search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாரிசுதாரர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும்
    X

    அரியாங்குப்பத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா பேசிய போது எடுத்த படம்.

    வாரிசுதாரர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும்

    • குறைகேட்பு கூட்டத்தில் போலீசார் வலியுறுத்தல்.
    • பற்றாக்குறைவாக உள்ள போலீசாரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா கலந்து கொண்டு அரியாங்குப்பம், தவளக்குப்பம் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்.

    இந்தக் கூட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தற்கொலை, குற்ற சம்பவங்கள், விபத்தில் சிக்குவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தை போலபுதுவையிலும் வாரிசுதாரர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதால் தங்கள் குடும்பத்தை சரிவர கவனித்துக் கொள்ள முடியாமல் போகிறது. எனவே வார விடுமுறை அளிக்க வேண்டும். குரூப் இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை தொடங்க வேண்டும். குற்றத்தை குறைக்கும் வகையில் தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு நேரத்தில் மின்தடையால் பணிகள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையத்திற்கு என இன்வெர்ட்டர், ஜெராக்ஸ் மிஷின் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்கள் தொகை அதிகரிப்பாலும் குற்றச்சம்பவங்கள் நூதன முறையில் நடந்து வருவதால் பற்றாக்குறைவாக உள்ள போலீசாரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தெற்கு பகுதிக்கென தடுப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கணேசன், இனியவன்,சிவஜான்சன் கென்னடி, சப்- இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், திருமுருகன், போக்குவரத்து போலீஸ் பாஸ்கரன் மற்றும் போலீசார் இருந்தனர்.

    Next Story
    ×