என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருச்சி மாநாடு தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்
    X

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    திருச்சி மாநாடு தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்

    • ஓம்சக்தி சேகர் உறுதி
    • இதில் நடராஜன், கோவிந்தராஜ்,நாகராஜ், இளம்வழுதி, இளங்கோ, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    மாநாடு குறித்து புதுவை மாநில ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோ சனை கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்.சக்திசேகர் தலைமையில் லெனின் வீதி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருச்சி மாநாட்டில் புதுவை மாநிலம் சார்பில் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்ற பட்டது.கூட்டத்தில் ஓம்சக்தி சேகர் பேசியதாவது:-

    ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். மாநாட்டிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் கரம் மீண்டும் வலுப்படும். அ.தி.மு.க.வை ஆக்கிரமிக்க நினைக்கும் சுயநல சக்திகளின் எண்ணம் தவிடு பொடியாகும். தமிழக அரசியலில் திருச்சி மாநாடு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு ஓம்சக்தி சேகர் பேசினார்.

    கூட்டத்தில் மாசிலா குப்புசாமி, மகேஸ்வரி,சதாசிவம்,செல்வராஜ்,விஜயலட்சுமி,கோவிந்தம்மாள்,முருகன்,வெரோனிகா,சேகர், ராதாகிருஷ்ணன், அப்பாவு, வெங்கடேசன்,நாக லோகநாதன், சுந்தரமூர்த்தி, அய்யப்பன், கலியபெருமாள், புஷ்பராஜ், வினோபா நகர் சுப்பிரமணி, நடராஜன், கோவிந்தராஜ்,நாகராஜ், இளம்வழுதி, இளங்கோ, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×