என் மலர்
புதுச்சேரி

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியையொட்டி பா.ஜனதா பிரமுகரும், ஜம் ஜம் அறக்கட்டளை நிர்வாகியுமான முகமது யூனுஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இப்தார் நோன்பு திறப்பு
- முகமது யூனுஸ்1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
- சுல்தான் பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதி பா.ஜனதா சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தலின் பேரில் வில்லியனூர் பா.ஜனதா பிரமுகரும், ஜம் ஜம் அறக்கட்டளை நிர்வாகியுமான முகமது யூனுஸ் தலைமையில் சுல்தான் பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை யொட்டி சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு வீடு வீடாக சென்று அமைச்சர் நமச்சி வாயம் படம் அச்சடிக்க ப்பட்ட டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுல்தான்பேட்டை ஜம்ஜம் காய்கறிமண்டி எதிரில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் படம் அச்சடிக்கப்பட்ட டோக்கன் வைத்திருந்த சுமார்1000 பேருக்கு இலவச கைலி ,சேலை, ஜமாத்தார்கள் ,முகமது யூனுஸ் நண்பர்கள் மற்றும் ஆதரவா ளர்கள் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.






