என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏழை, எளிய மக்களுக்கு இலவச மளிகை பொருட்கள்
    X

    ஏழை, எளிய மக்களுக்கு இலவச மளிகை பொருட்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    ஏழை, எளிய மக்களுக்கு இலவச மளிகை பொருட்கள்

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • இதில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

    புதுச்சேரி:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெரிய பள்ளியில் சுமார் 600-க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச புடவை,கயிலி மற்றும் மளிகை பொருட்களை புதுவை மாநில தி.மு.க துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில், பெரிய பள்ளி வார்டில் ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான ஏழை எளிய மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

    கலந்து கொண்ட அனைவருக்கும் பொருட்களை வழங்கி ரமலான் வாழ்த்துக்களை கூறினர். தொகுதி செயலாளர் சக்திவேல், துணை தொகுதி செயலாளர் ராஜி மற்றும் நாசர், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி , தி.மு.க. இளைஞர்அணி முஹம்மத் இர்பான், ஜாவித், அனஸ், அஜ்மல், ரஹ்மான், இர்பான், உமர், விஷ்வா மாலிக், நவீன் உடன் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×