என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நகர சாலைகளை அலங்கரிக்கும் கொன்றை மஞ்சள் மலர்கள்
    X

    புதுவை சாலையில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்.

    நகர சாலைகளை அலங்கரிக்கும் கொன்றை மஞ்சள் மலர்கள்

    • மரங்களில் இருந்து மரங்கள் பூத்து குலுங்குகிறது.
    • பாரதி பூங்கா ஆகிய பகுதிகளில் கொன்றை மரங்கள் அதிகளவில் உள்ளது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆட்சிக்கால த்தில் நிர்மாணிக்க ப்பட்ட புல்வார் என அழைக்கப்படும் புதுவை நகர பகுதியில் அதிகளவில் மரங்கள் வைத்திருந்தனர்.

    பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றாலும், புதுவை மக்கள் தொடரும் ஒரு சில பழக்கங்களில் மரங்கள் வளர்ப்பதும், பராமரிப்பதும் இருந்து வருகிறது. இதனால் நகர பகுதிகளில் பல சாலைகளில் வீடுகளுக்குள்ளும், வீடுகளுக்கு வெளியிலும் மரங்கள் இருப்பதை பார்க்கலாம்.

    சில சாலைகள் வெயில் தரையில் படாமல் நிழலாக காட்சியளிக்கும். கடற்கரை சாலையை ஒட்டியுள்ள சாலைகள், பாரதி பூங்கா ஆகிய பகுதிகளில் கொன்றை மரங்கள் அதிகளவில் உள்ளது.

    தற்போது இந்த மரங்களில் அதிகளவில் மஞ்சள் பூக்கள் பூத்து குலுங்குகிறது. பூக்கள் உதிர்ந்து சாலை முழுவதும் மஞ்சள் மலர் விரிப்பு போலவும் காட்சியளிக்கிறது.

    புல்வார் பகுதியில் லபோர்தனே வீதி, லப்போர்த் வீதி, காமாட்சி யம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட சாலைகளில் இருபுறங்களிலும் கொன்றை மரங்களில்

    இருந்து மரங்கள் பூத்து குலுங்குகிறது. இது புதுவைக்கு வந்தள்ள சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்கள் சாலைகளில் நின்று போட்டோ எடுத்து செல்கின்றனர்.

    Next Story
    ×