

    • தற்போதுள்ள ரயில் பாதை, விழுப்புரம் வழியாக செல்ல வேண்டியுள்ளது.
    • அடுத்த சில மாதங்களில் தயாரித்து, ரயில்வேயிடம் ஒப்படைக்க உள்ளோம்.

    புதுச்சேரி:

    புதிய ரெயில் பாதை அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வு பணிகள் துவங்கி உள்ளன. இந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் தொகை, தினசரி பயணியர் எண்ணிக்கை, தற்போதுள்ள போக்கு வரத்து இணைப்பு வசதிகள், வழித்தட விவரங்கள் உள்ளிட்டவை, ஆய்வு செய்யப்படுகின்றன.

    இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    திண்டிவனம்- புதுவை யிடையே, தற்போதுள்ள ரயில் பாதை, விழுப்புரம் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதன் மொத்த துாரம் 80 கி.மீட்டர், இந்நிலையில், திண்டிவ னத்தில் இருந்து விழுப்புரம் செல்லாமல், நேரடியாக புதுவைக்கு ரயில் பாதை அமைக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இத ற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அறிக்கை அனுப்ப உத்தரவிட ப்பட்டுள்ளது.

    இந்த பாதை, 50 கி.மீ. துார இடைவௌியில் தான் இருக்கும். வழித்தடங்கள், பயணியர் எண்ணிக்கை, ரயில் நிலைய அமைவிட ங்கள் உள்ளிட்ட விபரங்கள் குறித்த அறிக்கையை அடுத்த சில மாதங்களில் தயாரித்து, ரயில்வேயிடம் ஒப்படைக்க உள்ளோம். இதையடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் மேற்கொ ள்ளப்படும். இந்த பாதை பணிகளை, மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்து வதா என்பது குறித்து, பின்னர் முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×