என் மலர்
நீங்கள் தேடியது "spoil the culture"
- இந்தியகம்யூனிஸ்டு தீர்மானம்
- காரைக்கால் துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில குழு கூட்டம் முதலியா ர்பே ட்டை கட்சி அலுவலகத்தில் தேவசகாயம் தலைமையில் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் நாராயணா, மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில துணை செயலாளர் சேது செல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ நாரா கலைநாதன், பொருளாளர் சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, அமுதா, மதி, கோவிந்தசாமி, மாநில குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெருகி வரும் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுவையின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் புதிய மதுபான கடைகள் திறப்பதற்கான அனுமதியை கைவிட வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் நிவாரணம் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களின்போது தொடர்ந்த வழக்குகளை வாபஸ்பெற வேண்டும். காரைக்கால் துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி காரைக்காலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட கூட்டத்தில் பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






