என் மலர்
புதுச்சேரி

புதுவை மாநிலம் அமைச்சூர் லத்தி சங்கத்தின் தலைவர் கராத்தே சுந்தர்ராஜன் வீரர்களை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வழி அனுப்பினார்.
புதுவையில் இருந்து போபால் செல்லும் மாணவர்களுக்கு வழி அனுப்பு விழா
- கராத்தே சுந்தர்ராஜன் வீரர்களை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வழி அனுப்பினார்.
- பொதுச்செயலாளர் ரகுமான் சேட்டு அவர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் அமைச்சூர் லத்தி சங்கம் சார்பில் மத்திய பிரதேஷ் போபாலில் வருகின்ற ஏப்ரல் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 2-வது அகில இந்திய அளவிலான போட்டிக்கு புதுவையில் இருந்து பல்வேறு பிரிவுகளில் 70 மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
இவர்களை வழி அனுப்பும் விழா புதுவை ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளரும் புதுவை மாநில அமைச்சூர் லத்தி சங்கத்தின் தலைவருமான கராத்தே சுந்தர்ராஜன் வீரர்களை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வழி அனுப்பினார்.
இவ்விழாவில் லத்தி அசோசியேஷன் இணைச்செயலாளர் அசாருதீன், ரியாஸ் மற்றும் பயிற்சியாளர் குமார பாண்டியன் , இத்தியாஸ் , அப்துல் கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் புதுவை மாநில அமைச்சூர் லத்தி சங்கம் பொதுச்செயலாளர் ரகுமான் சேட்டு அவர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.






