என் மலர்
நீங்கள் தேடியது "livelihood certificate"
- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- 60 வயதை கடந்த முதியவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு கருவூல அலுவலகங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினர் 2023-ம் ஆண்டுக்கான வாழ்வாதார உறுதி சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலுவலத்திற்கு நேரில் வந்தோ, அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அளித்த சான்றிதழ் மூலமாகவே, இணையதளம், தபால் அலுவலக சேவை மூலமாகவே சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என கருவூலகத்துறை இயக்குனர் கெடு விதித்துள்ளார்.
சான்றிதழ் சமர்பிக்க தவறினால் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.புதுவையில் பல ஆயிரக்க ணக்கானவர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதில் 60 வயதை கடந்த முதியவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
குறிப்பாக முத்தி யால்பேட்டை தொகுதியில் மட்டும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் இந்த ஓய்வூதியத்தை பெறுகின்றனர். புதுவையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது.முதியோர், குழந்தைகள் வெயில் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என அரசின் சுகாதாரத்துறையே அறிவிப்பு செய்துள்ளது.
இந்த சூழலில் வாழ்வாதார சான்றிதழ் சமர்பிக்க முதியவர்களை கடுமையான வெயிலில் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கடும் வெயிலில் கருவூலகத்துறை அலுவலகத்திற்கு நேரில் முதியவர்கள் வந்து செல்ல முடியாது. பிற வழிகளில் சான்றிதழ் பெறவும் முதியோர் அலைக்கழிக்கப்படுவர்.
எனவே அரசின் அங்கன்வாடி ஊழியர்கள், அல்லது பிற அரசு பணியாளர்கள் மூலம் அந்தந்த பகுதியில் ஓய்வூதியம் பெறுவோரின் வீட்டுக்கே சென்று முதியோர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்த கணக்கெ டுப்பின்படி சான்றிதழை ஏற்று ஓய்வூதி யதாரர்க ளுக்கும், ஓய்வூதியதா ரர்களின் குடும்பத்திற்கும் ஓய்வூதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.






