search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student attack"

    • கல்லூரி மாணவர் தனது ஆசைக்காக செக்ஸ் விருந்துக்கு அழகிய பெண் வேண்டுமென கேட்டுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பயன்படுத்திய நபரை பிடித்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தை சேர்ந்தவர் எம்.எஸ்.சி. படித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் (வயது23). இவர் தனது செல்போன் காணாமல் போய்விட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் கீர்த்தி இது தொடர்பாக விசாரணை நடத்தி மாணவனின் செல்போனை பயன்படுத்திய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் செல்போன் எவ்வாறு காணாமல் போனது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. எம்.எஸ்.சி. படித்து வரும் மாணவர் சமூக வலைதள மூலம் பலருக்கு நண்பர் ஆகி உள்ளார். லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரியில் படித்து வரும் வில்லியனூர் ஜி.என்.பாளையத்தைச் சேர்ந்த சஞ்சய்குமாருக்கு (22) பேஸ்புக் மூலம் நண்பர் ஆகி உள்ளார். ஒரு நாள் கல்லூரி மாணவரும், சஞ்சய் குமாரும் சாட் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது கல்லூரி மாணவர் தனது ஆசைக்காக செக்ஸ் விருந்துக்கு அழகிய பெண் வேண்டுமென கேட்டுள்ளார். சஞ்சய் குமாரும் பெண்ணை அழைத்து வருவதாக கூறி திருக்காஞ்சி ரோடு ஒதியம்பட்டு அருகே உள்ள ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு கல்லூரி மாணவரை, சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர் பாலா என்ற சரவணன் (23) இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.

    அவரிடம் இருந்து ரூ. 8500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானாமாகிவிடும் என்று கருதிய கல்லூரி மாணவர் செல்போன் மட்டும் கிடைத்தால் போதும் என சைபர் கிரைம் போலீசில் செல்போன் தொலைந்து விட்டதாக புகார் அளித்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பயன்படுத்திய நபரை பிடித்தனர். அப்போது சஞ்சய்குமாரும், பாலா என்ற சரவணனும் ஓ.எல்.எக்ஸ்-இல் செல்போனை விற்பனை செய்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு விசாரணை நடத்தி சஞ்சய்குமார், பாலா 2 பேரையும் கைது செய்தனர்.

    காஞ்சிபுரத்தில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் ஆதரவாளர்களான தினேஷ் ஒரு கோஷ்டி ஆகவும் தணிகா ஒரு கோஷ்டி ஆகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக எம்.சுதாகர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தார். பல ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ரவுடிகளுக்கிடையேயான மோதலில் காஞ்சிபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரின் வீட்டுக்கு சென்று நேற்று இரவு மர்ம கும்பல் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டனர்.

    இதனை தடுக்க முயன்ற பிரபுவின் மகன்கள் கமலேஷ், ஜெகன்நாதன் ஆகிய 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்களில் கமலேஷ் கல்லூரி மாணவர் ஆவார். அவருக்கு தலையிலும், இடது கையிலும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரவுடி கும்பல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை நொறுக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். பலத்த வெட்டு காயம் அடைந்த கமலேசும், ஜெகன்நாதனும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் அதேபகுதி சாலை தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கும்பல் கடையின் முன்பகுதியை அடித்து நொறுக்கி விட்டு பொருட்களை சேதப்படுத்தி தப்பினர்.

    சிறுவாக்கம் பகுதியில் ஏரிக்கரை அருகே மீன் ஏலம் விடுவதில் ஏற்பட்ட மோதலில் ராஜமன்னார் மற்றும் வெங்கடேசன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதில் ராஜமன்னார் ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த 3 சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டதாக தெரிகிறது. ரவுடிகளை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×